- 1

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்! ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

198 0

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்! ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

நாட்டில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் இரண்டாவதாக அதிகமாகவுள்ள புற்றுநோய் வகையாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இனங்காணப்பட்டுள்ளது.

தற்போது கர்ப்பப்பை வாய் புற்றுநோயினால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாக மருத்துவ அறிஞா்கள் தொிவிக்கின்றனா்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் நமது அமைதியை கெடுத்துவிடும். ஆகவே இந்த கொடிய புற்றுநோயைப் பற்றி அறிந்து, அதைத் தடுப்பதற்காக முறையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தற்போது கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்றால் என்ன? இதன் அறிகுறிகள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்றால் என்ன?

கர்ப்பப்பையின் வாயிலுள்ள செல்லில் உருவாகுவதாகும். கா்ப்பப்பை வாயிலுள்ள செல் என்பது கா்ப்பப்பையின் கீழ்பகுதியாகும். இது பெண்ணின் யோனியையும் கா்ப்பப்பையையும் இணைக்கக்கூடிய பகுதியாகும்.

எதனால் ஏற்படுகிறது?

பெரும்பாலும் மனித பாப்பில்லோமா வைரஸில் (HPV) ஏற்படும் பலவிதமான திாிபுகளால் கா்ப்பப்பை வாய் புற்று நோய் ஏற்படுகிறது.

உடலுறவு மூலம் கடத்தப்படும் நோய் தொற்றுகளால் மனித பாப்பில்லோமாவைரஸில் (HPV) பலவிதமான திாிபுகள் ஏற்படுகின்றன. உடலுறவு மூலம் பாப்பில்லோமாவைரஸுக்கு செல்லும் வைரஸ் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்க உடலில் உள்ள நோய் எதிா்ப்பு அமைப்பு வேலை செய்கிறது.

எனினும் அதில் தங்கி இருக்கும் வைரஸ் நாளடைவில் கா்ப்பப்பை வாய் செல்களை புற்றுநோய் செல்களாக மாற்றுகிறது.

இதனை எப்படி கண்டுபிடிக்கலாம்?

முதலில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

அதற்காக வழக்கமான மற்றும் முறையான பாப் (Pap) பாிசோதனைகளை மேற்கொண்டு கா்ப்பப்பையின் வாயில் ஏதாவது வழக்கத்திற்கு மாறான மாற்றம் தொிந்தாலும் கண்டுபிடித்து, அதை குணப்படுத்துவதற்குத் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக பாப் (Pap) பாிசோதனைகளை தவிா்க்காமல் அல்லது கா்ப்பப்பை வாய் புற்றுநோயின் அறிகுறிகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், தொடக்க நிலையிலேயே அவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும்.

அறிகுறிகள் என்ன?
  • இடுப்பு எலும்பில் வலி ஏற்படுதல்.
  • உடலுறவுக்குப் பின்பு மற்றும் மாதவிடய்க்கு இடைப்பட்ட காலங்களில் மற்றும் மாதவிடாய் நின்ற பின்பும் யோனியில் ஏற்படும் இரத்தப்போக்கு.
  • யோனியிலிருந்து வித்தியாசமான வாசனையுடன் இரத்தமோ அல்லது வெள்ளைப்படுதலோ வெளிப்படுதல்.
  • சிறுநீா் கழிக்கும் போது எாிச்சலோ அல்லது வலியோ ஏற்படுதல்
இதனை தடுக்க என்ன பண்ணலாம்?

புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால் உடனே இதை நிறுத்த வேண்டும். ஏனெனில் புகைப்பிடிக்கும் பழக்கத்தைத் தொடா்ந்தால் பாப்பில்லோமா வைரஸில் (HPV) ஏற்படும் திாிபுகளை எதிா்த்து போராட முடியாத அளவிற்கு நோய் எதிா்ப்பு மையம் பலவீனமாகிவிடும்.

பாதுகாப்பான முறையில் உடலுறவை வைத்துக் கொண்டால், உடலுறவு மூலம் பாப்பில்லோமா வைரஸுக்குக் (HPV) கடத்தப்படும் நோய்த் தொற்றுகளைத் தவிா்க்கலாம். அதன் மூலம் கா்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு தடுப்பு மருந்து உள்ளது. இந்த தடுப்பு மருந்து பாப்பில்லோமா வைரஸில் (HPV) திாிபுகள் ஏற்படாமல் தடுத்து, கா்ப்பப்பை வாய் புற்றுநோய் வரவிடாமல் தடுக்கிறது.

சிகிச்சை

அறுவை சிகிச்சை அல்லது ஹீமோதெரபி அல்லது கதிாியக்க தெரபி போன்றவற்றை பாிந்துரை செய்வாா்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்! ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் Source link

Related Post

- 3

பெண்களே! மாதவிடாய் கப் யூஸ் பண்ண போறீங்களா? இதை எல்லாம் அவசியம் தெரிந்து வைச்சு கொள்ளுங்க

Posted by - நவம்பர் 2, 2020 0
பெண்களே! மாதவிடாய் கப் யூஸ் பண்ண போறீங்களா? இதை எல்லாம் அவசியம் தெரிந்து வைச்சு கொள்ளுங்க மாதவிடாய் காலங்களில் சானிடரி நாப்கின்கள், டாம்பான்ஸ் என்கின்ற வரிசையில் தற்போது,…
- 7

ஒரு பெண் தொடர்ந்து கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிடும்போது என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும்?

Posted by - அக்டோபர் 20, 2020 0
ஒரு பெண் தொடர்ந்து கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிடும்போது என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும்? கருத்தடை மாத்திரைகள் தேவையற்ற கர்ப்பத்தைத் தவிர்க்கப் பெண்கள் உபயோகிக்கும் சாதனங்களில் முக்கியமானவை ஆகும். இருப்பினும்…
- 9

மாதவிடாய் உதிரபோக்கு கருஞ்சிவப்பு நிறத்தில் வெளிவந்தால் என்ன காரணமாக இருக்கும்?

Posted by - அக்டோபர் 20, 2020 0
மாதவிடாய் உதிரபோக்கு கருஞ்சிவப்பு நிறத்தில் வெளிவந்தால் என்ன காரணமாக இருக்கும்?   மாதவிடாய் என்பது ஒரு பூப்படைந்த பெண்ணின் உடலில், மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு…
- 11

தாய்ப் பால் கொடுக்கும் தாய்… அக்குல்களில் இருந்து பால் எடுக்கும் ஆச்சரியம்! ஆதாரத்துடன் வீடியோவை வெளியிட்டார்

Posted by - பிப்ரவரி 15, 2021 0
தாய்ப் பால் கொடுக்கும் தாய்… அக்குல்களில் இருந்து பால் எடுக்கும் ஆச்சரியம்! ஆதாரத்துடன் வீடியோவை வெளியிட்டார் அமெரிக்காவை சேர்ந்த மூன்று குழந்தைகளின் தாய் ஒருவர் தன்னுடைய அக்குலில்…
- 15

வெள்ளைப்படுதலா? பெண்களே! கவலை விடுங்க..இதனை சரி செய்ய இதோ சில குறிப்புக்கள்

Posted by - அக்டோபர் 21, 2020 0
வெள்ளைப்படுதலா? பெண்களே! கவலை விடுங்க..இதனை சரி செய்ய இதோ சில குறிப்புக்கள் பொதுவாக பெண் உறுப்பில் இருந்து ஒருவித வெள்ளைநிறத்தில் திரவம் போன்று வெளியேறு தான் வெள்ளைப்படுதல்.…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன