கொய்யாப் பழத்தின் 20 மருத்துவ‌ பயன்கள்

கொய்யாப் பழத்தின் 20 மருத்துவ‌ பயன்கள்

கொய்யாப் பழத்தில் மிக அதிமான மருத்துவப் பயன்கள் உள்ளன. விலை மலிவாகவும் மிக எளிதாகவும் கிடைப்பதால் கொய்யாப் பழத்தைப் பற்றிய நன்மைகளை வெகுசிலர் அறியமாலே விட்டுவிட்டனர். ஆனால் உண்மையில் கொய்யாப் பழம் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதிலிருந்து உங்களின் உடல் எடையைச் சீரான விகிதத்தில் மேம்படுத்தவும் கொய்யாப் பழம் மிகவும் உதவி செய்கிறது.

கொய்யாப்பழத்தின் நன்மைகளைப் பார்க்கும் முன் நாம் எந்தச்சூழலில் கொய்யாப் பழத்தினை நாடி வந்துள்ளோம் என்பதைத் தெரிந்து கொள்வோம்.

மனிதனின் உண்மைச் செல்வம் உடலும் உயிருமே ஆகும். நாம் வாழும் இந்த அற்புதமான வாழ்க்கையினை மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ மிக மிக இன்றியமையாதது உடல் நலம் ஆகும். அவசரமயாமான  இக்காலக் கட்டத்தில் நமக்கு ஒரு நோய் அல்லது குறைபாடு ஏற்படுவதற்கு முன்னர் நம் உடல் நலத்தில் நாம் அக்கறைக் கொள்வது இல்லை. நம் முன்னோர்கள் நோய் நொடியின்றி பல காலம் ஆரோக்கியமான உடல் நலத்துடன் வாழ்ந்து வந்தனர். அவர்கள் உண்ணும் உணவில் எடுத்துக் கொண்ட அக்கறை தான் அதற்குக் காரணம். பச்சை காய்கறிகள், இயற்கையான பழங்கள் போன்றவற்றை தான் உணவாக உண்டு வந்தனர். இவ்வாறு உண்ணும் காய்கறிகள் மற்றும் பழங்களின் மூலம் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்த்தியையும் உடலுக்கு வழங்குகிறது. ஆனால் நாம் உடல் நலத்திலும் உண்ணும் உணவிலும் கவனம் செலுத்துவதில்லை. மனிதனுக்கு இயற்கை அளிக்கும் ஒப்பற்ற செல்வங்கள் தான் காய்கற்களும், பழங்களும். ஆதிகால மனிதர்கள் நெருப்பினைக் கண்டுபிடிப்பதற்கு முன்னர் காய்கறிகளையும் பழங்களையும் பச்சையாக உண்டு வந்தனர். இதன் மூலம் பச்சைக் காய்கறிகளில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நம் உடலுக்குள் செல்கிறது. இதுவே சமைத்து உண்ணும் போது காய்கறிகளில், பழங்களில் உள்ள சத்துகளில் பாதி ஆவியாகி செல்கிறது. மனிதனைத் தவிர மற்ற உயிரினங்கள் அனைத்தும் தங்களுடைய இயற்கையான உணவினைத் தான் இந்நாள் வரை உண்டு வருகின்றன. ஆனால் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்ற மனிதர்கள் மட்டும் நவநாகரிகமான யுகத்தில் அறிவியல் வளர்ச்சியில் உயர்ந்து, உடலியலில் பல்வேறு நோய்களினால் பதிக்கப்பட்டு வருகின்றான்.

இவ்வாறு ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மனிதன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தன்னுடைய உணவில் பச்சைக் காய்கற்கள் மற்றும் பழங்களை அதிக அளவில் உண்ண வேண்டும். “வருமுன் காப்பதே” சிறந்தது என்பதற்கேற்ப நோய் ஏற்படுவதற்கு முன்னரே பழங்களை உண்டு நோயற்ற வாழ்வு வாழலாம்.

கொய்யாப் பழத்தினை “ஏழைகளின் ஆப்பிள்” என்றுகூடச் சொல்வார்கள்.

கொய்யா மிகவும் எளிதில் கிடைக்கக் கூடியதும் ஆகும். விலை மலிவானதும் கூட. பழங்களில் மிகவும் முக்கியமான ஒன்று கொய்யா. கொய்யாப் பழத்தில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. எனவே கொய்யா கிடைக்கும் காலங்களில் தினம் ஒரு கொய்யாப் பழம் சாப்பிட்டால் மிகவும் நல்லது. கொய்யாவில் இருக்கும் நன்மைகளைச் சுருக்கமாகக் கீழேயும் அதன் மருத்துவ குணங்களைப் பற்றி அடுத்து வருவனவற்றிலும் காணலாம்.

கொய்யா பழத்தின் நன்மைகள்:

குளிர்காலங்களில் தான் சுவையான கொய்யாப் பழம் கிடைக்கும் பருவமாக உள்ளது. தனித்துவமான சுவையும் வாசனையும் கொண்ட கொய்யா பல ஆரோக்கியமான நன்மைகளைக் கொண்ட பழங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கொய்யாப் பழமானது உண்மையில் ஊட்டச்சத்துக்களின் இருப்பிடமாகக் கருதப்படுகிறது. இந்த எளிய பழம் வைட்டமின் சி, லைக்கோபீனே மற்றும் தோலிற்கு நன்மை பயக்கும் உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள் (ஆண்டிஆக்ஸிடண்ட்) அதிக அளவில் கொண்டுள்ளது. மேலும் நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்சுவதற்கும் பயன்படும் மெக்னீசியமும் கொய்யாவில் நிறைந்துள்ளது. கொய்யாப் பழம் கருவுறுதலை மேம்படுத்தும் ஃபோலேட் (Folate) எனப்படும் கனிமச்சத்தினையும் கொண்டுள்ளது. கொய்யாப் பழத்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்த அளவினை சீராக வைக்க உதவுகின்றது. கொய்யாப் பழமும், வாழைப்பழமும் ஏறத்தாழ ஒரே அளவு பொட்டாசியத்தைத் தான் பெற்றுள்ளன. மேகும் இவற்றில் உள்ள 80 சதவீடம் தண்ணீர், தோலில் உள்ள நீர் ஆவியாகி வெளியேறுவதைத் தடுக்கிறது.

கொய்யாப் பழத்தின் 20 விதமான மருத்துவ‌ பயன்கள்:

இதோ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கொய்யாவின் வியக்க வைக்கும் 20 நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் பின்வருமாறு.

1) நோய்த் தடுப்பாற்றலை அதிகரித்தல்:

நமக்கு நோய் ஏற்படுவதற்குக் காரணம், பாக்டீரியா, பூஞ்சைகள் போன்றவை மட்டுமல்லாது நமது உடலில் நோயினை எதிர்த்துப் போராடும் திறனும் குறைவாக இருப்பதே ஆகும். இவ்வாறு நோய் எதிர்ப்புத் திறனை அதிகப் படுத்த உணவில் அதிக அளவில் பழங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செர்க்கப்படும் பழங்களில் முக்கியமான இடத்தினைப் பிடிப்பது கொய்யாப் பழம் ஆகும். கொய்யாப் பழம் வைட்டமின் ‘சி’ க்கு மிகப்பெரிய மூல ஆதாரமாக் விளங்குகின்றது என்பது முற்றிலும் உண்மை.

  • ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் ‘சி’ அளவினைவிட நான்கு மடங்கு அதிக அளவு வைட்டமின் ‘சி’ யினை கொய்யாப் பழம் கொண்டுள்ளது.
  • வைட்டமின் ‘சி’ நோய் எதிர்ப்புத் திறனை அதிரிப்பதுடன் சாதாரணமான நோய்கள் மற்றும் நோய்க்கிருமிகளின் தொற்றிலிருந்தும் பாதுகாக்கிறது.

2) புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பினைக் குறைத்தல்:

லைக்கோபீனே (Lycopene), க்வெர்செடின் (Quercetin ), வைட்டமின் ‘சி’ மற்றும் பிற பாலிபினால்கள் சக்தி வாய்ந்த ஆக்சினேற்றங்களாகச் செயல்படுகின்றன. இவை புற்றுநோய்க்காக் உருவாக்கப்படும் அடிப்படைக் கூறினை நடுநிலையாக்கி புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கிறது. கொய்யாப் பழம் சாப்பிடுவதனால் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயம் குறைவதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும் இவற்றில் லைக்கோபீனே நிறைந்துள்ளதால் மார்பகப் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுகிறது.

3) நீரிழிவு நோய்:

கொய்யாவானது அவற்றில் நிறைந்துள்ள நார்ச்சத்தின் மூலமாகவும் மற்றும் குறைந்த கிளைச்மிக் (Glycemic Index) குறியீடு காரணமாகவும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான காரணிகளைத் தடுக்கின்றன. குறைந்த கிளைச்மிக் குறியீட்டின் காரணமாகச் சர்க்கரையின் அளவு திடீரென உயர்வது தடுக்கப்படுகிறது. மேலும் அதிக அளவில் நார்ச்சத்தினை உள்ளடக்கி உள்ளதால் சர்க்கரையின் அளவு நன்கு ஒழுங்கு படுத்தப்படுகிறது. எனவே நீரிழிவு நோயினால் பதிக்கப் பட்டவர்களுக்குக் கொய்யாப் பழம் சிறந்த உணவாக இருக்கும்.

4) ஆரோக்கியமான இதயம்:

கொய்யாப் பழம் சோடியம் மற்றும் பொட்டாசியத்தின் அளவினை மேம்படுத்துகிறது. இதன்மூலம் உயர் இரத்த அழுத்தம் கொண்ட நோயாளிகளுக்கு இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் இதய நோய் ஏற்படுவதில் மிகப் பெரிய பங்கினை அளிக்கும் டிரைகிளிசரைடுகள் மற்றும் கெட்ட கொழுப்பினைக் (குறையடர்த்தி லிப்போ புரதம்) குறைக்க கொய்யாப் பழம் பயன்படுகிறாது. இந்த அற்புதமான கொய்யாப் பழம் உடலின் நல்ல கொழுப்பினை (மிகையடர்த்தி லிப்போ புரதம்) அதிகரிக்கச் செய்கின்றது.

5) மலச் சிக்கலைத் தடுக்கிறது:

மற்ற பழங்களுடன் கொய்யாவினை ஒப்பிடும் போது நார்ச்சத்துக்கு ஆதாரமாக விளங்கும் பழங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு நாளைக்கு பரிந்துரைக்கப்படும் நார்ச்சத்தின் அளவில் 12 சதவீதத்தை ஒரு கொய்யாப் பழம் பூர்த்தி செய்கிறது. இவ்வாறு உடலில் சேரும் நார்ச்சத்து உங்கள் செரிமான ஆரோக்கியத்திற்கு மிகுந்த பலனைத் தருகிறது. உண்ணும் போது கொய்யாவின் விதைகள் முழுமையாகவோ அல்லது மென்று உண்டால் ஆரோக்கியமான மலம் வெளியேற்ற இயக்கத்தை உருவாக்க உதவுகிறது.

6) பார்வைத் திறனை அதிகரித்தல்:

கொய்யா பழத்தில் வைட்டமின் ‘ஏ’ இருப்பதால் ஆரோக்கியமான பார்வைத் திறனை மேம்படுத்தும் என்று அறியப்படுகிறது. இவை கண்பார்வைத் திறனை மேம்படுத்தும் என்று அறியப்படுகிறது. மேலும் கண்பார்வை குறைதலை தடுப்பதோடு மட்டுமல்லாமல் பார்வைத் திறனையும் அதிக்ரரிகிறது. கொய்யாப் பழம் பொதுவாகக் கண்புரை ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறாது. எனினும் கொய்யாப் பழத்தில் கேரட்டைப் போன்று வைட்டமின் ‘ஏ’ நிறைந்து காணப்படவில்லை என்றாலும் அவை ஊட்டச்சத்திற்கு நல்ல ஆதாராமாக விளங்குகின்றது.

7) கர்ப்ப காலம்:

கொய்யாப் பழத்தில் வைட்டமின் ‘பி‍ 9’ அல்லது போலிக் அமிலம் நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் ‘பி 9’ மற்றும் போலிக் அமிலம் கர்ப்பிணிப் பெண்களுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் இவை குழந்தையின் நரம்பு மண்டலத்தை வளர்க்க உதவுகிறது. மேலும் நரம்பியல் கோளாறுகளிலிருந்து புதிதாகப் பிறக்கும் குழந்தையைப் பாதுகாக்கிறது.

சிவப்புக் கொய்யாப் பழங்கள்

8) பல்வலியை எதிர்த்தல்:

கொய்யா மரத்தின் இலைகளில் ஒரு சக்தி வாய்ந்த அழற்சியை எதிர்த்துப் போராடும் சக்தி மற்றும் பாக்டீரியாவிற்கு எதிராகப் போராடும் திறனும் உள்ளது. இவை தொற்று நோய்களுடன் போராடிக் கிருமிகளைக் கொல்கிறது. இதனால் கொய்யா மர இலையைச் சாப்பிடுவது மிகச்சிறந்த வீட்டு மருத்துவமாக வேலை செய்கிறது. இதன்மூலம் கொய்யா இலைகளிலிருந்து எடுக்கப்படும் சாறு பல்வலி, வீங்கிய ஈறுகள் மற்றும் வாய்வழிப் புண்கள் ஆகியவற்றைக் குணப்படுத்டுவதாக அறியப் படுகிறது. மேலும் கொய்யா இலைச் சாறு புண்களின் குணமறையும் தன்மையை வேகமாக்குகிறது.

மருத்துவ நோக்கத்திற்காகக் கொய்யாவை நீங்கள் உட்கொள்ளும் போது உங்களின் விடமுயற்சியைக் கைவிடக் கூடாது. உங்கள் உணவில் கொய்யாவினை எந்த ஒரு புதிய மருந்து வடிவத்தில் சேர்க்கும் போதும் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதற்குப் பதில் நீங்கள் கொய்யாவை முழுப் பழமாகவே உண்ணலாம்.

9) மன அழுத்தத்தைக் குறைக்கிறது:

கொய்யாப் பழத்திதில் நிறைந்துள்ள மெக்னீசியம் உடல் தசைகள் மற்றும் நரம்புகளை ஓய்வடையச் செய்ய உதவுகிறது. எனவே கடினமான உடல் உழைப்பு அல்லது நீண்டநேரம் அலுவலகத்தில் வேலைசெய்த பிறகு நீங்கள் உட்கொள்ளும் ஒரு கொய்யாப் பழம் உங்களுக்குத் தேவையான உடல் தசைகளையும் ஓய்வெடுக்கச் செய்கிறது. அதோடுகூட மட்டுமல்லாமல் மன அழுத்தத்தினையும் குறைத்து உங்கள் உடல் மற்றும் மனதிற்கு நல்ல ஆற்றாலையும் ஊகத்தினையும் கொடுக்கிறது.

