கர்ப்ப காலத்தில் விளாம்பழம் சாப்பிடுவது நல்லதா?
பொதுவாக கர்ப்ப காலங்களில் கர்ப்பிணிகளுக்கு பல சந்தேகங்கள் ஏற்படும். அதில் ஒன்று தான் கர்ப்ப காலங்களில் போது விளாம்பழம் சாப்பிடலாமா? என்ற சந்தேகம்.
விளாம் பழம் வைட்டமின், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்து போன்றவற்றின் ஆதாரமாக விளங்குகிறது.
விளாம்பழம் உடலில் தண்ணீர் அளவு அதிகரிக்கும் போது உண்டாகும் இரத்த இழப்பை இந்த பழம் மீட்டெடுக்கும்.
அதுமட்டுமின்றி மலச்சிக்கல் பாதிப்பில் இருந்து நிவாரணம் கிடைக்கும், நீரிழிவைக் கட்டுப்படுத்தும், வாதத்தைத் தடுக்கும்.
இதனால் கர்ப்பிணிகள் இதனை சாப்பிடுவதனால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
அந்தவகையில் விளாம் பழத்தினை கர்ப்பிணிகள் சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
கர்ப்ப காலத்தில் விளாம் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?
- கர்ப்ப காலத்தில் பொதுவாக ஏற்படும் மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வைத் தருகிறது விளாம் பழம்.
- கர்ப்பகாலத்தில் பெண்களின் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க விளாம் பழ ஜூஸ் எடுத்துக் கொள்வதால் தொற்று பாதிப்பை எதிர்த்து போராட முடியும் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
- கர்ப்ப காலத்தில் விளாம் பழம் அல்லது விளாம் பழ ஜூஸ் எடுத்துக் கொள்வதால் உடலின் திரவ அளவு மற்றும் எலக்ட்ரோலைட் அளவு கட்டுப்பாட்டில் உள்ளது.
- விளாம் பழத்தில் உள்ள நார்ச்சத்து கர்ப்ப காலத்தில் ஏற்படும் செரிமான கோளாறுகள் போக்க உதவும்.
- விளாம்பழத்தில் உள்ள பொட்டாசியம் நரம்பு தூண்டுதலுக்கு சிக்னல் அனுப்ப உதவுகிறது. தசைச் சுருக்கம் மற்றும் உடல் பிடிப்புகளைத் தடுக்க உதவுகிறது.
முக்கிய குறிப்பு
கர்ப்ப கால நீரிழிவு உள்ள தாய்மார்கள் மட்டும் இதனை உட்கொள்வதில் சற்று கவனமாக இருக்க வேண்டும். காரணம் இதில் சர்க்கரை அளவு அதிகம் உள்ளது.
….
கர்ப்ப காலத்தில் விளாம்பழம் சாப்பிடுவது நல்லதா?Source link