கொரோனா வைரஸ்: திவாலாகும் நிறுவனங்கள் – என்ன நடக்கிறது சர்வதேச அளவில்? மற்றும் பிற செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றால் வணிகம் பாதிக்கப்பட்டதால் அமெரிக்காவின் பிரபலமான பல்பொருள் அங்காடியான ஜெ.சி.பென்னி திவால் ஆகும் நிலையில் உள்ளது. 118 ஆண்டுகள் பழமையான நிறுவனமான ஜெ.சி.பென்னிக்கு அமெரிக்கா முழுவதிலும் 850 கிளைகள் உள்ளன, 80 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள். இந்த நிறுவனம் திவால் அறிவிக்கையை கொடுத்துள்ளது.

இதற்கு முன்னதாக ஜெ. க்ரியூ நிறுவனம் கடந்த மாதம் திவால் அறிவிக்கை கொடுத்தது. ஜெ.சி.பென்னி நிறுவனம் திவால் நிலைக்குச் சென்றதற்கு கொரோனா மட்டுமே காரணம் அல்ல. கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட பொருளாதார பெரும் அழுத்தத்தில் கூட தப்பித்த அந்த நிறுவனம், இணைய விற்பனை வந்த பிறகு தனது பொலிவை இழக்கத் தொடங்கியது.

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக குடிபெயர்ந்துள்ளவர்களை விரைவில் நாடு கடத்த வேண்டும் என்பது தொடர்பான திட்டத்தை அமெரிக்காவின் உச்சநீதிமன்றம் ஆராய்ந்தும் விவாதித்தும் வருகிறது. விரைவில் இந்த திட்டம் தொடர்பான முக்கிய முடிவு அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குழந்தை பருவத்திலேயே அமெரிக்காவிற்கு வந்து படித்து, பணியில் ஈடுப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களை நாட்டை விட்டு வெளியேற்றும் சூழல் ஏற்படும்.

விரிவாகப் படிக்க:ஆவணங்கள் இல்லை, அன்பு மட்டுமே உண்டு: அமெரிக்காவில் கொரோனாவுடன் போரிடும் குடியேறிகள்

தமிழகத்தில் இன்று புதிதாக 477 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதால், மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,585ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்புவர்களுக்கு நோய் தொற்று இருப்பதால், தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Read Full News @ BBC Tamil

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   Logo
   Register New Account
   Reset Password