10) ஆக்சிஜனேற்ற அழுத்தத்தினைக் குறைத்தல்:

கொய்யாப் பழச் சாற்றில் வைட்டமின் ‘சி’ மற்றும் முக்கியமான தாவர ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. இந்தத் தாவர ஊட்டச் சத்துக்கள் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தின் வேகத்தைக் குறைக்கிறது. மேலும் கொய்யாப் பழத்திலிருந்து தயாரிக்கப்படும் கொய்யா சாறு வெப்பமண்டல மற்றும் மித வெப்ப மண்டலங்களில் மிகவும் பிரபலமான பானமாகும். மேலும் இந்தக் கொய்யாப் பழச் சாறு இரத்த சர்க்கரையின் ஏற்ற இறக்கத்தினை அதிக அளவிலிருந்து குறைந்த அளவிற்கு குறைக்க உதவுகிறது. இதன்மூலம் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு பெருமளவில் குறைக்கப்படுகிறது.

11) மூளைக்கு நலம்:

கொய்யாப் பழத்தில் வைட்டமின் ‘பி 3’ மற்றும் வைட்டமின் ‘பி 6’ ஐக் கொண்டுள்ளது. இவை நயசின் மற்றும் பைரிடாக்சின் என்ற பெயர்களில் அழைக்கப்படுவது நாம் அறிந்ததே. மெலும் கொய்யாப் பழம் மூளையின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. அறிவாற்றல் செயல்பாட்டினையும் தூண்டுகிறது. மேலும் கொய்யாப் பழம் நரம்புகளுக்கு ஓய்வினை அளிக்கிறது.

12) உடல் எடை குறைத்தல்:

நீங்கள் ஒரு சில கிலோ எடையைக் குறைக்க வேண்டுமா? அதற்குச் சரியான வழி கொய்யாப் பழம் தான். நீங்கள் உட்கொள்ளும், புரதம், வைட்டமின் மற்றும் நார்ச்சத்து போன்றவற்றில் எந்த ஒரு கட்டுபாட்டினையும் கொண்டு வராமல் கொய்யாப் பழம் உங்கள் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மட்டுமே உடல் எடையை இழக்கச் செய்கிறது. கொய்யாப் பழம் வயிற்றினை நிரப்பும் சிற்றுண்டியாகவும், மிக எளிதில் பசியையும் பூர்த்தி செய்யும் உணவாகவும் இருப்பதானால் பிற கொழுப்பு மிக்க உணவுகளை நாடிச் செல்ல அவசியமில்லை.

ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்ற மற்றா பழங்களுடன் கொய்யாப் பழத்தை ஒப்பிடும் போது கொய்யாவில் அதுவும் முழுக் கொய்யாப் பழத்தில் குறைந்த அளவு சர்க்கரையே உள்ளது.

இப்பழத்தில் கொழுப்புகள் எதுவும் இல்லை மேலும் எளிதில் செரிமானமைடையக்கூடிய கார்போ ஹைட்ரேட்டுகள் மிகக் குறைந்த அளவில் உள்ளன. உங்களுடைய மதிய உணவில் நடுத்தர அளவிலான கொய்யாப் பழத்தைச் சேர்த்துக் கொண்டால் மாலைவரை உங்களுக்குப் பசி உணர்வே ஏற்படாது. முரண்பாடாக் இப்பழம் ஒல்லியாக் இருக்கும் மனிதர்களுக்கு உடல் எடை பெறவும் உதவுகிறது. இந்தக் கொய்யாப் பழத்தில் நிறைந்துள்ள ஊட்டச் சத்துக்களின் காரணமாக உடல் எடை பெற்லாம். மேலும் இப்பழம் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தி முறையான ஊட்டச்சத்தினை உடல்மூலம் உறிஞ்சுதலை ஊக்குவிக்கிறது.

13) இருமல் மற்றும் சளி:

மற்ற பழங்களை ஒப்பிடும்போது கொய்யாப் பழத்தில் தான் வைட்டமின் ‘சி’ மற்றும் இரும்புச்சத்து அதிக அள்வில் உள்ளது. இவை இரண்டும் சலி மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கு எதிராகச் செயல்படுகிறது என்று நிறூபிக்கப்பட்டுள்ளது. பழுத்த அல்லது பழுக்காத கொய்யாவிலிருந்து எடுக்கப்படும் சாறு அல்லது கொய்யா இலைகளின் சாறு இவை இரண்டும் சளி மற்றும் இருமலிலிருந்து விடுபட மிகப்பெரிய அளவில் உதவுகிறது. மேலும் கொய்யாவானது சளியிலிருந்து முற்றிலும் விடுபடவும் சுவாச மண்டலம், தொண்டை மற்றும் நுரையீரலை சுத்தப்படுத்தவும் செய்கிறது. தமிழகத்தின் சில பகுதிகளில் வறுத்த கொய்யா இருமல் மற்றும் சளி போன்ரவற்றிற்கு எதிரான ஒரு தீர்வாகப் பயன்படுத்தப்படுகிறது.

கொய்யாப் பழம் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

ஏனெனில் இவ்வாறு கொய்யாப் பழம் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பது தொண்டை வலிக்கு வழிவகுக்கும்.

14) வயதான தோற்றத்தினை எதிர்க்கும் பண்புகள்:

கொய்யாப் பழத்தில் வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘சி’ மற்றும் உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள்களான (ஆண்டிஆக்ஸிடண்ட்) கரோட்டின் (Carotene) மற்றும் லைக்கோபீனே (Lycopene) போன்றவை அடங்கியுள்ளன. இவை வயதான பின் ஏற்படும் சுருக்கங்களிலிருந்து தோலைப் பாதுகாக்க உதவி செய்கிறது. தினம் ஒரு கொய்யா சாப்பிட்டால், தோல் சுருக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

15) நிறத்தை அதிகரித்தல்:

கொய்யாவானது தோலின் பொழிவு மற்றும் புத்துணர்ச்சியை மீண்டும் பெறுவதற்கு உதவுகிறது. வீட்டிலேயே முகத்திற்கு தேய்ப்பானாகவும் கொய்யாவினைப் பயன்படுத்தி எவ்வாறு செய்யலாம் என்று பார்க்கலாம்.

நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் கொய்யாப் பழத்தினையும், முட்டையின் கருவினையும் சேர்த்துப் பிசைந்து முகத்தில் தடவ வேண்டும். பின்பு 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தினைக் கழுவ வேண்டும். இம்முறையை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை செய்து வந்தால் உங்கள் தோலில் உள்ள இறந்த செல்கள் நீக்கப்பட்டு முகத்தின் நிறம் அதிகரிக்கும். கொய்யாப் பழமானது வைட்டமின் ‘கே’ க்கு மூல ஆதாராமாக விளங்குகிறது. வைட்டமின் ‘கே’ தோல் நிறமிழப்பு, கருவளையம், சிவத்தல் மற்றும் முகப்பரு எரிச்சல் போன்றவற்றை அகற்ற உதவுகிறது.

16) தோற்றத்தை மேம்படுத்துதல்:

கொய்யாப் பழங்களில் அதிக அளவில் சுருக்கங்களைக் கட்டுபடுத்தும் குணங்கள் (Astringent Properties) உள்ளன. அதிலும் குறிப்பாகக் கொய்யா இலைகள் மற்றும் பழுக்காத கொய்யாக் காய்களில் அதிக அளவில் இப்பண்புகள் உள்ளன. கொய்யாவானது தோலின் நிறத்தை உயர்த்துகிறது எனவே பழுக்காத கொய்யாக் காய் அல்லது கொய்யா இலையிலிருந்து எடுக்கப்பட்ட சாற்றினை தோலில் பூசி வரத் தோற்றம் மேம்படுவைதைக் காணலாம்.

17) ஸ்கர்வியைத் தடுத்தல்:

வைட்டமின் ‘சி’ யின் செறிவு அடிப்படையில் ஆரஞ்சு மற்றும் சிட்ரஸ் பழங்களை ஒப்பிடும்போது கொய்யாப் பழம் முதன்மை பெறுகிறது. வைட்டமின் ‘சி’ யின் குறைபாடு காரணமாகத் தான் ஸ்கர்வி (Scurvy) நோய் ஏற்படுகிறது. இக்கொடிய நோயிலிருந்து விடுபட ஒரே தீர்வு சரியான அளவு வைட்டமின் ‘சி’ யினை உட்கொள்ள வேண்டும். அனவே ஆரஞ்சை ஒப்பிடும்போது நான்கு மடங்கு அதிக அளவு வைட்டமின் ‘சி’ கொய்யாவில் உள்ளது. எனவே கொய்யாவினை தினசரி உட்கொண்டு வந்தால் ஸ்கர்வி நோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

18) வயிற்றுப் போக்கினை நீக்குதல்:

கொய்யாவில் உள்ள சுருக்கங்களைக் கட்டுபடுத்தும் குணங்கள் (Astringent Properties) செரிமானக் கோளாற்களான வயிற்றுப் போக்கு போன்றவற்றை குணப்படுத்துகிறது.

  • நீங்கள் கொய்யா இலை அல்லது ஒரு கொய்யாப் பழத்தைச் சாப்பிடுகிறீர்கள் என்றால் அதில் உள்ள சுருக்கங்களைக் கட்டுபடுத்தும் குணங்கள் வயிற்றுப் போக்கின் அறிகுறிகளைக் குறைக்கின்றன.
  • இந்தச் சுருக்கங்களைக் கட்டுபடுத்தும் குணங்கள் இயற்கையாகவே கிருமி நாசினி மற்றும் பாக்டீரியாவை எதிர்க்கும் தன்மை கொண்டுள்ளது.
  • இவை நுண்ணுயிர்களை அழித்து வயிற்றுப் போக்கினைக் குணப்படுத்துகிறது. மேலும் குடல்களிலிருக்கும் கூடுதல் சளியினை நீக்குகிறது.
  • கொய்யாவில் உள்ள வைட்டமின் ‘சி’ கரோட்டினாய்டுகள் மற்றும் பொட்டாசியம் போன்றவை செரிமான மண்டலத்தை வழுவாக்குகின்றன. அதோடு மேற்கூடிய காரணங்களால் இரைப்பைக் குடல் அழற்சிக்கான (Gastroenteritis) சிகிச்சையில் கொய்யா மிகுந்த பயனளிக்கிறது.

19) தைராய்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்:

கொய்யாக்கள் செம்புக்கு (Copper) நல்ல ஆதாரமாக விளங்குகிறது. இதனால் ஹார்மோன் உற்பத்தி மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதைக் கட்டுப்படுத்தி வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிற்து. உடலில் உள்ள ஆற்றல் கட்டுப்பாடு மற்றும் வளர்சிதை மாற்றத்தில் தைராய்டு ஹார்மோன்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே கொய்யாவானது பல வழிகளில் உங்கல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகின்றது.

20) இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துதல்:

இரத்தத்தில் உள்ள கொழுப்பினை கொய்யாப் பழம் குறைக்கிறது. இரத்தம் கடினமாவதைத் தடுத்து இரத்தத்தின் திரவத் தன்மையைப் பாதுகாக்கிறது. இதன் மூலம் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது. நார்ச்சத்து இல்லாத உணவுகள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. கொய்யாவானது மிகுதியான நார்ச்சத்தினையும் குறைவான இரத்த சர்க்கரையையும் இயற்கையாகவே கொண்டுள்ளது. இதன்மூலம் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.

English Summary:

All about Guava fruit and its incredible benefits to our body is explained in simple Tamil.

கொய்யாப் பழத்தின் 20 மருத்துவ‌ பயன்கள்

Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

உங்கள் கருத்தை இடுக...

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

error: Content is protected !!
Logo
Register New Account
Reset Password
%d bloggers like this: