கர்ப்பிணிகள் இரண்டாவது மூன்றுமாத காலத்தில் என்ன மாதிரியான உடற்பயிற்சி செய்யலாம்?
கர்ப்பிணிகள் இக்காலத்தில் ஒருசில உடற்பயிற்சிகளில் ஈடுபட்டால், உடலில் ஏற்படும் சோர்வுகள் நீங்கி, உடல் புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சியும் சீராக இருக்கும்.
அந்தவகையில் கர்ப்பிணிகள் எந்த மாதிரியான உடற்பயிற்சிகளை செய்யலாம் என இங்கு பார்ப்போம்.
- நடைப்பயிற்சி செய்வது நல்லது தினமும் காலை அல்லது மாலையில் சிறிது நேரம் நடக்கும் போது, சுத்தமான காற்றினை சுவாசிப்பதால், மனமானது மிகவும் சந்தோஷமாகவும், ரிலாக்ஷாகவும் இருக்கும்.
- கர்ப்பிணிகள் தினமும் தவறாமல் தியானம் செய்து வர வேண்டும். இதனால் மனம் மற்றும் உடல் அமைதியாகி, உடல் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
- கர்ப்பிணிகள் செய்யக்கூடிய யோகா செய்யலாம். இதனால் உடல் ரிலாக்ஸ் அடைவதோடு, வலுவுடனும் இருக்கும். குறிப்பாக யோகா செய்யும் போது அடிவயிற்று தசை அளவுக்கு அதிகமாக ஸ்ட்ரெட்ச் ஆகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
- பொதுவாக கர்ப்பிணிகள் நீச்சல் பயிற்சியை மேற்கொண்டால், அவர்களுக்கு இதமாக இருக்கும். ஏனெனில் நீந்தும் போது, அவர்களது உடல் பருமன் அவர்களுக்கு தெரியாததால், நீந்துவது வசதியாக இருப்பதுடன், உடல் வலிக்கு இதமாகவும் இருக்கும்.
- தினமும் வீட்டில் எளிமையான சில வீட்டு வேலைகளை செய்வது சிறந்த உடற்பயிற்சியாக இருக்கும். ஆனால் கடினமாக வேலைகள் மற்றும் அதிகமான எடையுள்ள பொருட்களைத் தூக்க வேண்டாம்.
- ஏரோபிக் உடற்பயிற்சி கூட கர்ப்பிணிகளின் இரண்டாவது மூன்றுமாத காலத்தில் செய்வது நல்லது.ஏனெனில் இந்த பயிற்சியை செய்வதால், இதயம் மற்றும் நுரையீரல் சீராக செயல்படும். ஆனால் இதனை செய்யும் முன் மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று பின் செய்ய வேண்டும்.
- அவ்வப்போது மாடிப்படி ஏறி இறங்கி வாருங்கள். இது ஒரு அருமையான உடற்பயிற்சி ஆகும்.
…
கர்ப்பிணிகள் இரண்டாவது மூன்றுமாத காலத்தில் என்ன மாதிரியான உடற்பயிற்சி செய்யலாம்? Source link