கொரோனா வைரஸ் எதிரொலி: ரைடு பாஸின் செல்லுபடியை நீட்டித்தது உபெர்! 

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக, மார்ச் 24-ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு Uber அனைத்து நகரங்களிலும் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது. இதனால், தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் உபெர் தனது ரைடு பாஸின் செல்லுபடியை நீட்டித்துள்ளது. நிறுவனம், புஷ் அறிவிப்பு மூலம் சமீபத்திய அப்டேட் குறித்து தனது ரைடர்ஸுக்கு தெரிவித்துள்ளது. 

புஷ் அறிவிப்பு மூலம் சமீபத்திய அப்டேட் குறித்து உபெர் தனது ரைடர்ஸுக்கு தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள Uber Ride Pass-ஐப் பயன்படுத்தும் ரைடர்ஸ் அனைவருக்கும், பாஸின் செல்லுபடியை காலாவதி தேதியிலிருந்து 21 நீட்டித்துள்ளது. 

உபெர், கடந்த வாரம் தனது கேப் சேவையுடன் சுகாதாரப் பணியாளர்களை ஆதரிப்பதற்காக பிரத்தியேகமாக தனது ‘உபெர்மெடிக்’ சேவையை அறிமுகப்படுத்தியது. மருத்துவ பயணங்களுக்கான போக்குவரத்தை வழங்குவதோடு, பல நகரங்களில் உள்ள இந்தியர்களுக்கு அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருட்களை வழங்குவதற்காக ஆன்லைன் மளிகை நிறுவனங்கள் மற்றும் ஈ-காமர்ஸ் தளங்களுடன் உபெர் தற்போது இணைந்துள்ளது. 

Source link

Tags:

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   Logo
   Register New Account
   Reset Password