கர்ப்ப கால நோய்களில் நீரிழிவுயை கட்டுப்படுத்த என்ன மாதிரியான உணவுகளை எடுக்கலாம்?

கர்ப்ப கால நோய்களில் நீரிழிவுயை கட்டுப்படுத்த என்ன மாதிரியான உணவுகளை எடுக்கலாம்?

258 0

கர்ப்ப கால நோய்களில் நீரிழிவுயை கட்டுப்படுத்த என்ன மாதிரியான உணவுகளை எடுக்கலாம்?

என்னதான் கவனமாக இருந்தாலும் கர்ப்ப காலத்தில் சில நோய்கள் வந்து தொல்லை தருவது சகஜம்தான். அதில் ஒன்று தான் திடீர் நீரிழிவு நோய்.

அதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். நோயை கட்டுப்பாட்டில் வைக்காவிட்டால் தாயையும், குழந்தையையும் பாதிக்கும்.

உணவுக் கட்டுப்பாடு, இன்சுலின் ஊசி எடுத்துக்கொள்ளுதல், உடற்பயிற்சி செய்தல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும்.

அதிலும் இதனை கட்டுப்படுத்த ஆரோக்கியமான உணவுகளை எடுப்பது சிறந்தது. தற்போது அந்த உணவுகள் என்ன என்பதை பார்ப்போம்.

  • பாகற்காய் நீரிழிவு நோய்க்கான உயர் இரத்த குளுக்கோஸ் அளவை குறைக்கும் சரன்டின் உள்ளிட்ட நீரிழிவு எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இதனை நறுக்கி சாறாக்கி தான் குடிக்க வேண்டும் என்னும் அவசியம் இல்லை. பாகற்காயை வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கி அப்படியே சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். கசப்பும் தெரியாது. நீரிழிவுக்கும் நன்மை செய்யும். வாரத்தில் மூன்று நாட்கள் சாப்பிடலாம்.
  • நீரிழிவுக்கு அதிலும் டைப் 2 நீரிழிவை கட்டுப்படுத்த வெந்தய விதைகள் உதவியாக இருக்கும். தாளிப்பு பொருள்களில் வெந்தய விதைகளை சேர்ப்பது. வெந்தயத்தை கஞ்சியாக்கி குடிப்பது, இரவில் வெந்தயத்தை ஊறவைத்து மறுநாள் காலை அந்த நீரை குடிப்பது நீரிழிவை அதிகவன கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.
  • பார்லியில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தையும் கார்போஹைட்ரேட்டுகளை உறீஞ்சுவதையும் குறைக்கிறது. அதே நேரம் இதை அளவாக எடுத்துகொள்ள வேண்டும். பார்லி வேக வைத்த நீர் தினம் ஒரு டம்ளர் வீதம் குடித்துவந்தால் போதுமானது. இது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க செய்யும்.
  • பூண்டு உயர் ரத்த அழுத்தத்துக்கு மட்டும் மருந்தாவதில்லை. இது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி வைக்கவும் உதவும். பூண்டு குழம்பு, பூண்டு சட்னி, பூண்டு பொடி என பயன்படுத்தலாம். பூண்டை சுட்டு சாப்பிடலாம். இதன் மூலம் கர்ப்பகால நீரிழிவுக்கு நிவாரணம் கிடைக்கும்.
  • உங்கள் சர்க்கரை அளவை கட்டுக்கு வைக்க விரும்பினால் நீங்கள் ஆலிவ் என்ணெயை சமையலில் சேர்க்கலாம். பாஸ்தா, சாலட் வகைகள், வேக வைத்த உருளைக்கிழங்கு என உணவில் சேர்க்கலாம்.
  • இலவங்கப்பட்டையில் உள்ள பாலிபினால்கள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை சீராக்க இவை உதவுகிறது. உடல் குளுக்கோஸை திறம்பட பயன்படுத்த செய்கிறது. இது கொழுப்பு மற்றும் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகின்றது.

….

கர்ப்ப கால நோய்களில் நீரிழிவுயை கட்டுப்படுத்த என்ன மாதிரியான உணவுகளை எடுக்கலாம்?Source link

Related Post

Ectopic Pregnancy என்றால் என்ன? இதன் அறிகுறி என்ன? முழுமையாக தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்

Ectopic Pregnancy என்றால் என்ன? இதன் அறிகுறி என்ன? முழுமையாக தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்

Posted by - நவம்பர் 25, 2020 0
Ectopic Pregnancy என்றால் என்ன? இதன் அறிகுறி என்ன? முழுமையாக தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும் கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்களில் பெண்களின் மிகவும் அவதானத்துடனும்,…
நஞ்சுக்கொடி கருப்பை சுவற்றில் வளர்ந்திருந்தால் என்ன செய்வார்கள் தெரியுமா?

நஞ்சுக்கொடி கருப்பை சுவற்றில் வளர்ந்திருந்தால் என்ன செய்வார்கள் தெரியுமா?

Posted by - அக்டோபர் 20, 2020 0
நஞ்சுக்கொடி கருப்பை சுவற்றில் வளர்ந்திருந்தால் என்ன செய்வார்கள் தெரியுமா? கர்ப்பிணிகளுக்கு காணப்படும் பிரச்னைகளுள் ஒன்று தான் இந்த நஞ்சுக்கொடி கருப்பை சுவர் நோக்கி வளர்வது மிகவும் ஆபத்தான…
கர்ப்பிணிகளுக்கு கொரோனா தாக்கினால் கருச்சிதைவு ஏற்படுமா?

கர்ப்பிணிகளுக்கு கொரோனா தாக்கினால் கருச்சிதைவு ஏற்படுமா?

Posted by - ஜனவரி 20, 2021 0
கர்ப்பிணிகளுக்கு கொரோனா தாக்கினால் கருச்சிதைவு ஏற்படுமா? உலகையே ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பாரபட்சம் பாரக்கமால் அனைவரும் தாக்கி விஸ்வரூபம் எடுத்து கொண்டு வருகின்றனது. குழந்தைகள் முதல்…
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாமா?

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாமா?

Posted by - பிப்ரவரி 5, 2021 0
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாமா? எலுமிச்சை நம் உடலுக்குப் பல விதங்களில் ஒரு நல்ல மருந்துப் பொருளாக இருக்கிறது. இதில் உயர்ரக ஊட்டச்சத்துகளான கால்சியம்,…
கர்ப்ப காலத்தில் விளாம்பழம் சாப்பிடுவது நல்லதா?

கர்ப்ப காலத்தில் விளாம்பழம் சாப்பிடுவது நல்லதா?

Posted by - அக்டோபர் 21, 2020 0
கர்ப்ப காலத்தில் விளாம்பழம் சாப்பிடுவது நல்லதா? பொதுவாக கர்ப்ப காலங்களில் கர்ப்பிணிகளுக்கு பல சந்தேகங்கள் ஏற்படும். அதில் ஒன்று தான் கர்ப்ப காலங்களில் போது விளாம்பழம் சாப்பிடலாமா?…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன