கர்ப்ப காலத்தில் தூக்கம் இல்லாமல் அவதிப்படுவதற்கு என்ன காரணம் தெரியுமா?
பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல பிரச்சினைகளை சந்திப்பதுண்டு.
இதில் முக்கியமானது தூக்கம். கர்ப்ப காலத்தில் பெண்கள் சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்படுவதுண்டு.
இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றது. தற்போது அந்த காரணங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, இரத்த கொதிப்பில் ஏற்றத்தாழ்வு என்று பல மாற்றங்கள் ஏற்படுவதால், உடல் மற்றும் மனம் அமைதியற்ற நிலையிலேயே இருக்கும். இதனால் தூக்கம் சரியாக வராமல் இருக்கும்.
- குழந்தை பிறக்கப் போகும் அந்த தருணத்தை பற்றிய சிந்தனையிலேயே இருப்பதால், சரியாக தூங்க மாட்டார்கள். இதுவும் தூக்கமின்மைக்கு ஒரு காரணம்.
- கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்கின்ற உணர்வு இருப்பதனால் தூக்கம் அதிகம் பாதிக்கப்படுகின்றது.
- கர்ப்பிணி பெண்களுக் கால்களில் தசைபிடிப்பு ஏற்படும். இது மிக அதிக வலியை உண்டாக்கும். இதனால் தூக்கம் பாதிக்கப்படுகின்றது.
- கர்ப்ப காலத்தில் உடல் எடை அதிகரித்துக் கொண்டே போகும். மேலும் உடலில் ஏற்படும் சில மாற்றங்களாலும், கால்களில் வலி, எரிச்சல், தசைபிடிப்பு என்று பல பிரச்சனைகள் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இதனால், தூக்கம் பாதிக்கும்.
- கர்ப்ப காலத்தில் போதிய அளவு உணவை உண்ண முடியாது. மிக குறைவாகவே, அவ்வப்போது உண்ண வேண்டிய சூழல் உண்டாகும். இதனால், வயிற்றில் வாயு, மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற அசௌகரியங்கள் ஏற்படும். இதனால் இரவில் தூக்கம் பாதிக்கப்படுகின்றது.
….
கர்ப்ப காலத்தில் தூக்கம் இல்லாமல் அவதிப்படுவதற்கு என்ன காரணம் தெரியுமா?Source link