சந்தனத் தேவன் பெருமை – நாட்டுப்புற பாட்டு

123 0

எல்லாரு காடுதானும் -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கரட்டுக்காடு- ஏலங்கிடி லேலோ 1

சந்தனம் காடுதானும்-ஏலங்கிடி லேலோ
சரியான பருத்திக்காடு – ஏலங்கிடி லேலோ 2

எல்லாரு வீடுதானும்-ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற குச்சுவீடு – ஏலங்கிடி லேலோ 3

சந்தனம் வீடுதானும் – ஏலங்கிடி லேலோ
சரியான மச்சுவீடு – ஏலங்கிடி லேலோ 4

எல்லாரும் கட்டும்வேட்டி-ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற மல்லுவேட்டி – ஏலங்கிடி லேலோ 5

சந்தனம் கட்டும்வேட்டி – ஏலங்கிடி லேலோ
சரியான சரிகைவேட்டி- ஏலங்கிடி லேலோ 6

எல்லாரும் போடும்சட்டை-ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற நாட்டுச்சட்டை – ஏலங்கிடி லேலோ 7

சந்தனம் போடும்சட்டை -ஏலங்கிடி லேலோ
சரியான பட்டுச்சட்டை – ஏலங்கிடி லேலோ 8

எல்லாரு திருட்டுத்தானும் -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற ராத்திருட்டு -ஏலங்கிடி லேலோ

சந்தனம் திருட்டுத்தானும் -ஏலங்கிடி லேலோ
சரியான மாயத்திருட்டு -ஏலங்கிடி லேலோ 10

எல்லாரும் தின்னும்சோறு – ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற பெருநெல்சோறு -ஏலங்கிடி லேலோ 11

சந்தனம் தின்னும்சோறு -ஏலங்கிடி லேலோ
சரியான சம்பாச்சோறு -ஏலங்கிடி லேலோ 12

எல்லாரும்ஏறும் வண்டி -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கட்டைவண்டி- ஏலங்கிடி லேலோ 13

சந்தனம் ஏறும் வண்டி-ஏலங்கிடி லேலோ
சரியான ஜட்காவண்டி -ஏலங்கிடி லேலோ 14

எல்லாரும் வெட்டும்கத்தி- ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற மொட்டைக்கத்தி – ஏலங்கிடி லேலோ 15

சந்தனம் வெட்டும் கத்தி – ஏலங்கிடி லேலோ
சரியான பட்டாக்கத்தி- ஏலங்கிடி லேலோ 16

எல்லாருங் கட்டும்பொண்ணு-ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கறுத்தபொண்ணு – ஏலங்கிடி லேலோ 17

சந்தனம் கட்டும்பொண்ணு -ஏலங்கிடி லேலோ
சரியான சிவத்தபொண்ணு-ஏலங்கிடி லேலோ 18

எல்லாரும் போடும்மிஞ்சி -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கல்வெள்ளiமிஞ்சி -ஏலங்கிடி லேலோ 19

சந்தனம் போடும்மிஞ்சி- ஏலங்கிடி லேலோ
சரியான வெள்ளiமிஞ்சி-ஏலங்கிடி லேலோ 20

எல்லாரும் போடும் வெற்றிலை – ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற முரட்டுவெற்ற’iலை -ஏலங்கிடி லேலோ 21

சந்தனம் போடும் வெற்றிலை -ஏலங்கிடி லேலோ
சரியான கொழுந்துவெற்றிலை -ஏலங்கிடி லேலோ 22

எல்லாரு துணிப்பெட்டியும் -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கூடைப்பெட்டியாம்-ஏலங்கிடி லேலோ 23

சந்தனம் துணிப்பெட்டிதான் -ஏலங்கிடி லேலோ
சரியான தேக்குப்பெட்டியாம் -ஏலங்கிடி லேலோ 24

எல்லாரும் படுக்குங்கட்டில்- ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கயிற்றுக்கட்டில-ஏலங்கி லேலோ 25

சந்தனம் படுக்குங்கட்டில-ஏலங்கிடி லேலோ
சரியான சந்தனக்கட்டில- ஏலங்கிடி லேலோ 26

எல்லாரு கழுத்திலேதான்-ஏலங்கிடி லேலோ

ஏழைக்கேற்ற செவந்திப்பூவாம் – ஏலங்கிடி லேலோ

சந்தனம் கழுத்திலேதான் -ஏலங்கிடி லேலோ
சரியான செம்பகப்பூவாம் – ஏலங்கிடி லேலோ 28

எல்லாரும் குடிக்கிறது -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கள்ளுத்தண்ணீர் -ஏலங்கிடி லேலோ 29

சந்தனம் குடிக்கிறது -ஏலங்கிடி லேலோ
சரியான சாப்புத்தண்ணீர் -ஏலங்கிடி லேலோ 30

எல்லாரும் சாப்பிடும் இலை -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற ஆலம்இலை -ஏலங்கிடி லேலோ 31

சந்தனம் சாப்பிடும் இலை -ஏலங்கிடி லேலோ
சரியான வாழைஇலை -ஏலங்கிடி லேலோ 32
எல்லாரும் படுக்கும் பாயி -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கோரைப்பாயி -ஏலங்கிடி லேலோ 33

தனம் படுக்கும்பாயி -ஏலங்கிடி லேலோ
சரியான ஜப்பான் பாயி -ஏலங்கிடி லேலோ 34

எல்லாரும் போடும்மோதிரம் -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற ஈயமோதிரம் -ஏலங்கிடி லேலோ 35

சந்தனம் போடும் மோதிரம் -ஏலங்கிடி லேலோ
சரியான வைரமோதிரம் -ஏலங்கிடி லேலோ 36

எல்லாரும் பண்ணும்சவரம் -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற முகச்சவரம் – ஏலங்கிடி லேலோ 37

சந்தனம் பண்ணுஞ்சவரம் – ஏலங்கிடி லேலோ
சரியான தலைச்சவரம் – ஏலங்கிடி லேலோ 38

எல்லாரும் குளiக்கிறது – ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற ஆற்றுத்தண்ணீர் – ஏலங்கிடி லேலோ 39

சந்தனம் குளiக்கிறது – ஏலங்கிடி லேலோ
சரியான ஊற்றுத்தண்ணீர் – ஏலங்கிடி லேலோ 40

நாட்டுப்புற பாடல்கள் – தமிழ் DNA

சந்தனத் தேவன் பெருமை

Related Post

பூனை அண்ணா – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020 0
எங்கள் வீட்டு பூனைஇருட்டில் உருட்டும் பூனைஅங்கும் இங்கும் தேடும்ஆளைக் கண்டால் ஓடும்தாவி எலியைப் பிடிக்கும்தயிரை ஏறிக் குடிக்கும்நாவால் முகத்தைக் குடிக்கும்நாற்காலியின் கீழ் படுக்கும் குழந்தை பாடல்கள் –…

மார்கழி மாசத்திலேதான் – தாலாட்டுப் பாடல்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
மார்கழி மாசத்திலேதான் – கண்ணே நீமாராசாவைப் பார்க்கையிலேதைப் பொங்கல் காலத்திலே – கண்ணே நீதயிரும், சோறும் திங்கையிலேமாசி மாசக் கடைசியிலே – கண்ணே நீமாமன் வீடு போகையிலேபங்குனி…

மாம்பழமாம் மாம்பழம் – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020 0
மாம்பழமாம் மாம்பழம்மல்கோவா மாம்பழம்தித்திக்கும் மாம்பழம்அழகான மாம்பழம்அல்வா போன்ற மாம்பழம்தங்க நிற மாம்பழம்உங்களுக்கு வேண்டுமா மாம்பழம்இங்கே ஓடி வாருங்கள்பங்கு போட்டு தின்னலாம். குழந்தை பாடல்கள் – தமிழ் DNA…

கூடி வாழ்வோம் – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 16, 2020 0
பறவை எல்லாம் பாடுச்சுபக்கம் வந்து தேடுச்சு கறவை மாடு சிரிச்சுச்சுகறந்து பாலும் தந்துச்சு..! குடிச்சி பறவை மகிழ்ந்துச்சுகூட்டம் சேர கத்துச்சு பசிக்கு இங்கே வந்திடபாடிப் பாடி அழைச்சிச்சு..!…

ஆயர்பாடி மாளிகையில் – தாலாட்டுப் பாடல்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
ஆயர்பாடி மாளிகையில்தாய்மடியில் கன்றினைப் போல்மாயக்கண்ணன் தூங்குகின்றான்தாலேலோ அவன் வாய்நிறைய மண்ணை உண்டுமண்டலத்தைக் காட்டியபின்ஓய்வெடுத்து தூங்குகின்றான்ஆராரோஓய்வெடுத்து தூங்குகின்றான்ஆராரோ(ஆயர்பாடி…) பின்னலிட்ட கோபியரின்கன்னத்திலே கன்னமிட்டுமன்னவன் போல்லீலை செய்தான் தாலேலோஅந்த மந்திரத்தில் அவர்…

உங்கள் கருத்தை இடுக...