சிறுநீரகம் சிறப்பாக இயங்க இந்த ஆசனத்தை மட்டும் செய்தாலே போதுமாம்!
உடலிலேயே சிறுநீரகம் தான் இரத்தத்தை சுத்தப்படுத்தும் ஒரு உறுப்பு. எனவே சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது ஒவ்வொருவரின் கடமை.
அந்தவகையில் சிறுநீரகம் சிறப்பாக இயங்கச் யோகசானங்கள் உதவி புரிகின்றது. அதில் நௌகாசனம் என அழைக்கப்படும் ஆசனம் சிறுநீரகம் சிறப்பாக இயங்க பெரிதும் உதவியாக இருக்கின்றது.
தற்போது அந்த ஆசனத்தை எப்படி செய்யலாம் என இங்கு பார்ப்போம்.
- முதலில் விரிப்பில் படுத்துக் கொள்ளுங்கள். இரு கைகளையும் தலைக்கு பின்னால் போடுங்கள்.
- மூச்சை இழுத்துக்கொண்டு கைகளையும், கால்களையும் உயர்த்துங்கள்.
- இரு கைவிரல்களும் இரு கால் விரல்களை நோக்கி இருக்கட்டும். இந்நிலையில் மூச்சை அடக்கி பத்து விநாடிகள் இருக்கவும்.
- பின் மூச்சை வெளிவிட்டு படுத்துக் கொள்ளுங்கள். இதுபோல் மூன்று முறைகள் காலை, மாலை செய்யுங்கள்.
- இந்த ஆசனம் செய்யும் போது உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் சிறுநீரகம், மலம் மூலமாகவும், வியர்வையாகவும் வெளியேறுகின்றது. நமது வயிறு, குடல் பகுதியைச் சுத்தமடையச் செய்கின்றது.

வேறு நன்மைகள்
- இந்த ஆசனம் நமது தசை, ஜீரண, ரத்த ஓட்ட, நரம்பு மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாட்டினை ஊக்குவிக்கிறது. டென்ஷனை குறைத்து ஓய்வளிக்கிறது.
- காலை எழுந்தவுடன் செய்தால் சோம்பல் நீங்கி உடனடி புத்துணர்வு கிடைக்கும். வயிற்றுத் தசைகளை இறுக்கம் அடையச் செய்வதனால் எடை குறைய உதவுகிறது.
- இந்த ஆசனங்களைத் தொடர்ந்து செய்வதால் உடலளவில் மட்டுமல்ல மன அளவிலும் பல நன்மைகள் உண்டு.
- வயிற்றுப்பகுதியில் ஆரோக்கியமான அழுத்தத்தை ஏற்படுத்துவதால் ஜீரண மற்றும் இனப்பெருக்க மண்டல உறுப்புகள் அனைத்தையும் சீராக இயங்கச் செய்கிறது.
…
சிறுநீரகம் சிறப்பாக இயங்க இந்த ஆசனத்தை மட்டும் செய்தாலே போதுமாம்! Source link