கர்ப்ப காலத்தில் உண்டாகும் வாந்தியை எப்படி சமாளிக்கலாம்?
பொதுவாக கர்ப்பமடைந்த பெண்களிடத்தில் பல உடல் அளவிலும், மனதளவிலும் பல மாற்றங்கள் ஏற்படும்.
இந்தக் காலகட்டத்தில் சில ஹார்மோன்கள் சுரக்கும் மற்றும் இந்த ஹார்மோன்கள் சமநிலையில் இருக்காது.
அதில் ஒன்று தான் குமட்டலும் வாந்தியும். இந்த அறிகுறிகள் பெரும்பாலும் கர்ப்பகாலத்தின் தொடக்கத்தில் தான் ஏற்படும்.
இந்த கர்ப்ப காலத்தில் உண்டாகும் குமட்டலில் கூட, ஹார்மோன் மாறுபாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
அந்தவகையில் இதுபோன்ற நிலையில் கர்ப்ப காலத்தில் உண்டாகும் வாந்தியை எப்படி சமாளிக்கலாம் என இங்கு பார்ப்போம்.
- தினமும் மூன்று வேளை சாப்பிடுவதற்குப் பதிலாக, அதை கொஞசம் கொஞ்சமாக, ஆறு வேளைகளில் சாப்பிடும்படி மாற்றிக் கொள்ளலாம்.
- காலையில் எழுந்ததும் குமட்டல் மிகவும் அதிகமாக இருந்தால், வறுத்த, உலர்ந்த உணவு அல்லது பிஸ்கட் போன்றவற்றை எழுந்திருக்கும் போதே சாப்பிடுங்கள்.
- குமட்டலைத் தூண்டும் உணவுகளையும், வாசனைகளையும் தவிர்ப்பது நல்லது.
- உடலுக்கு ஆரோக்கியமான, அசௌகரியமில்லாத உணவுகளை மட்டுமே தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.
- முடிந்தவரையிலும் வாந்தி வரும் என்பது போன்ற நினைப்பைத் தவிர்த்திடுங்கள்.
- குமட்டலும் வாந்தியும் அளவுக்கு அதிகமாக உண்டானால், மருத்துவரிடம் சென்று ஆலோசித்து ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
….
கர்ப்ப காலத்தில் உண்டாகும் வாந்தியை எப்படி சமாளிக்கலாம்?Source link