- 1

கட்டிகள் பழுத்து உடைய…!

1238 0

கட்டிகள் பழுத்து உடைய…!

வெயில் காலத்தில் உடலிலிருந்து நீர் அதிகம் வெளியேறும், இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

உடல் வெப்பம் அதிகரித்து, கட்டிகளாகச் சருமத்தில் வெளிப்படும். இந்தத் தருணத்தில் சரியாகப் பசி எடுக்காது.

நீர்க் காய்கறிகள், குளிர்ச்சியான பழங்கள், நீர்மோர், இளநீர் சாப்பிடுதல், தினமும் நன்றாக தலைக்குக் குளிப்பதன் மூலம் உடல் உஷ்ணத்தைத் தவிர்க்கலாம்.

நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும், வயதானவர்களுக்கு உஷ்ணக் கட்டி வர அதிகம் வாய்ப்பு உண்டு.

இதனை தவிர்க்க சில எளிய வழிமுறைகள்

பெரிய வெங்காயத்தை அடுப்பிலிட்டு சுட்டு சிறிது மஞ்சள் தூளையும், நெய்யையும் விட்டு பிசைந்து கட்டியின் மீது வைத்து கட்டி வந்தால் கட்டிகள் விரைவில் பழுத்து உடைந்துவிடும்.

- 3

பழுத்து வீங்கி, உடையாமல் குடைச்சலும், குத்தலுமாகத் தொந்தரவு செய்யும் கட்டியின் மீது புகையிலையை நன்கு விரித்துப் போட்டு அதில் விளக்கெண்ணெயைத் தடவி வந்தால் கட்டி உடைந்து சீழும் ரத்தமும் வெளியேறி குணமாகும்.

எருக்கன் இலையை நிழலில் உலர்த்திப் பொடியாக செய்து விளக்கெண்ணெயில் குழைத்துப் போட்டால் நாள்பட்ட ரணங்கள் ஆறிச் சுகமாகும்.

பழுத்த அத்தி இலை, ஆல், புங்கன் ஆகிய மரங்களின் பட்டையை நன்கு நசுக்கி, புங்கன் எண்ணெய் விட்டுக் காய்ச்சி வடிகட்டிய தைலத்தை தீ சுட்டபுண் மீது தடவினால் விரைவில் குணம் தெரியும்.

வேப்பிலையையும், மஞ்சளையும் சேர்த்து நன்றாக அரைத்து உடலில் தடவி, சிறிது நேரம் கழித்து வெந்நீரில் சுட்ட அரப்பு தேய்த்து குளித்து விட்டால் உடலில் தோன்றும் நமைச்சல் அகலும், சொறி சிரங்கிற்கும் இது நல்ல மருந்து.

- 5

கட்டிகள் பழுத்து உடைய…! Source link

Related Post

- 7

எந்த உணவுகளை உட்கொண்டால் உடல் சூட்டை அதிகரிக்கும் என்று தெரியுமா?

Posted by - நவம்பர் 13, 2020 0
எந்த உணவுகளை உட்கொண்டால் உடல் சூட்டை அதிகரிக்கும் என்று தெரியுமா? இயற்கையாகவே காய்கறிகளில் விட்டமின் மற்றும் தாது சத்துக்கள் நிறைந்து காணப்படும். உடலுக்கு வலு சேர்க்கும் ஒருசில…
- 17

சிறுதானியங்களின் 30 விதமான பயன்கள்

Posted by - அக்டோபர் 5, 2017 0
சிறுதானியங்களின் 30 விதமான பயன்கள் சிறுதானியங்கள்: நம் முன்னோர்களால் உண்ணப்பட்டு வந்த ஆரோக்கியமான உணவுகளில் முதல் இடத்தினைப் பிடிப்பது சிறுதானியங்கள் தான். சிறுதானியங்கள் நம் பாரம்பரிய உணவு…
- 22

கண் பார்வை குறைபாடு ஏற்படாமல் இருக்க கண்களை பராமரிக்க வழிகள்!

Posted by - அக்டோபர் 20, 2020 0
கண் பார்வை குறைபாடு ஏற்படாமல் இருக்க கண்களை பராமரிக்க வழிகள்! ஸ்டைலுக்கு கண்ணாடி அணிந்தது போய், ஸ்கூலுக்கு போகும் வயதிலேயேக் கண்ணாடி அணியும் அவல நிலையில் நாம்…
- 24

உங்கள் செக்ஸ் ஆரோக்கியத்தை மேம்படுத்த 8 வழிகள்

Posted by - ஏப்ரல் 1, 2020 0
உங்கள் செக்ஸ் ஆரோக்கியத்தை மேம்படுத்த 8 வழிகள் உங்கள் செக்ஸ் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்வது முக்கியம். ஏனெனில், நோய்கள் மற்றும் நோய்த்தொற்றிலிருந்து காப்பதோடு, உங்களுக்கு உற்சாகம் அளித்து, செக்ஸ்…
- 27

5 ஆண்டுகளுக்கு முன்னரே மார்பக புற்றுநோய் வரும் அபாயம் உள்ளதா என்பதை கண்டறிய முடியும் தெரியுமா?

Posted by - ஏப்ரல் 24, 2020 0
இங்கிலாந்து ஆராய்ச்சி என்ன சொல்கிறது? இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சியில், மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கப்பட்ட 90 நோயாளிகளின் இரத்த மாதிரிகள் மற்றும் முற்றிலும் ஆரோக்கியமான பெண்களின் 90…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன