கன்னத்தில் உள்ள கொழுப்பை கரைக்க வேண்டுமா? இந்த 5 எளிய பயிற்சிகள் செய்தாலே போதும்!
உதடுகள் மற்றும் கண்களுக்கு அடுத்து முகத்தை அழகாக காட்டுவது, கன்னங்கள் தான். கொழுகொழுவென இருக்கும் கன்னங்கள் முகத்திற்கு அழகினை சேர்க்கும்.
ஆனால் சிலருக்கு இந்த கன்னங்கள் பார்ப்பதற்கு கொழுப்பு நிறைந்து கொழு கொழு என்று குண்டாக காட்சியளிக்கும்.
இதனை குறைக்க ஒரு சில பயிற்சிகள் உதவுகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
உதட்டைக் குவித்து கூப்புதல்
- இரு கன்னங்களையும் சப்பையாக வைத்துக்கொள்ளவும். உதட்டைக் கூப்பிக்கொள்ளவும்.
- 30 வினாடிகள் வரை மூச்சைப் பிடித்துக்கொண்டு, உதடுகளை அப்படியே வைத்திருக்க வேண்டும்.
- பின்னர் உதடுகளை விடுவிடுத்து, மூச்சையும் மெதுவாக விட வேண்டும்.
- இதேபோல தொடர்ந்து காலையும், மாலையும் பத்து முறை செய்ய வேண்டும்.
காற்று விளையாட்டு
- வாய்க்குள் காற்றை இழுத்து அடக்கிக்கொள்ள வேண்டும். இரு உதடுகளையும் ஒன்றோடு ஒன்று ஒட்டி வைத்து, காற்றை நன்கு அடக்கிக்கொள்ள வேண்டும்.
- பிறகு காற்றை ஒருபுறக் கன்னத்தில் இருந்து மறுபுற கன்னத்துக்கு மாற்ற வேண்டும். இப்படி மாறி மாறிச் செய்ய வேண்டும்.
- தினமும் ஐந்து நிமிடங்களுக்கு இந்தப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
மூச்சைப் பிடித்து விடுதல்
- மூச்சை நன்றாக இழுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் மெதுவாக வாய் வழியாக மூச்சை விட வேண்டும்.
- தினமும் காலை, மாலை என நான்கு முறை தொடர்ந்து இந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டும்.
வானத்துக்கு முத்தம்
- தலையைப் பின்னால் சாய்த்து அண்ணாந்து பார்க்க வேண்டும்.
- இப்படிப் பார்ப்பதால், தொண்டைப் பகுதி நீளமாகக் காணப்படும்.
- உதட்டைக் குவித்து, வானத்துக்கு முத்தம் கொடுப்பதைப் போல வைத்துக்கொள்ள வேண்டும்.
- இதேநிலையில் உதடுகளை பத்து நிமிடங்கள் வரை குவித்து வைத்திருக்க வேண்டும். பிறகு மெதுவாக உதடுகளை விடுவிக்க வேண்டும். பத்து முறை மீண்டும் மீண்டும் இப்படிப் பயிற்சி செய்ய வேண்டும்.
புன்னகை பயிற்சி
- கன்னங்களைச் சுற்றி எண்ணெயைத் தடவ வேண்டும்.
- பின்னர் கன்னங்கள் அகலும் அளவுக்கு உதடுகளை விரித்துச் சிரிக்க (சிரிப்பதுபோல வைத்திருக்க) வேண்டும்.
- பத்து நிமிடங்கள் வரையில் உதடுகளை அப்படியே வைத்திருக்க வேண்டும்.
- பிறகு கன்னங்களை விடுவிக்காமல் புன்னகையை மெதுவாக நிறுத்தி, உதடுகளை பழையநிலைக்குக் கொண்டுவர வேண்டும்.
- ஒரு நாளைக்கு ஐந்து முறை இந்தப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
…
கன்னத்தில் உள்ள கொழுப்பை கரைக்க வேண்டுமா? இந்த 5 எளிய பயிற்சிகள் செய்தாலே போதும்! Source link