கூகிள் அதிரடி முடிவு.. பெங்களூரில் புதிய வர்த்தக விரிவாக்கம்..!

கூகிள் அதிரடி முடிவு.. பெங்களூரில் புதிய வர்த்தக விரிவாக்கம்..!

2014 முதல்..

2014 முதல்..

கூகிள் நிறுவனம் 2014ஆம் ஆண்டு முதல் உலகநாடுகளில் இருக்கும் டேட்டா சென்டர்களில் இருக்கும் சர்வர்களில் பயன்படுத்தும் சிப் மற்றும் பிக்சென் ஸ்மார்ட்போனுக்கு பயன்படுத்தப்படும் இமேஜ் பிராசசிங் சிப் ஆகியவற்றைத் தயாரித்து வருகிறது.

அடுத்தகட்ட முயற்சி

அடுத்தகட்ட முயற்சி

இந்நிலையில் கூகிள் தயாரிக்கும் பிற பொருட்களில் இன்டெல் தயாரிக்கும் சிப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது கூகிள் கையில் எடுத்துள்ள திட்டத்தின் படி அதிக திறன் கொண்டு வேகமாக இயங்கக்கூடிய சிப்-புகளை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு

இத்திட்டத்தைச் செயல்படுத்த இந்தியாவில் அடிப்படையாகக் கொண்ட அணியை உருவாக்க முடிவு செய்துள்ளது கூகிள்.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக கூகிள் தனது ‘ஜிசிப்ஸ்’-ஐ வடிவமைக்க இத்துறையில் டாப் நிறுவனங்களாகத் திகழும் இன்டெல், குவால்கம், பிராட்காம் மற்றும் நிவிடா ஆகிய நிறுவனங்களில் இருந்து சுமார் 16 பேரை தன் நிறுவனத்தில் சேர்த்துள்ளது.

இந்த அணி வருகிற டிசம்பர் மாதத்திற்குள் 80 பேர் கொண்ட அணியாக உயரும் எனத் தெரிகிறது.

போட்டி நிறுவனங்கள்

போட்டி நிறுவனங்கள்

இதேபோன்ற பணிகளை கூகிளின் போட்டி நிறுவனமான ஆமேசான், மைக்ரோசாப்ட், ஆப்பிள் மற்றும் பேஸ்புக் ஆகிய நிறுவனங்களும் கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

என்ன லாபம்..?

என்ன லாபம்..?

உதாரணமாக, கூகிள் நிறுவனம் தற்போது ஸ்மார்ட் ஸ்பீக்கர், ரவுட்டர், ஹோம் செக்யூரிட்டி, கிளவுட் சேவைகள், வாய்ஸ் காமென்ட் மூலம் இயக்கும் கருவிகள், சிறப்பாக வீடியோ டெக்கார்ட் செய்யும் கருவி என பலதரப்பட்ட வன்பொருள் மற்றும் அதற்கான மென்பொருட்களைச் செய்து வருகிறது.

இத்தகைய சூழ்நிலையில் இத்தகைய தயாரிப்புகளின் இதயமாக இயக்கும் சிப்-புகளையும் கூகிள் நிறுவனமே தயாரித்தால் பொருட்களின் தரம் உயருவது மட்டும் அல்லாமல் அதிகளவிலான லாபத்தையும் பெற முடியும்.

இதேபோலத் தான் பிற முன்னணி நிறுவனங்களும்.

கூகிள் அதிரடி முடிவு.. பெங்களூரில் புதிய வர்த்தக விரிவாக்கம்..!

VIew Source Page

Tags:

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

உங்கள் கருத்தை இடுக...

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

error: Content is protected !!
Logo
Register New Account
Reset Password
%d bloggers like this: