பிப்ரவரி 21, 2021
SaveSavedRemoved 0
கைகளின் வறட்சியை போக்க இதோ சில அற்புத வழிகள் !!
மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உடலில் மிகவும் அழகான பகுதி கைகள் என்றே கூறலாம்.
ஆனால், கைகள் பராமரிப்பிற்கு அவ்வளவாக யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
அதிலும் ரசாயனங்கள் கலந்த பொருட்களை பயன்படுத்திய பின் கைகளை பராமரிக்க தவறிவிடுகின்றோம். இதன் விளைவாக, கைகளில் வறட்சி, அரிப்பு, வெடிப்பு,ஆகியவை ஏற்படுகின்றன.
இதனை தடுக்க கண்ட கண்ட கிறீம்களை தான் வாங்கிபோட வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு கூட எளிய முறையில் இந்த வறட்சியை தடுக்க முடியும். தற்போது அவை எப்படி என்று பார்ப்போம்.
- ஆலிவ் ஆயிலை தினமும் இரவில் படுக்கும் போது கை, கால்களுக்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், சருமத்திற்கு வேண்டிய ஈரப்பசை கிடைத்து, கை, கால்களில் உள்ள வறட்சி நீங்கும்.
- மில்க் க்ரீம் கொண்டு தினமும் மசாஜ் செய்து வாருங்கள். இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, புதிய செரும செல்கள் உருவாக வழிவகுக்கும்.
- குளிர்காலத்தில் தயிரை தினமும் கை, கால்களுக்கு தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் ஊற வைத்து கழுவ, சருமத்தின் ஈரப்பசை தக்க வைக்கப்படும்.
- தினமும் இரவில் படுக்கும் முன் தேங்காய் எண்ணெய்யை கை, கால்களுக்கு தடவி வந்தால், கைகளில் ஏற்படும் வறட்சியைத் தடுக்கலாம்.
…
கைகளின் வறட்சியை போக்க இதோ சில அற்புத வழிகள் !! Source link
SaveSavedRemoved 0