சசிகலா சிறையில் இத்தனை ஆண்டுகள் என்னென்ன வேலைகள் செய்துள்ளார் தெரியுமா? வெளியான ஆச்சரிய தகவல்கள்
சொத்து குவிப்பு வழக்கு காரணமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, விடுதலையாகவுள்ள நிலையில், அவர் இத்தனை ஆண்டுகள் சிறையில் என்னென்ன பணிகள் செய்தார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, ஜனவரி மாதம் விடுதலையாவது பல்வேறு காரணங்களால் அவர் அடுத்த மாதம் விடுதலையாகலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா ஆரம்பத்தில் அங்கு மொழி பிரச்சனையை எதிர்கொண்டாராம். இதன் காரணமாகவே கன்னட மொழியை நன்றாக கற்றதுமட்டுமின்றி, எழுத கற்றுக் கொண்டாராம்.
இந்த நான்கு ஆண்டுகால சிறை தண்டையின் போது, சசிகலா அரை ஏக்கர் நிலத்தில், விவசாயம் செய்து, 1 டன் பப்பாளி விளைவித்துள்ளதாம்.
அதுமட்டுமின்றி, பீன்ஸ், கத்தரிக்காய், முருங்கைக்காய் உட்பட, பல காய்கறிகள் விளைவித்ததோடு, சிறிய ரோஜா தோட்டமும் அமைத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து சேலைகளுக்கு டிசைன் செய்வது, வளையல், செயின்களுக்கு டிசைன் செய்வது போன்ற, கை வேலைகளையும் சசிகலா திறம்பட கற்றுக் கொண்டாராம்.
…
சசிகலா சிறையில் இத்தனை ஆண்டுகள் என்னென்ன வேலைகள் செய்துள்ளார் தெரியுமா? வெளியான ஆச்சரிய தகவல்கள் Source link