கேமிங் மான்ஸ்டர், ஒன்ப்ளஸுக்கு போட்டி, சீன நிறுவனங்களுக்கு மாற்று… ROG போன் III என்ன ஸ்பெஷல்?

நல்ல பேட்டரி, வேற லெவல் பர்ஃபாமன்ஸ், கேமிங்கிற்கென ஸ்பெஷல் வசதிகள் எனக் கலக்கிய ROG போன் II-ன் அடுத்த வெர்ஷன் இந்த ROG போன் III.

சில தினங்களுக்கு முன்தான் இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போன்களில் ஒன்றான ஒன்ப்ளஸ் நார்டு அறிமுகமானது. 24,999 ரூபாய்க்கு அறிமுகமான இந்த போன் இந்திய டெக் ரசிகர்களிடம் பெரும் பேசுபொருளானது. இதற்கு நடுவில் சத்தமே இல்லாமல் அறிமுகமாகியிருக்கிறது அசுஸின் ROG போன் III. கேமிங்கிற்கு பெயர் பெற்றவை அசுஸின் பிரபல ‘Republic Of Gamers’ ரக சாதனங்கள்.

சமீபகாலமாக இந்தப் பெயரில் கேமிங் போன்களையும் அறிமுகம் செய்துவருகிறது அசுஸ் நிறுவனம். கடந்த வருடம் இப்படி அறிமுகம் செய்யப்பட்ட ROG போன் II மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. நல்ல பேட்டரி, வேற லெவல் பர்ஃபாமன்ஸ், கேமிங்கிற்கென ஸ்பெஷல் வசதிகள் எனக் கலக்கிய அந்தப் போனின் அடுத்த வெர்ஷன் தற்போது ரெடி. இந்த ROG போன் III-ல் என்ன ஸ்பெஷல்?

மற்ற பிரீமியம் போன்கள் போல அல்லாமல் மேலும் கீழும் சிறிய பேஸல்கள் உள்ளன. ‘இந்த விலையில் ஃபுல் டிஸ்ப்ளே இல்லாமல் எப்படி பாஸ்?’ எனக் கேட்பவர்களுக்குப் பதில் வைத்திருக்கிறது அசுஸ். இதற்குப் பின் ஒரு காரணம் இருக்கிறதாம். பொதுவாக கேம் ஆடும்போது போனை நாம் முன்பக்கமாக இரண்டு கைகள் கொண்டும் பிடித்துக்கொள்வது வழக்கம். முன்பக்கம் முழுவதுமே டிஸ்ப்ளே இருந்தால் இப்படிப் பிடிக்கும்போது தவறுதலாக அது ‘டச்’ என எடுத்துக்கொள்ளப்படலாம். இதைத் தவிர்த்து கேமிங்கின்போது நல்ல கிரிப் கிடைக்கவே இதைச் செய்திருக்கிறார்கள். இதில் கூடுதல் அனுகூலம். இரண்டு ஸ்பீக்கர்களுமே முன்பக்கமே வைத்திருக்கிறார்கள். இது முழுமையான கேமிங் அனுபவத்தைத் தருகிறது. வண்ணமிகு பின்புற டிசைன் பற்றி நான் விளக்குவதைவிட நீங்களே பார்த்துவிடுவது சிறந்தது.

Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

உங்கள் கருத்தை இடுக...

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

Logo
Register New Account
Reset Password
%d bloggers like this: