`கொஞ்சம் இறங்கி வரலாமே ஆப்பிள்!’- இந்திய ரசிகனின் வேண்டுகோள்

இங்கிருந்து பிளைட் பிடித்து அமீரகத்தில் ஒரு நாள் தங்கி ஒரு ஐபிஎல் மேட்ச் பார்த்துவிட்டு ஐபோன் வாங்கி வந்தாலும் கூட இந்தியாவில் விற்கும் விலையில் கொஞ்சம் மிச்சம் பிடித்துவிடலாம். அதுதான் இங்கிருக்கும் நிலை.

வாங்குகிறோமோ இல்லையோ ஒவ்வொரு ஆண்டும் புதிய ஐபோன்களில் என்ன ஸ்பெஷல் எனப் பார்ப்பதில் டெக் ரசிகர்கள் அனைவரிடத்திலும் அலாதியான ஆர்வம் உண்டு. காரணம், எப்போதும் எதாவது புதிய தொழில்நுட்பத்தைக் கண்ணில் காட்டி நம்மை சர்ப்ரைஸ் செய்யாமல் ஐபோன் நிகழ்வை நிறைவு செய்யாது ஆப்பிள். இம்முறை கொஞ்சம் லேட் என்றாலும் பார்ப்பவர்களை ‘வாவ்’ சொல்ல வைக்கத் தவறவில்லை ஆப்பிள். கொரோனாவினால் ஆன்லைனில் நடந்தேறினாலும் இம்முறையும் நேர்த்தியாகப் படமாக்கப்பட்ட வீடியோ ஒன்றின் மூலம் ஐபோன்களை அறிமுகம் செய்து அனைவரையும் வெகுவாக கவர்ந்திருந்தது ஆப்பிள். கடந்த மாதம் நடந்த அறிமுக விழாவில் அறிமுகமான நான்கு ஐபோன்களுமே இப்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிட்டது. ஆனால் என்னதான் ‘ப்ரைவசிக்கு பெஸ்ட்’, ‘ஆப்பிள் ஆப்பிள்தான்யா’ என மெச்சினாலும் இந்திய வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஆப்பிள் மீது ஒரு பிராது வைத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். அது அதிகப்படியான விலைதான்.

இதைப் பற்றிப் பார்ப்பதற்கு முன் ஐபோன் 12 சீரிஸில் என்ன ஸ்பெஷல் என்பதைத் தெரிந்துகொள்ளக் கீழ்க்காணும் கட்டுரையைப் படியுங்கள்!

Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

உங்கள் கருத்தை இடுக...

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

error: Content is protected !!
Logo
Register New Account
Reset Password
%d bloggers like this: