கீழடி அகழாய்வில் வடிகால் வசதி அமைப்பு கண்டுபிடிப்பு

திருப்புவனம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே தண்ணீர் செல்வதற்கான வடிகால் வசதி அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் பிப்.19-ம் தேதி ஆறாம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியது. ஊரடங்கால் அகழாய்வு பணி நிறுத்தப்பட்டு, மீண்டும் மே 20-ம் தேதி அகழாய்வு பணி தொடங்கியது.
மணலூரில் சுடுமண்ணால் ஆன உலை, கீழடியில் விலங்கின எலும்பு, கொந்தகையில் முதுமக்கள்தாழியில் மனித எலும்பு, அகரத்தில் மண் பானைகள் என மாறி, மாறி கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்று அகரத்தில் தங்க நாணயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதைதொடர்ந்து இன்று கொந்தகையில் ஒரே குழியில் 2 முதுமக்கள்தாழிகள் கண்டறியப்பட்டன.
கீழடியில் ஏற்கெனவே கண்டறியப்பட்ட 2 மண்பானைகள் அருகிலேயே தண்ணீர் செல்வதற்கான வடிகால் வசதி அமைப்பும் கண்டுபிடிக்கப்பட்டன.