கண் இமை, தலைமுடி அடர்த்தியாக: இந்த ஒரு ஆயில் போதும்

கண் இமை, தலைமுடி அடர்த்தியாக: இந்த ஒரு ஆயில் போதும்

சுற்றுச்சூழல் மாசுபாடு, கெமிக்கல் கலந்த ஷாம்புகள், மோசமான உணவுப் பழக்கங்கள், மன அழுத்தம் போன்ற பல காரணத்தினால் தலைமுடியின் ஆரோக்கியம் இழந்து முடி உதிர தொடங்கும்.

இந்த தலைமுடி தொடர்பான பிரச்சனைகளை தடுக்க விளக்கெண்ணெய் பெரிதும் உதவுகிறது.

விளக்கெண்ணெய்யை தலைமுடிக்கு எப்படி பயன்படுத்த வேண்டும்?
  • ஆலிவ் ஆயில், எலுமிச்சை சாறு மற்றும் விளக்கெண்ணெயை ஆகிய அனைத்தையும் ஒன்றாக கலந்து, அதை ஸ்கால்ப்பில் படும்படி தடவி, 1 மணிநேரம் ஊறவைத்து, மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை கழுவி வர பொடுகுத் தொல்லை நீங்கும்.
  • கண் இமைகளை நீளம் மற்றும் அடர்த்தியாக தினமும் இரவில் உறங்கும் முன் விளக்கெண்ணெய்யை கண் இமைகளில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.
  • முடி வெடிப்புக்கள் இருந்தால் விளக்கெண்ணெயை முடியின் முனைகளில் தடவி 1 மணிநேரம் ஊறவைத்து, பின் மைல்டு ஷாம்பு கொண்டு தலைக்கு குளிக்க வேண்டும்.
  • வாரம் ஒருமுறை விளக்கெண்ணெயை தலையில் தடவி சிறிது நேரம் நன்கு மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு குளித்து வர முடியின் வளர்ச்சி மற்றும் அடர்த்தி அதிகரிக்கும்.
குறிப்பு

தலைமுடிக்கு விளக்கெண்ணெய்யை அடிக்கடி பயன்படுத்தி வந்தால், தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, வறட்சியை நீக்கி தலைமுடியை மென்மையாக்கும்.

கண் இமை, தலைமுடி அடர்த்தியாக: இந்த ஒரு ஆயில் போதும் Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

உங்கள் கருத்தை இடுக...

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

error: Content is protected !!
Logo
Register New Account
Reset Password
%d bloggers like this: