கர்ப்பிணிகளின் எந்த செயல்கள் குழந்தையை பாதிக்கும் தெரியுமா?
பொதுவாக கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் கவனமாக இருப்பது அவசியமானது ஆகும்.
உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சியிலும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது எனப்படுகின்றது.
அந்தவகையில் கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளை பாதிக்கும் எந்த செயல்கள் குழந்தையை பாதிக்கும் என்று பார்க்கலாம்.
என்ன செய்ய கூடாது?
- பிரிட்ஜில் வைத்த குளிர்பானங்கள், குளிர்ந்த நீர் மற்றும் குளிர்ந்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
- மழையில் நனையக் கூடாது. ஈரத் தலையுடன் அதிக நேரம் இருக்க கூடாது.
- கருவுற்ற பெண்கள் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது.. குளிர்ந்த காற்று, மழை பொழிவதற்கு முன் வீசும் காற்று மற்றும் பனிக்காற்று வீசும் இடங்களில் இருக்க கூடாது.
- கர்ப்பிணி பெண்கள் சளிப் பிடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கருவுற்ற பெண்ணுக்கு சளிப் பிடித்தால், அது கருவில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கும்.
- கர்ப்பிணிகள் ஊட்டச்சத்து குறைபாட்டிற்காக சத்து மாத்திரைகளை உபயோகித்தால், சில நேரங்களில் தாயின் உடல் சமநிலைப்பாட்டை மாற்றி கருவில் உள்ள குழந்தையை பாதிக்க துவங்கும். இதனால் குழந்தைகள் பிறந்து சில நாட்கள் நன்றாக இருந்தாலும், சிறிது காலத்திலேயே பாதிப்பை ஏற்படுத்தும். சில குழந்தைகளுக்கு உடல் உறுப்புகளில் பாதிப்பு ஏற்படும்.
- அதிக காரம், புளிப்பு உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.
- இரவு நேரங்களில் கீரைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
- அதிக சூடு, அதிக குளிர்ச்சி தரும் பழங்களைத் தவிர்க்க வேண்டும்.
- கர்ப்பிணிப் பெண்கள் சரியான நேரத்திற்கு உணவு அருந்த வேண்டும். உணவு உண்டவுடன்தூங்கக் கூடாது.
- அதிக சத்தமாக பேசும் போது குழந்தையிடம் அதிர்வுகள் ஏற்படும்.
- மழை, இடி, மின்னல் ஏற்படும் போது வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதுபோல் அதிக வெயிலிலும் அலையக் கூடாது.
என்ன செய்ய வேண்டும்?
- சூழ்நிலை காரணமாக மழையில் நனைய நேரிட்டால், வீட்டிற்கு வந்தவுடன் வெந்நீர் வைத்து வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். தலையும் நன்கு உலர்த்தி காய வைத்து கொள்ள வேண்டும்.
- எப்போதும் நன்கு காய்ச்சி ஆறிய நீரைப் குடிப்பது நல்லது. அதிக நீர் குடிக்க வேண்டும்.
- கீரைகள், பழங்கள், தானியங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றில் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும். அவற்றை சாப்பிடுவது சிறந்தது.
- எளிதில் செரிக்க கூடிய உணவுகளை எடுத்து கொள்வது சிறந்தது.
- மதிய உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- பழங்களைச் சாப்பிடுவது நல்லது. பழங்களாக சாப்பிட பிடிக்காதவர்கள் பழச்சாறுகளை அருந்தலாம்.
- மிதமான வேலை, மிதமான நடை, மிதமான உடற்பயிற்சி, அமைதியான மனநிலையே ஆரோக்கியமான குழந்தைக்கு வழிவகுக்கும்.
….
கர்ப்பிணிகளின் எந்த செயல்கள் குழந்தையை பாதிக்கும் தெரியுமா?Source link