சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த இருவர் கைது

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த இருவர் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்த வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருட்டுச்சோலைமடு பகுதியில் நேற்று மாலை சட்டவிரோத மண் அகழ்வு மேற்கொள்ளப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் புலனாய்வுப்பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

குறித்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது இருட்டுச்சோலைமடு பகுதியின் வயல் பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டிருந்த இவரை கைது செய்த பொலிஸார் அவர்களிடம் இருந்து மண் ஏற்றிச்செல்லும் வாகனம் உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த இருவர் கைது
Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

உங்கள் கருத்தை இடுக...

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

error: Content is protected !!
Logo
Register New Account
Reset Password
%d bloggers like this: