- 1

சினைப்பை நீர்க்கட்டியை தடுக்க என்ன செய்யலாம்?

326 0

சினைப்பை நீர்க்கட்டியை தடுக்க என்ன செய்யலாம்?

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்(பிசிஓஎஸ்) என்கிற சினைப்பை நீர்க்கட்டிகள் உலகில் சுமார் 3 முதல் 10% பெண்களுக்கு வரக்கூடியது.

மாதம் ஒரு சினை முட்டையை சினைப்பை விடுவிப்பது இயற்கையான நிகழ்வு. இந்நிகழ்வில் தடை ஏற்படும் போது சினைப்பையில் சிறு, சிறு, நீர் கட்டி தோன்றி விடுகின்றன.

சினைப்பை நீர்கட்டி என்பது நோயல்ல, குறைபாடுதான் சினைமுட்டைகள் வெளிவராத காரணத்தால் உண்டாகும் இந்த பிரச்சனை பல்வேறு வயதிலுள்ள பெண்களை பாதிக்கலாம்.

டெஸ்டோஸ்டிரோன் அதிகமாக சுரத்தல், கருப்பை விரிவாதல் மற்றும் சீரற்ற மாதவிடாய் போன்ற காரணங்களால் வருகிறது.

என்னத்தான் மருந்து, மாத்திரைகள் இருந்தாலும் இதனை ஒரு சில இயற்கை உணவுகள் மூலம் கட்டுப்படுத்த முடியும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

- 3

  • விட்டமின் டி அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
  • காலை நேர வெயில் படுமாறு உங்களது தினசரிகளை மாற்றிக் கொள்ளலாம். இப்படிச் செய்வதனால் உங்களது மெட்டபாலிசம் தூண்டப்பெற்று மாதவிடாய் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுத்திடும்.
  • சுத்தமான தேங்காய் எண்ணெய் மூலமாக கூட கருப்பை நீர்க்கட்டிகளை நம்மால் வராமல் தடுக்க முடியும். தினமும் ஒரு ஸ்பூன் அளவாவது தேங்காய் எண்ணெயை உணவுகளில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • ஆமணக்கு எண்ணெயை லேசாக சூடு படுத்திக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான பருத்தித் துணியைக் கொண்டு எண்ணெயில் முக்கி அடிவயிற்றில் ஒத்தடம் கொடுத்திடுங்கள் பின்னர் வயிற்றை சுத்தமாக துடைத்துவிடுங்கள் வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை இப்படிச் செய்யலாம்.
  • கழற்சிகாயை ஒரு மாதம் வரை தினமும் சாப்பிட்டு வர வேண்டும். இந்த பருப்புடன் 3 அல்லது 4 மிளகு சேர்த்து உட்கொண்ட பிறகு கொஞ்சம் மோர் சாப்பிடலாம். இவ்வாறு ஒரு மாதம் வரை சாப்பிடுவதால் கருப்பை நீர்கட்டி பிரச்சனைகள் குணமாகும்.
  • தினமும் இலவங்பட்டையை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • ஆளி விதை பொடியை தினமும் தண்ணீரில் அல்லது பழச்சாரில் கலந்து சாப்பிட்டு வந்தால் நீர்க்கட்டி பிரச்சனைகள் குணமாக்கப்படுகிறது.
  • தினமும் காலை வெறும் வயிற்றில், எட்டு துளசி இலையை மென்று சாப்பிட்டு வரலாம் அல்லது துளசியை கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை அருந்தலாம்.
  • தினமும் காலை வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் தேனை கலந்து ஒரு டம்ளர் அளவு குடிக்க வேண்டும்.
  • நெல்லிக்காய் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து ஒரு டம்ளர் அளவில் குடித்து வர இன்சுலின் அளவை கட்டுப்படுத்தி வைக்கிறது.
முக்கிய குறிப்பு

குறிப்பாக இந்த மருந்தை உட்கொள்ளும் போது வேறு எந்த மருந்தையும் எடுத்துக்கொள்ள கூடாது.

சினைப்பை நீர்க்கட்டியை தடுக்க என்ன செய்யலாம்? Source link

Related Post

- 5

பிறப்புறுப்பை சுத்தமாக வைத்து கொள்ளனுமா? பெண்களே கட்டாயம் இதை தெரிஞ்சிகோங்க

Posted by - மார்ச் 20, 2021 0
பிறப்புறுப்பை சுத்தமாக வைத்து கொள்ளனுமா? பெண்களே கட்டாயம் இதை தெரிஞ்சிகோங்க பொதுவாக பெண்கள் உடலை எந்த அளவிற்கு சுத்தமாக வைத்திருப்பது அவசியமோ அதே அளவிற்கு தங்களின் பிறப்புறுப்பை…
- 7

செயற்கை மார்பக சிகிச்சை செய்தால் ஏற்படும் மோசமான விளைவுகள் என்ன?

Posted by - நவம்பர் 10, 2020 0
செயற்கை மார்பக சிகிச்சை செய்தால் ஏற்படும் மோசமான விளைவுகள் என்ன? இன்றைய காலத்தில் செயற்கை மார்பக சிகிச்சைகள் அதிகளவில் செய்யப்படுகின்றன. இந்த அறுவை சிகிச்சையின் போது, செயற்கையான…
- 9

பெண்கள் மாதவிடாய் காலங்களில் சர்க்கரை சாப்பிடுவது இவ்வளவு ஆபத்தா?

Posted by - அக்டோபர் 21, 2020 0
பெண்கள் மாதவிடாய் காலங்களில் சர்க்கரை சாப்பிடுவது இவ்வளவு ஆபத்தா? பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் மிகந்த சிக்கல்கள் நிறைந்த நாட்களாக காணப்படும். ஏனெனில் இந்த சமயங்களில் வயிற்று…
- 11

மாதவிடாய் காலங்களில் நிம்மதியான தூக்கம் வேண்டுமா? இதை மட்டும் செய்யுங்க நல்ல தூக்கம் வரும்

Posted by - அக்டோபர் 21, 2020 0
மாதவிடாய் காலங்களில் நிம்மதியான தூக்கம் வேண்டுமா? இதை மட்டும் செய்யுங்க நல்ல தூக்கம் வரும் பொதுவாக பெண்கள் தங்களுடைய மாதவிடாய் காலங்களில் கடுமையான வயிற்று வலி காரணமாக…
- 13

இந்தியாவிலேயே நம்பர் ஒன் பணக்காரப் பெண் இவர் தான்… யார் இவர்? சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Posted by - அக்டோபர் 21, 2020 0
இந்தியாவிலேயே நம்பர் ஒன் பணக்காரப் பெண் இவர் தான்… யார் இவர்? சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? இந்தியாவில் நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹெச்.சி.எல் நிறுவனத்தின்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன