- 1

சிறுதானியங்களின் 30 விதமான பயன்கள்

713 0

சிறுதானியங்களின் 30 விதமான பயன்கள்

சிறுதானியங்கள்:

நம் முன்னோர்களால் உண்ணப்பட்டு வந்த ஆரோக்கியமான உணவுகளில் முதல் இடத்தினைப் பிடிப்பது சிறுதானியங்கள் தான். சிறுதானியங்கள் நம் பாரம்பரிய உணவு முறையின் அரசியாகக் கருதப்படுகிறது. இன்று நாம் உண்ணும் அரிசியின் வழிமரபு தான் இந்தச் சிறுதானியங்கள். இவை நெற்பயிரைப் போன்றே வளர்க்கப்படும் தானிய வகையாகும். அரிசியின் அளவைவிட சிறிய அளவினைப் பெற்ற சிறுதானியங்கள் குறுகிய காலப் பயிராகும். அரிசி போன்றவற்றிற்கு நல்ல மழை தேவைப்படும். ஆனால் இந்தச் சத்து மிக்க சிறுதானியங்கள் மிதமான தட்ப வெப்ப நிலையிலும் சாதாரண மண் வளத்திலும் செழித்து வளரும். ஆதிகாலத்தில் தொடங்கி இன்று நாம் வாழும் நவீன காலம் வரை மனித இனம் பயன்படுத்தும் உணவு வகைகளில் சிறுதானியங்கள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளது. எனவே இதனை முதல் தானிய வகை உணவு என்று கூடச் சொல்லலாம்.

ஆதி காலத்தில் மனிதன்  காய்கற்களையும் பழங்களையும் பச்சையாக உண்டு வந்தான். இப்பூமியில் மனிதன் கண்டுபிடித்த முதல் கண்டுபிடிப்பு நெருப்பு தான். இதன் மூலமாக் தான் மனிதன் இந்நவீன காலம் வரை ஏதேனும் ஒன்றைக் கன்டுபிடித்துக் கொண்டே இருக்கின்றான். நெருப்பைக் கண்டுபித்ததும் காய்கறி மற்றும் பழங்களைத் தீயில் சுட்டு சாப்பிட்டு வந்தான். அதன் பிறகு தான் அரிசியைக் கண்டு பிடித்தான். முதன் முதலில் அரிசி மூங்கில் மரத்திலிருந்து தான் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அதற்கு மூங்கிலரிசி என்று பெயரிட்டன் இதன் வழியாக நெற்பயிரைக் கண்டு பிடித்து அதற்குப் பெயர்களும் சூட்டினான். உதாரணமக சம்பா நெல் மற்றும் குதிரைவால் சம்பா போன்றவை ஆகும்.

சிறுதானியம் பயன்கள்

மனிதன் சிறுதானிய வகைகளையும் பயிறு வகைகளையும் கண்டு பிடித்தான். சிறுதானியங்களை நவ தானியங்கள் என்றும் அழைக்கப்படுகிறது.

சிறுதானியங்களில் பெரும்பாலானவை குறுகிய காலத்தில் அதாவது பயிரிடப்பட்டு 65 நாட்களுக்குள் விளைச்சலுக்கு வருபவை ஆகும்.

ஒவ்வொரு சிறுதானியமும் தனித்தனி மணத்தினையும், சுவையையும் மற்றும் அளவினையும் கொண்டுள்ளது. நம் முன்னோர்கள் “உணவே மருந்து” என்று உண்ணும் உணவிலேயே சத்துக்களையும் பெற்றனர். நோய்களையும் குணமக்கினர். ஆனால் இன்று அதிவேகத்தில் வளர்ந்து வரும் நாம் மட்டுமல்லாது நம்முடைய குழந்தைகளும், இளைஞர்களும் மருந்தே உணவு என்ற நிலைக்கு ஆளாகிவிட்டனர். இதற்குக் காரணம் நாகரீகம் என்ற பெயரில் நாம் பின்பற்றி வரும் வெளிநாட்டுக் கலாச்சாரமும் உணவு முறைகளுமே ஆகும்.

இன்று குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் மைதாவில் தயாரிக்கப்பட்ட‌ பீட்சா, பர்கர் போன்ற அயல்நாட்டு துரித உணவுகளையே உண்கின்றனர். இதனால் நம் உடல் நம் நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு ஒத்துழைக்காமல் நோய் எதிர்ப்புச் சக்தியை இழந்து விடுகிறது. எனவே நம் உடல் நோய்களின் இருப்பிடமாக மாறி உள்ளது. இத்தகைய தீங்குகளிலிருந்து நம்மையும் நம் பாரம்பரியத்தையும் மீட்டெடுக்க ஒரே தீர்வு நாம் பழங்காலத்திற்குச் செல்ல வேண்டும். அதாவது பழங்கால உணவுப் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். நம் நாட்டின் பிரதான உணவாகக் கருதப்படும் அரிசியில் கூடச் சத்துக்கள் குறைவாக உள்ளன. ஆனால் சிறுதானியங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கின்றது. இவ்வாறு நாம் சிறுதானியங்களை உட்கொள்ளும் போது நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி பன்மடங்காக உயர்கிறது. உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளும் குறைக்கப் பட்டு உடல் பருமன் மற்றும் இருதய நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

வெவ்வேறு சிறுதானியங்களின் பெயர்கள்:

. எண்தமிழ்ப் பெயர்: சிறுதானியம்ஆங்கிலப் பெயர்: Millet
1குதிரைவாலிபர்ன்யார்டு மில்லட் (Barnyard Millet)
2கேழ்வரகுஃபிங்ஞர் மில்லட் (Finger millet)
3தினைஃபாக்ஸ்டெயில் மில்லட் (Foxtail Millet)
4வரகுபுரூம்கார்ன் மில்லட் (Broomcorn Millet)
5சாமைலிட்டில் மில்லட் (Little Millet)
6கம்புபேர்ல் மில்லட் (Pearl Millet)
7பனிவரகுபிரஸோ மில்லட் (Proso Millet)
8சோளம்சோர்கம் (Sorghum)

 

சிறுதானியங்கள் என்பவை சிறிய அளவில் மற்றும் கோள வடிவில் உள்ளவை ஆகும். இவை வெள்ளை, சாம்பல், மஞ்சள் மற்றும் ஆழ்ந்த சிவப்பு நிறங்களில் கூட உள்ளன. தினையின் தாவரவியல் பெயர் “எலுசின் கொரகனா” (Eleusine coracana). தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, சிறுதானியங்கள் முதன் முதலில் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு ஆசியாவில் பயிரிடப்பட்டது என்றுத் தெரிகிறது. எனினும் நமது முன்னோர்கள் சிறுதானியங்களை முதன்மை உணவாக உண்டுள்ளனர் என்பதற்கு தமிழரின் சங்க இலக்கியங்களே பெரிய உதாரணம் ஆகும். உலகில் பெரும்பாண்மையான வணிகத் தானிய உற்பத்திகள் சீனா, இந்தியா, கிரீஸ், எகிப்து மற்றும் ஆப்பிரிக்காவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

சிறுதானியம்

சிறுதானியங்களில் ஊட்டச்சத்து நிறைந்துள்ளன. இவற்றில் 15 சதவீதம் புரதமும் அதிக அளவு நார்ச்சத்தும் உள்ளது. மேலும் இவை வைட்டமின் ‘ஈ’, வைட்டமின் ‘பி’ காம்ப்ளக்க்ஸ், நியாசின், தயமின் மற்றும் ரிபோபிளேவின் போன்றவற்றிற்கு மிகப்பெரிய ஆதாராமாக விளங்குகின்றது.

சிறுதானியங்களின் பயன்கள்:

சிறுதானிய உணவு உண்பதால் கிடைக்கும் 30 விதமான நன்மைகளைக் கீழே பார்க்கலாம்.

1) ஊட்டச்சத்து நிறைந்தது:

உடலின் சரியான செயல்பாட்டிற்குத் தேவையான பல ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் சிறுதானியங்களில் நிறைந்துள்ளன. இரத்த அணுக்களின் உற்பத்தி மற்றும் இரத்த ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கத் தேவைப்படும் இரும்புச்சத்து மற்றும் செம்பு (காப்பர்) ஆகியன நிறைந்த அளவில் உள்ளன. மேலும் சிறுதானியங்களில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் பாஸ்பரஸ் உள்ளது. இந்தத் தாதுக்கள் அனைத்து தாவர ஊட்டச்சத்துடன் சேரும் போது அனைத்து வகையான நோய்களுக்கும், புற்றுநோய்களுக்கும் எதிராக ஒரு வல்லமை மிக்கப் பாதுகாப்பை உடலில் உருவாக்குகிறது. சிறுதானியங்களில் அதிக அளவு இருப்புச்சத்து உள்ளது. எனவே இது இரத்தசோகையைக் (Anemia) குணப்படுத்த உதவும் சிறந்த உணவாகக் கருதப்படுகிறது. சிறுதானியங்களில் கால்சியமும் உள்ளது. எனவே சிறுதானியங்களை வழக்கமான முறையில் உணவில் சேர்த்துக் கொண்டால் எலும்புகளை வலுவடையச் செய்கிறது.

2) கரோனரி தமனி கோளாறுகளைத் தடுக்கிறது:

சிறுதானியங்களை அதிக அளவு உட்கொள்வது உடலில் உள்ளை டிரைகிளிசரைடுகளின் அளவினைக் குறைக்க உதவி செய்கிறது. சிறுதானியங்கள் இரத்தத் தட்டை அணுக்கள் தடிமன் ஆவதைத் தடுத்து இரத்தத்தை திரவ நிலையிலேயே வைத்துக் கொள்ள உதவுகிறது. இதனால் வாதம் மற்றும் கரோனரி தமனி கோளாருகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு பெருமளவில் குறைக்கப் படுகிறது.

3) அதிக அளவு வைட்டமின் ‘பி’:

சிறுதானியங்களில் உள்ள வைட்டமின் ‘பி’ கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்பினைத் திரமையாக உடைத்து அதனை ஆற்றலாக மாற்றுகின்றது. வைட்டமின் ‘பி’ இரத்தத்தில் உள்ள ஹோமோசைஸ்டீன் (Homocysteine) அளவைக் குறைக்கிறது. இவ்வாறு குறைப்பதன் மூலம் கொழுப்புகள் ஒன்றோடொன்று சேர்ந்து கொழுப்புக் கட்டியாக மாறுவதும், கொழுப்புகள் உடலிலேயே தங்குவதும் தடுக்கப்படுகிறது. நியாசின் இரத்த ஓட்டத்தின் போது கொழுப்பு எடுத்துச் செல்லப்படுவதைத் தடுக்கிறது. மேலும் நல்ல கொழுப்பு எனப்படும் உயரடர்த்தி லிப்போ புரதக் கொழுப்பின் (Low-density lipoprotein) அளவினை இரத்தத்தில் அதிகரிக்கச் செய்கிறது. இது இரத்த நாளங்களின் தடிப்பு (Atherosclerosis) மற்றும் இரத்தக் கசிவு (Hemorrhage) ஏற்படுவதிலிருந்தும் இதயத்தைப் பாதுகாக்கிறது.

4) பசையம் (குளுட்டன்) அறவே இல்லை:

காய்கறிகளை மட்டும் உண்ணும் சைவப் பிரியர்களால் மிகவும் நேசிக்கப்படும் உணவு சிறுதானியங்களாகும். ஏனெனில் சிறுதானியங்களில் நிறைந்திருக்கும் புரதச்சத்து தான் இதற்குக் காரணம். தினசரி கார்போஹைட்ரேட் மூலம் தேவைப்படும் புரதச்சத்தின் அளவு இறைச்சி உணவுகளைவிட சிறுதானியங்களில் அதிக அளவில் கிடைக்கிறது. இறைச்சி உணவுகளில் உள்ள நிறைவுற்ற கொழுப்பு மற்றும் பிற ஆரோக்கியமற்ற பொருட்கள் போன்ற தேவையற்ற கூடுதல் பொருட்கள் சிறுதானியங்களில் இல்லை. சிறுதானியங்களில் இருக்கும் புரதக் கூட்டமைப்பு கோதுமையில் உள்ளது போலவே இருக்கிறது. ஒரே ஒரு விதிவிலக்கு என்னவென்றால் அதிகச் சத்துக்கள் அடங்கிய சிறுதானியங்களில் பசையம் (குளுட்டன் ‍ Gluten) எனப்படும் ஒட்டும் தன்மை கொண்ட பசை போன்ற பொருள் காணப்படுவது இல்லை. ஆனால் முழுக் கோதுமையில் அதிக அளவு பசையம் (க்குளுட்டன்) உள்ளது. பசையம் சிறுதானியங்களில் இல்லாத காரணத்தால் செரிமானத் தன்மையை அதிகமாக்குகிறது.

5) விரைவான உடல் எடை இழப்பு:

சிறுதானியங்கள் டிரிப்டோபான் (Tryptophan) எனப்படும் அமினோ அமிலத்தைக் கொண்டுள்ளது. இந்த அமினோ அமிலம் பசியின்மையைக் குறைத்து சரியான எடையை நிர்வகிக்க உதவுகிறது. டிரிப்டோபான் மூலம் உணவு செரிமானத்தை மெதுவான வேகத்தில் நடத்துகிறது. இதன்மூலம் நீண்ட காலத்திற்கு வயிற்றினை முழுமையாக வைத்திருக்க உதவுகிறது. சிறுதானியங்களில் நார்ச்சத்து மிகுதியாக உள்ளது. மேலும் அடிக்கடி பசிப்பதைத் தடுத்து அதிகமாக உண்பதையும் தடுக்கிறது. இதனால் உடல் எடையை இழக்க விரும்புபவர்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை வீதம் தங்களின் முக்கிய உணவில் ஒன்றாகச் சிறுதானியங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

6) க்கோலான் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது:

சிறுதானியங்களில் நார்ச்சத்து மற்றும் தாவர ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நார்ச்சத்து மாற்றும் தாவர ஊட்டச்ச சத்துக்கள் இவ்விரண்டும் சேர்ந்து க்கோலான் புற்றுநோய் (Colon cancer) வளரும் அபாயத்தைக் குறைக்கும் என்று நம்பப்படுகிறது. லிக்னைன் (Lignan) எனப்படுவது சிறு தானியங்களில் உள்ள தாவர ஊட்டச்சத்தானது பாலூட்டிகளின் குடலில் உள்ள லிக்னைனாக மாற்றுகிறது. இவ்வாறு மாற்றப்படும் லிக்னைன் மார்பகப் புற்று நோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. உண்மையில் சிறுதானியங்களை உட்கொள்வது மூலம் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயத்திலுருந்தும் 50% சதவீதம் குறைக்கலாம்.

7) உயர் இரத்த அழுத்தத்தினைக் குறைத்தல்:

தமனிகளில் உள்ள‌ உட்சுவரினை தளர்த்துவதற்கு சிறுதானியங்களில் உள்ள‌ மெக்னீசியம் பயன்படுகிறது. இவ்வாறு தமனியின் உட்சுவர் தளர்வதனால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவது குறைக்கப்படுகின்றது. மேலும் இது மூச்சுத்தடை நோய் (ஆஸ்த்துமா) மற்றும் ஒற்றைத் தலைவலிகள் ஏற்படுவதன் அளவினைக் குறைக்கின்றது.

8) பசையம் ஒவ்வாமை நோயைத் (செலியாக் நோய்) தடுத்தல்:

பசையம் ஒவ்வாமை நோய் (Celiac disease) என்பது சிறுகுடலைச் சேதப்படுத்தும் ஒரு வகையான நோய் ஆகும். இந்நோய் ஏற்படுவதினால் சிறுகுடல் பாதிக்கப்பட்டு உணவில் இருந்து ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது. இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களால் பசையம் (குளூட்டன்) போன்ற பசைத்தன்மைக் கொண்ட பொருளைத் தாங்கிக் கொள்ள முடியாது. இதன் காரணமகத் தான் சிறுதானியங்களை உட்கொள்ள அதிகளவில் பரிந்துரை செய்யப்படுகிறது. சிறுதானியங்களில் முற்றிலுமாகப் பசையம் (குளுட்டன்) என்ற பசையம் கிடையாது என்பதை நான்காவது நன்மையில் பார்த்தோம். சிறுதானியங்களை முதலிலிருந்தே சாப்பிட்டு வந்தால் இந்நோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

9) நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது:

சிறுதானியங்களில் குறைந்த கிளைசிமிக் குறியீடு இருப்பதனால் செரிமானத்திற்கான செயல்முறைகள் குறைந்த அளவில் மெதுவாக நடைபெறுகின்றது. இதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை ஒரு நிலையான விகிதத்தில் வைத்துக் கொள்ள உதவுகிறது. சிறுதானியங்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது. மேலும் நீரிழிவு அல்லாத சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அதிலும் குறிப்பாக வைகை-2 நீரிழிவு எனப்படும் நீரிழிவு நோய். மேலும் வழக்கமாக உட்கொள்ளப்படும் கேழ்வரகு நீரிழிவு நோயாளிகளுக்கு மிகுந்த பயனளிக்கிறது.

10) நார்ச்சத்து நிறைந்தது:

சிறுதானியங்களில் நார்ச்சத்து மிகுந்துள்ளது. எனவே சிறுதானியங்கள் செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது. ஆதாலால் இவை மிகுந்த செரிமானத் தன்மை மற்றும் ஒவ்வாமை (Allergenic) இல்லாத தானியங்களாகக் கருதப்படுகிறது. சிறுதானியங்களின் மலமிளக்கி பண்புகள் (Laxatives) மலச்சிக்கலுக்குச் சிறந்த தீர்வாக அமைகின்றன. சிறுதானியங்களில் உள்ள லெசித்தின் மற்றும் மீத்தியோனின் கல்லீரலில் இருந்து உடலுக்குத் தீங்குகளை விளைவிக்கும் கொழுப்பினை வெளியேற்ற உதவுகின்றன.

நார்ச்சத்து அதிகமுள்ள உணவினை உட்கொள்ளுவதன் மூலம் பித்தப்பையில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகின்றன. அதுவும் குறிப்பாப் பெண்கள் நார்ச்சத்து மிகுதிஆன உணவினை உட்கொண்டால் பித்தப்பையில் கற்கள் உருவாக்வதார்கு சரியான தீர்வாக அமையும். குடல்களில் உணவு செல்லும் காலத்தை எளிதில் கரையாத நார்ச்சத்து அதிகப்படுத்துகிறது. மேலும் பித்தப்பையில் கற்கள் உருவாகுவதற்குக் காரணமான பித்த அமிலங்களின் சுரப்பைக் குறைக்கிறது. நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவினை உண்ணாதவர்களுடன், கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து உள்ள உணவுப் பொருட்களை உண்பவர்களுடன் ஒப்பிடும் போது, நார்ச்சத்து உண்பவர்களுக்கு 13 சதவீதம் பித்தப்பை கற்கள் உருவாவது குறைக்கப்படுவதாகப் பல ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

11) உயிர்வளியேற்ற எதிர்ப்பொருளின் ஆதாராம் :

சிறுதானியங்களில் உள்ள அதிக அளவிலான உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள்கள் (Antioxidants) உடலில் உள்ள தீவிரமான நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராடுகின்றன. மேலும் உயிர்வளியேற்ற எதிர்ப்பொருகள் மிக விரைவில் வயதாதாவற்கான செயல்முறையின் வேகத்தைதையும் குறைக்கின்றன. இதனாலேயே மருத்துவர்கள் சிறுதானியங்களை மிகப்பெரும் மருந்தாகச் சிறியவர்கள் முதல் பெரியோர் அனவருக்கும் பரிவ்துரைக்கின்றனர்.

12) தசைகள் சீரழிவதைக் குறைக்கிறது:

சிறுதானியங்கள் அதிகப் புரதச்சத்து மிகுந்த தானியமாகவும் மற்றும் அமினோ அமிலங்களில் ஒன்றான லைசினையும் கொண்டுள்ளது. இவை இரண்டும் தசைகள் குறைபாட்டைக் குறைத்து வலிமையான தசைகள் உருவாகுவதற்கு உதவுகிறது. எனவே சிறுதானியங்கள் தசைகளுக்கு மிகவும் ஏற்ற உணவாக இருக்கிறது.

13) தூக்கக் குறைபாட்டினைக் குறைக்கிறது:

சிறுதானியங்களில் உள்ள டிரிப்டோபேன் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் செரோபோனின் அளவை அதிகப் படுத்துகிறது. எனவே ஒவ்வொரு இரவும் ஒரு குவளை சிறுதானியங்களால் செய்யப்படும் கஞ்சியினைக் குடித்து வந்தால் ஒலியற்ற மற்றும் அமைதியான தூக்கத்தினைப் பெற முடியும். தூக்கமின்மையால் அல்லல் படுபவர்கள் இரவில் சிறுதானியங்களை உண்ணலாம்.

14) மார்பகப் பால் உற்பத்தி அல்லது தாய்ப்பால் உற்பத்தி அதிகரிக்கிறது:

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் பெண்கள் தங்கள் உணவில் சிறுதானியங்களில் ஒன்றான கேழ்வரகை அதிக அளவில் சேர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஏனென்றால் கேழ்வரகு உடலின் மார்பகப் பால் உற்பத்தியை அதிகரிக்கிறது. அதுமட்டுமல்லாது தாய் தன் குழந்தைக்கு நீண்ட காலம் உணவளிக்க உதவுகிறாது. எனவே கேழ்வரகின் சுகாதார நலன்கள் நமக்கு மிகுந்த வியப்பை உண்டு பண்ணுகின்றன.

15) மாதவிடாய் கால‌ முதுகுவலிக்கு நிவாரணம்:

சிறுதானியங்கள் மாதவிடாய் ஏற்படும் பெண்களுக்குச் சிறந்த உணவாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் சிறுதானியங்களில் உள்ள உயர்ந்த அளவு மெக்னீசியம் மாதவிடாய் சுழற்சியின்போது பெண்களுக்கு ஏற்படும் தாங்க முடியாத வலி மற்றும் முதுகுவலியினை வராமல் தடுக்கிறது.

16) அதிக அளவு பாஸ்பரஸ்:

சிறுதானியங்களில் பாஸ்பரஸின் அளவு அதிகமாக உள்ளது. பாஸ்பரஸ் உடலில் உள்ள் செல்களின் வடிவத்தைக் கட்டமைக்க உதவுகிறது. சிறுதானியங்களில் உள்ள பாஸ்பரஸ் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை அளிக்கும் “அடினைன் டிரைபாஸ்ட்” (Adenosine triphosphate – ATP) எனப்படும் கலவைகள் உள்ளன. இவை உடலின் ஆற்றலைப் பலமடங்காக அதிகரிக்கின்றது. மேலும் பாஸ்பரஸ் உடலின் அத்தியாவசியமான லிப்பிடு (Lipid) கூட்டமிப்பினைக் கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக உயிரணு சவ்வுகள் மற்றும் நரம்பு மண்டல அமைப்பு போன்றவற்றிற்கு பாஸ்பரஸ் என்பது இன்றியமையாத தேவையாக உள்ளது. ஒரு கோப்பை சிறுதானியங்களில் ஏதேனும் ஒன்றை உட்கொண்டால் ஒரு நாளைக்கு தேவைப்படும் பாஸ்பரஸின் அளவில் 17 சதவீதத்தினை பூர்த்தி செய்கிறது.

சிறுதானியங்களை உண்பதால் சருமத்திற்கு கிடைக்கும் பயன்கள்:

17) தோலின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கின்றது:

சிறுதானியங்களில் “எல்‍…லைசின்” அல்லது விளம்பரங்களில் “எல்‍…புரோலைன்” என்று அழைக்கப்படும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை உடலில் கொலாஜெனை (Collagen) (தமிழில்: வெண்புரத இணைப்புத்திசு) உருவாக்க உதவுகின்றன. இத்தகைய கொலாஜென் சருமத்தின் திசுக்களுக்கு ஒரு அமைப்பைக் கொடுக்கிறது. இவ்வாறு சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுவதன் மூலம் கொலாஜென் அளவு அதிகரிக்கிரித்து சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை (Skin Elasticity) மேம்ப‌டுத்துகிறது. இதனால் தோலில் ஏற்படும் சுருக்கங்கள் குறைவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

18) விரைவில் முதுமையடைவதைத் தடுக்கிறது:

உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் (Antioxidants) சிறுதானியங்களில் அதிக அளவில் உள்ளன என்பதை முன்னரே கண்டோம். இந்த உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள்கள் அதிக அளவில் உள்ள சிறுதானியத்தை  உணவில் எடுத்துக் கொள்ளும் போது மன அழுத்தத்தை எதிர்த்துப் போரடுகின்றன. மேலும் உடலில்  உள்ள தேவையற்ற தீவிரமானவற்றை நடுநிலையாக உதவுகின்றன.

மேற்கூறப்பட செயல்களால் தோலின் மீது தென்படும் வயதாவற்கான அறிகுறிகளைத் தலைகீழாக மாற்ற உதவுகிறது. இவை சரும செல்களுக்குப் புத்துயிர் அளிப்பதன் மூலம் சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. சிறுதானியங்களில் உள்ள யூபிகயிணோன் (Ubiquinone) முகத்தில் ஏற்படும் சுருக்கங்களைக் குறைப்பதற்காக அழுகுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.

19) வடுக்களைக் குறைக்கிறது:

திசுக்களில் ஏற்படும் வடுக்கள் ஆரோக்கியமான சருமத்தைவிட வித்தியாசமான செல் அமைப்பினைக் கொண்டுள்ளது. மேலும் வடுக்கள் ஏற்பட்ட சருமம் கடினத்தன்மையுடன் காணப்படுகிறது. சிறுதானியங்களில் காணப்படும் உயிர்வளியேற்ற எதிர்ப்பொருளில் ஒன்றான ஆலியம் (Alium) காணப்படுகிறது. இது வடுக்கள் நிறைந்த திசுக்களில் இரத்த ஓட்டத்தினை அதிகரிக்க உதவுகிறது. ஆலியம் புதிய தோல்வளர்ச்சியில் கலந்து வடுக்கள் குறைவதற்குப் பயன்படுகிறது. இது தோல் பரமரிப்பு அல்லது தோல் பழுது பார்க்கும் (Skin Repair) அமைப்பின் வேகத்தை அதிகரிக்கிறது. மற்றும் தோலில் அமைப்பினை சேதமடைவதிலிருந்து தடுக்கிறது.

20) சூரியன் மூலம் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது:

சிறுதானியங்களில் உள்ள செலினியம், வைட்டமின் ‍சி மற்றும் வைட்டமின்-பி போன்றவை சூரியனால் தோலில் ஏற்படும் சேதம் மற்றும் தோல் புற்றுநோய்க்கு எதிராகச் சருமத்தைப் பாதுகாக்கிறது. சூரியனால் ஏற்படும் சேதத்தினால் தோலின் நிறம் மந்தமாவதுடன் மேலும் தோலினை உயிரற்றதாக மாற்றி விடுகிறது. ஆனால் சிறுதானியங்களில் உள்ள சத்துக்கள் புதிய செல்கள் வளர்வதை ஊக்குவிக்கின்றன. மேலும் தோலினை இளமையாகவும், பொலிவுடனும் தோற்றமளிக்க உதவுகின்றன. மேலும் இந்தச் சத்துக்கள் சூரிய ஒளியுடன் தொடர்புடைய தோலின் நிறமாற்றம் மற்றும் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களைக் குறைக்கவும் பயன்படுகிறது.

21) நிறத்தைனை அதிகரிக்கிறது:

சிறுதானியங்களில் வைட்டமின்-ஈ நிறைந்து காணப்படுகிறது. இந்த வைட்டமின்-ஈ தோலுக்கு ஒரு வியத்தகு வைட்டமினாகக் கருதப்படுகிறது. இந்த வைட்டமின்-ஈ தோலின் அடுக்குகளில் ஊடுருவிச் சென்று இயற்கையாகவே காயத்திற்கான சிகிச்சை (Wound healing) தன்மைய அதிகரிக்கிறது. இது தோலிற்கு ஒரு பாதுகாப்பான அடுக்கினை ஏற்பட்த்துகிறது. இதனால் நுண்ணுயிரிகளின் அபாயத்திலிருந்து காயத்தினைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது. சிறுதானியங்களில் உள்ள அதிகப்படியான வைட்டமின்-ஈ யினால் தோலின் நிறத்தை அதிகரிக்க முடியும்.

22) இளமையான சருமம் பெறுதல்:

அதிக அளவு சிறுதானியங்களை உட்கொள்வதன் மூலம் சருமத்தை மேலும் இளமையுடனும் மிருதுவான தோற்றத்துடனும் விளங்கச் செய்யும் செல்களைப் பாதுகாக்கின்றன. எனவே இவை சேதமடைந்த செல்களைப் புதுப்பிக்க உதவுகிறது. மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் புதுப்பிக்கப்பட்ட செல்களை மேலும் பலப்படுத்துகிறது.

23) உடலின் ஈரப்பத்த்தினை அதிரிக்கிறது:

சிறுதானியங்களை அதிக அளவில் சாப்பிடுவதன் மூலம் அவை இயற்கையான ஈரப்பத்தினைத் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. இவை மந்தமான தோற்றம் மற்றும் வறண்ட சருமத்தினை ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியுடனும் விளங்கச் செய்கிறது.

24) முகப்பருவினைக் குறைக்கிறது:

சிறுதானியங்களில் காணப்படும் ஒரு வகையான உயிர்வளியேற்ற எதிர்ப்பொருளானக் கொழுப்புத் திசு (Lipoic) உயிரணு வளர்சிதை மாற்றம் சுழற்சியினை அதிகரிப்பதன் மூலம் மதிப்பு மிக்க அழற்சியற்ற விளைவை உருவாக்குகிறது. இத்தகைய அழற்சியற்ற பொருள் உடலின் இரத்த ஓட்டத்தினை அதிகரிப்பதன் மூலம் முகத்தில் ஏற்படும் முகப்படுக்கள் மற்றும் தோலின் சுருக்கங்களைக் குறைக்க உதவுகிறது.

தினை

சிறுதானியங்களால் கூந்தலுக்குக் கிடைக்கும் பயன்கள்:

25) மயிர்க்கால்களை வலிமையாக்குகிறது:

சிறுதானியங்களில் புரத்ச்சத்து நிறைந்துள்ளன. முடி இழப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளில் முதன்மையானவை இந்தச் சிறுதானியங்கள். ஆரோக்கியமான மற்றும் வலிமையான முடிகளுக்குப் போதுமான அளவுப் புரதம் எடுத்துக் கொள்வது அவசியமாகிறது. பெரும்பாலான முடிகள் புரதத்தினாலேயே செய்யப்படுகின்றன. முடி செல்களின் உள்புறம் காணப்படும் ஒருவகைப் புரதம் கெரடின் (Keratin) என்று அழைக்கப்படுகிறது. இந்த கெரடின் என்ற புரதம் தான் ஒவ்வொரு முடியின் கலவைக்கும் நேரடிப் பொருப்பாக உள்ளது. புரதத்தின் பற்றாக்குறை காரணமாக அல்லது புரதம் இல்லாத காரணத்தினாலும் கடுமையான முடி இழப்பு நேரிடலாம். எனவே சிறுதானியங்களைப் போதுமான அளவில் உட்கொள்ளும் போது முடி வேகமாக வளர்ச்சியடைகிறது.

மெலும் சிறுதானியங்கள் முடியினை வலுவானதாகவும் உடைந்து போகும் தன்மையினையும் குறைக்கிறது.

26) உச்சந்தலையில் ஏற்படும் வீக்கம், அரிப்பு மற்றும் வழுக்கை ஏற்படுவதைத் தடுகிறது:

சிறுதானியங்களில் உள்ள மெக்னீசியம் உச்சந்தலையின் வீக்கத்தினைக் குறைப்பதன் மூலம் உச்சந்தலையின் நிலைகளான அக்ஸிமா, தடிப்பு தோல் அழற்சி (Psoriasis) மற்றும் பொடுகு (Dandruff) போன்றவற்றிலிருந்து விடுபட உதவுகிறது. முன்கூட்டியே வழுக்கை ஏற்படுவதிலிருந்தும் விடுபடச் சிறுதானியங்கள் நன்மை அளிக்கின்றன. சிறுதானியங்களை தொடர்ந்து உண்பது வளர்சிதை மாற்ற நோய்த்தாக்கத்திலிருந்து விடுபடவும், உடல்நலக் குறைவின் காரணமாக இளம் வயதிலேயே வழுக்கை ஏற்படுவதைத் தடுக்கவும் உதவுகிறது.

27) முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது:

சிறுதானியங்கள் உச்சந்தலையின் இரத்த ஓட்டத்தினை மேம்படுத்துவதன் மூலம் முடி வளர்ச்சியினை ஊக்குவிக்கிறது.

28) முடி உதிர்வதைக் கட்டுப்படுத்துகிறது:

மன அழுத்தம் உடலில் கார்டிசோல் (Cortisol) அளவினை அதிகரிக்கிறது. இவ்வாறு கார்டிசோல் அதிகரிப்பது முடி அதிக அளவில் உதிர்தலுக்கு வழிவகுக்கிறது. சிறுதானியங்களில் உள்ள மெக்னீசியம் உடலில் உள்ள கார்டிசோலின் அளவைக் குறைப்பதன் மூலம் முடி உதிர்வது கட்டுப்படுத்தப்படுகிறது.

29) இளநரையைத் தடுக்கிறது:

இளம் வயதிலேயே முடி நரைப்பது அல்லது செம்பட்டையாக மாறுவது சிசுக்களில் ஏற்படும் ஆக்ஸினனேற்றம் மூலம் நடைபெறுகிறது. சிறுதானியங்களில் உள்ள சக்தி வாய்ந்த உயிர்வளியேற்ற எதிர்ப்பொருட்கள் (Antioxidants) திசுக்களில் ஏற்படும் அரிப்பைத் தடுக்கின்றன. இதன்மூலம் விரைவில் முதிர்ச்சி அடைந்து முடிகள் நரைப்பதற்கான வாய்ப்புகள் பெருமளவில் குறைக்கப்படுகின்றன. இதனால் சிறுதானியங்களை இளைஞர்கள் இளஞிகள் அதிகம் பயன்படுத்துவது நல்லது.

30) கீழ்வாதம் எலும்பு முறிவிலிருந்து மீள உதவுகிறது:

சிறுதானியங்களில் ஒன்றான கேழ்வரகினை உணவில் சேர்த்துக் கொண்டால் கீழ்வாதம் (Rheumatism) வருவது தடுக்கப்படுகிறது. மேலும் எலும்பு முறிவிலிருந்து மிக விறைவில் மீள உதவி செய்கிறது.

தற்போதய காலக்கட்டத்தில் மிகவும் புறக்கணிக்கப்பட்ட உணவு வகை சிறுதானியமாகும். சிறுதானியங்களில் நிறைதுள்ள ஊட்டச்சத்துக்களை மஅத்ற்ற உணவு வகைகளுடன் ஒப்பிடும்போது அதிக அளவில் உள்ளன என்பதை தெரியாமலே நாம் இருந்துவிட்டோம். ஆனால் இப்போது இந்தக் கட்டுரையின் மூலைம் சிறுதானியங்களின் நம்பமுடியாத நன்மைகளைப் பற்றித் தெரிந்து கொண்டிருக்க முடியும. எதற்காகக் காத்திருக்கிறீர்கள்? இப்பொழுதே சிறுதானியங்களை உங்களின் உணவுப்பழக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை அனுபவித்து மகிழுங்கள்.

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

English Summary:
Millets are used as traditional food in olden days. In this article 30 health benefits of millets explained in simple Tamil.

சிறுதானியங்களின் 30 விதமான பயன்கள்

Source link

Related Post

- 6

மார்பக கட்டியை கரைக்கும் அற்புதமான இயற்கை வைத்தியம்

Posted by - நவம்பர் 27, 2020 0
மார்பக கட்டியை கரைக்கும் அற்புதமான இயற்கை வைத்தியம் நமது உடலில் ஏற்படும் ஒருசில உடல்நலக் குறைபாடு தொடர்பான நோய்களை குணப்படுத்துவதற்கு ஆங்கில மருத்துவத்தை விட இயற்கையான மருத்துவம்…
- 10

உங்கள் செக்ஸ் ஆரோக்கியத்தை மேம்படுத்த 8 வழிகள்

Posted by - ஏப்ரல் 1, 2020 0
உங்கள் செக்ஸ் ஆரோக்கியத்தை மேம்படுத்த 8 வழிகள் உங்கள் செக்ஸ் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்வது முக்கியம். ஏனெனில், நோய்கள் மற்றும் நோய்த்தொற்றிலிருந்து காப்பதோடு, உங்களுக்கு உற்சாகம் அளித்து, செக்ஸ்…
- 13

கட்டிகள் பழுத்து உடைய…!

Posted by - நவம்பர் 29, 2020 0
கட்டிகள் பழுத்து உடைய…! வெயில் காலத்தில் உடலிலிருந்து நீர் அதிகம் வெளியேறும், இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். உடல் வெப்பம் அதிகரித்து, கட்டிகளாகச் சருமத்தில்…
- 19

5 ஆண்டுகளுக்கு முன்னரே மார்பக புற்றுநோய் வரும் அபாயம் உள்ளதா என்பதை கண்டறிய முடியும் தெரியுமா?

Posted by - ஏப்ரல் 24, 2020 0
இங்கிலாந்து ஆராய்ச்சி என்ன சொல்கிறது? இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சியில், மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கப்பட்ட 90 நோயாளிகளின் இரத்த மாதிரிகள் மற்றும் முற்றிலும் ஆரோக்கியமான பெண்களின் 90…
- 27

வெள்ளை படுதல் – பெண்களே இந்த ஆடைகளை நீங்கள் நிச்சயம் தவிர்க்க வேண்டும்! தீர்வுகள்

Posted by - நவம்பர் 7, 2020 0
வெள்ளை படுதல் – பெண்களே இந்த ஆடைகளை நீங்கள் நிச்சயம் தவிர்க்க வேண்டும்! தீர்வுகள் பெரும்பாலான பெண்களுக்கு வெள்ளை படுதல் பிரச்னை இருக்கிறது. மாதவிலக்கு வரும் முன்னரும்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  1. Slot Online
  2. rtp yang tepat
  3. Slot Gacor
  4. Situs Judi Slot Online Gacor
  5. Situs Judi Slot Online
  6. Situs Slot Gacor 2023 Terpercaya
  7. SLOT88
  8. Situs Judi Slot Online Gampang Menang
  9. Judi Slot Online Jackpot Terbesar
  10. Slot Gacor 88
  11. rtp Slot Terpercaya
  12. Situs Judi Slot Online Terbaru 2023
  13. Situs Judi Slot Online Terpercaya 2023 Mudah Menang
  14. Daftar Situs Judi Slot Online Gacor Terbaik
  15. Slot Deposit Pulsa Tanpa Potongan
  16. Situs Judi Slot Online Resmi
  17. Slot dana gacor
  18. Situs Slot Gacor 2023
  19. rtp slot yang tepat
  20. slot gacor yang tepat
  21. slot dana
  22. harum4d slot