சிவகாமியின் சபதம் கதை சுருக்கம் Free Download PDF & Kindle

சிவந்காமியின் சபதம், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த இக்கதை பிறகே ஒரு புதினமாக வெளியிடப்பட்டது.

முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் முதலாம் நரசிம்ம பல்லவன் என்ற இளவரசன் முக்கிய இடம் வகிக்கிறார்.

கல்கி சஞ்சிகையில் வெளிவந்து பரவலான கவனத்தை ஈர்த்த இந்நாவல் பரஞ்சோதி யாத்திரை, காஞ்சி முற்றுகை, பிக்ஷுவின் காதல், சிதைந்த கனவு என நான்கு பாகங்களைக் கொண்டதாகும்.

Free Download :

For PDF

பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3

For Kindle – 6 inch PDF

பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3

Related Books :

சிவகாமியின் சபதம் – கதைச் சுருக்கம்

இப்புதினத்தின் கதையானது காஞ்சியில் ஏற்பட்ட போர்ச் சூழலையும், அதன் தொடர்ச்சியாக சாளுக்ய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர் போர்தொடுத்தது பற்றிய செய்திகளையும் உள்ளடக்கியதாகும். இக்கதையின் தலைவன் யாரென்பதை சுட்டிக் காட்டுவது இயலாத காரியமாகும். முதல் பகுதியில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனே நாயகனைப் போன்று தோன்றினும் பிற்பகுதியில் அவரது மகன் நரசிம்ம பல்லவர் கதையா ஆதிக்கம் செலுத்துகிறார். கதையில் பல்லவ மற்றும் சாளுக்ய நாட்டின் வரலாறு அழகாக எடுதியம்பப்பட்டுள்ளது.

இப்புதினம் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது

மாமல்லபுரம் இரதக் கோயில்கள்

மாமல்லபுரம் இரதக் கோயில்கள் | பல்லவர்கள் கட்டிடக்கலை

பகுதி 1: பரஞ்சோதி யாத்திரை

பரஞ்சோதியாரின் காஞ்சி வருகையுடன் இக்கதை தொடங்குகிறது. வழியில் எதிர்படும் சமணர்களினால் காஞ்சியில் ஏற்பட்ட மதமாற்றத்தை பற்றியும் நாம் அறியலாம். சமயக் குறவர் நால்வருள் ஒருவரான திருநாவுக்கரசரின் தாள்பணிந்து இறைதொண்டாற்ற நினைத்து காஞ்சி வந்தவர் விதிவசத்தால் ஆடலரிசியும் பேரழகியுமான சிவகாமியையும் அவள் தந்தையும் தலைமை சிற்பியுமான ஆயனார் அவர்களையும் மதம்கொண்ட யானையின் பிடியிலிருந்து மீட்கிறார். இதனால் ஏற்பட்ட கலவரத்தை முன்னிட்டு பரஞ்சோதியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். பின்னர் தான் அவருக்கு காஞ்சியை நோக்கி சாளுக்ய மன்னன் புலிகேசி படையெடுத்து வருவதும் மன்னர் தன்னை நேரில் பார்த்து தன் வீரத்தை பாராட்டவே சிறையில் வைத்திருப்பதும் தெரிந்து கொள்கிறார். ஆனால, அதற்கு முன்பாகவே தன்னுடன் காஞ்சி வந்த நாகநந்தி அடிகல் என்னும் புத்த துறவியின் உதவியுடன் சிறையில் இருந்து தப்பிக்கிறார்.

Sivagamiyin Sabatham

Rs. 390  in stock
2 new from Rs. 390
Free shipping
View Now
சிவகாமியின் சபதம் - 3 Amazon.in
as of மே 24, 2020 5:23 மணி

Features

AuthorAmarar Kalki
BindingHardcover
EAN9788179506363
EAN ListEAN List Element: 9788179506363
EditionFirst
ISBN8179506363
Item DimensionsWeight: 198
LabelGiri Trading Agency Private Limited
ManufacturerGiri Trading Agency Private Limited
Number Of Pages1136
Package DimensionsHeight: 228; Length: 898; Weight: 273; Width: 575
Product GroupBook
Product Type NameABIS_BOOK
Publication Date2014
PublisherGiri Trading Agency Private Limited
StudioGiri Trading Agency Private Limited
TitleSivagamiyin Sabatham

ஒரு சுரங்கத்தின் வழியாக கோட்டை சுவரின் வெளியே அமைந்திருக்கும் ஆயனாரின் குடிசைக்கு செல்கிறார்கள். தனது மாமாவின் துணையால் ஆயநாரை பற்றி நன்கு அறிந்திருந்த பரஞ்சோதி அவரிடம் சீடனாக சேர்ந்து சிற்பக்கலையை கற்க நினைத்தார். மூலிகை ஓவியங்களில் மிகவும் ஈடுபாடு கொண்ட ஆயனர் நகந்தியிடம் அஜந்தா குகைகளில் இருக்கும் வண்ண ஓவியங்களை பற்றி வினவினார். அதன் பொருட்டு மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள நாகநந்தியின் சிறுகுறிப்பு ஒன்றுடன் விந்தய மலைத்தொடருக்கு பரஞ்சோதியார் அனுப்பப்படுகிறார்.

பரதத்தில் நன்கு தேர்ச்சிபெற்ற ஆடல் நங்கை சிவகாமியைக் காண, அவள் காதலனும் இளவரசருமான நரசிம்ம பல்லவர் வந்து செல்லும் விபரமறிந்த மன்னர் இதற்கு சம்மதிக்காமல் இருந்தார். அவர் மனதை மாற்றும் பொருட்டு புலிகேசியுடன் போருக்கு செல்லும் நேரத்தில் காஞ்சியை காவல் புரியும் பொறுப்பை நரசிம்மரிடம் கொடுத்திருந்தார் பல்லவ மன்னர்.

பகுதி 2:காஞ்சி முற்றுகை

விந்தய மலை செல்லும் வழியில் ஓரிரவில் பரஞ்சோதியார், வஜ்ரபாஹு என்ற போர் வீரனை தங்கும் விடுதி ஒன்றில் சந்தித்தார். நடுநிசியில் பரஞ்ஜோதியாரிடம் இருந்த கடிதத்தின் விஷயத்தை அவர் அறியா வண்ணம் வஜ்ரபாஹு மாற்றியமைத்தான். விடியலில் இருவரும் பிருந்துசென்றனர். அன்று எதிர்வந்த சாளுக்ய படையினரால் பரஞ்சோதியார் கைது செய்யப்பட்டார். பின்பு மன்னர் புலிகேசியிடம் கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு விசாரிக்கப்பட்டார். மொழிப் பிரச்சனையின் காரணமாக பரஞ்சோதியார் வஜ்ரபாஹுவினால் விசாரிக்கப் பட்டு குற்றமற்றவர் என்று கூறப்பட்டார். வஜ்ரபாஹு கொடுத்த சமிக்யயுடன் அவனுடன் சில படை வீரர்கள் துணையுடன் தன் பயணத்தை தொடர்ந்தனர். அன்றிரவு மற்ற வீரர்கள் தூங்கும் பொழுது வஜ்ரபாஹு, பரஞ்சோதியாரை அழைத்துக்கொண்டு அவ்விடம் இருந்து தப்பித்து பல்லவர் படையிடம் வந்து சேர்ந்தனர். அங்கு வந்த பின்பே தன்னுடன் வந்த வஜ்ரபாஹு வேறொருவர் அன்றி மன்னர் மகேந்த்ரவர்மரே என்று அறிந்தார்.

ஏழு மாதங்கள் கழிந்த பின்பு பரஞ்ஜோதியார் மகேந்திரவர்மரின் நற்மதிப்பை பெற்ற ஓர் சிறந்த படைத் தலைவனாக இருக்கிறார். சாளுக்யருடன் போர் நெருங்கிவரும் இவ்வேளையில் பரஞ்சோதியார் நாடு திரும்பி காஞ்சியில் இளவரசர் நரசிம்மருடன் மிகவும் நட்புடன் இருந்தார். தன் காதலியை சந்திக்காமல் நரசிம்மர் படும் வேதனைக்கு, பரஞ்ஜோதியாரின் நட்பு மருந்தாக இருந்தது. இவ் இக்கட்டான நிலையில் பல்லவ படையின் தலைமை ஒற்றனான சத்ருக்னன் இடமிருந்து, காஞ்சி மீது படையெடுக்க எத்தனித்த துர்வநீதன் என்னும் சிற்றரசன் மீது போர்தொடுக்கும் படி மகேந்திர பல்லவரின் அரசானை வந்து சேர்ந்தது. சிவகாமியிடம் சோழ பாண்டிய நாடுகளில் நடனமாடும் பெரிய வாய்ப்பு ஒன்றை வாங்கி தருவதாக கூறிய நாகநந்தி அவள் நல் மதிப்பை பெற்றான். போரைப் பற்றி எதுவும் அறியாத ஆயனாரிடம் நடக்க இருக்கும் விபரீதத்தினை எடுத்துரைத்த நாகநந்தி அவர்களை புத்த விஹாரம் ஒன்றில் தங்க வைத்தான். அங்கிருந்து துர்வீந்தன் மீது நரசிம்ம பல்லவர் படையெடுத்து செல்வதை கண்ட சிவகாமி அவரிடம் செல்ல நினைக்க, அக்கணம் வஞ்சக எண்ணம் கொண்ட நாகனந்தியால் உடைக்கப்பட்ட ஏரியினால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டாள். இதைக் கண்ட நரசிம்மர் அவளையும் ஆயனாரையும் பத்திரமாக மீட்கிறார். 

Ponniyen Selvan - Set of 5: Thirumagal Nilayam

Rs. 440
Rs. 430  out of stock
5 new from Rs. 430
View Now
சிவகாமியின் சபதம் - 3 Amazon.in
as of மே 24, 2020 5:23 மணி

Features

AuthorKalki
BindingPaperback
FormatBox set
Item DimensionsWeight: 463
LabelThirumagal Nilayam
LanguagesName: Tamil; Type: Published
ManufacturerThirumagal Nilayam
Package DimensionsHeight: 409; Length: 850; Weight: 481; Width: 559
Product GroupBook
Product Type NameABIS_BOOK
PublisherThirumagal Nilayam
StudioThirumagal Nilayam
TitlePonniyen Selvan - Set of 5: Thirumagal Nilayam

பொன்னியின் செல்வன்

பகுதி 3:பிக்ஷுவின் காதல்

காஞ்சியின் மதில் சுவரை உடைத்து எறிய நினைத்து அங்கு வந்த புலிகேசிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காஞ்சி அவ்வளவு வலிமையுடன் இருந்தது. இதனால் மனம் தளராத புலிகேசி கோட்டையின் வெளியிலே தண்டு இறங்கி பாசறை அமைத்து தங்கினான். உணவு தட்டுப்பாட்டின் காரணமாக காஞ்சி விரைவில் வீழும் என்று நினைத்தான் புலிகேசி. ஆனால் அவன் கூற்றைப் பொய்யாக்கும்படி காஞ்சியிடம் தேவைக்கு அதிகமாகவே உணவு இருப்பு இருந்தது. அதற்கு நேர் மாறாக சாளுக்ய படையிடம் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக யானைகளை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக மாறியது.

தோல்வியை ஏற்க விரும்பாத புலிகேசி அமைதி தூது விடுத்து காத்திருந்தான். இதை சிறிதும் நம்பாத மன்னர் மகேந்திர பல்லவர், நரசிம்மரை தெற்கே சென்று பாண்டியனிடம் போர்புரிய அனுப்பிவிட்டு பின்பு புலிகேசியை அரண்மனைக்கு அழைத்தார்.ராஜஉபசரிப்பையும் விருந்தோம்பலையும் நன்கு அனுபவித்தான். மன்னரின் வேண்டுகோளுக்கிணங்க மண்டபப்பட்டிலிருந்து வந்த சிவகாமி தன் நாட்டிய விருந்தால் புலிகேசியை மகிழ்வித்தால். அவளும் அவள் தந்தையும் கோட்டை வாயில் திறக்கும் வரை காஞ்சியிலே தங்கி இருந்தனர். புலிகேசி விடைபெறுமுன் வஜ்ரபாஹுவாய் வந்தது தாமே என்ற உண்மையை மகேந்திரர் போட்டுடைத்தார். இதனால் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை காட்டிக்கொள்ளாத புலிகேசி காஞ்சியை விட்டு வெளியேறிய பின்பு தன் படை வீரர்களிடம் கண்ணில் தென்படும் அனைத்தையும் அழிக்குமாறு உத்தரவிட்டான். மற்றும் மகேந்திரவர்மரின் கலைஞர்களின் கரங்களை துண்டிக்கவும் ஆணையிட்டான்.

நடக்கப்போகும் விபரீதமறியா ஆயனார், சிவகாமியுடன் சுரங்கம் ஒன்றின் வழியாக காஞ்சியை விட்டு வெளியேறி புலிகேசியிடம் மாட்டிக்கொண்டார். புலிகேசியை போல் வேடம் புனைந்த நாகநந்தி ஆயநாரை மட்டும் காவலர்களிடமிருந்து மீட்டான்( இவ்விடம் புலிகேசியும் நாகநந்தியும் இரட்டை சகோதரர்கள் என்பதை தெரியபடுத்திக்கொல்கிறோம்). புலிகேசியுடன் எதிர்கொண்ட போரில் மகேந்திரவர்மர் பலத்த காயமடைகிறார். மரணப்படுக்கையில் அவர் சாளுக்ய மன்னனுடன் அமைதி உடன்பாடு கொண்டதின் தவற்றை உணர்ந்தார். இக் களங்கத்தைப் போக்க நரசிம்மப் பல்லவரை சாளுக்ய நாடு சென்று சிவகாமியை புலிகேசியின் பிடியிலிருந்து மீட்டுவரும்படி கூறுகிறார்.

சிவகாமி, மற்ற கைதிகளுடன் வாதாபி கொண்டுசெல்லப்பட்டாள். புலிகேசியிடம், தான் சிவகாமியின்பால் காதல் கொண்ட உண்மையை நாகநந்தி தெரிவித்தான். பின்பு புலிகேசி சிவகாமியை பார்த்துகொள்வேன் என்று வாக்களித்த பின்பு போர்முனையை தான் பார்த்துக்கொள்வதாக கூறி புறப்பட்டான். வாதாபியில் பல்லவரை வென்று வாகை சூடியதாகக் கூறி வெற்றி முழக்கமிட்டான். தன் சபையில் வீற்றிருக்கும் பாரசீக தூதுவர்முன் ஆட மறுத்த சிவகாமியை ஆட வைப்பதற்காக தான் பிடித்து வந்த பல்லவ நாட்டினரை சிவகாமியின் முன் கொடுமைப் படுத்தினான். இம்முறையை தினமும் பின்பற்றி அவளை ஆடச்செய்தான். இதனால் மனம் வெதும்பிய சிவகாமி சீற்றம் கொண்டு சினத்துடன் ஓர் சபதம் கொண்டாள். தன் காதலர் நரசிம்ம பல்லவர் இவ் வாதாபி நகரத்தை தீக்கிரையாக்கி தன்னை மீட்டுச் செல்லும் வரை தான் அந்நகர் விட்டு வெளியேறுவதில்லை என்று சூளுரைத்தாள். பின்பு ஒருமுறை தன்னை அழைத்துச்செல்ல ரகசியமாய் வந்த நரசிம்மரிடமும் இதையே கூறி உடன் செல்ல மறுத்தாள்.

Sivagamiyin Sabadham

Rs. 245  out of stock
3 new from Rs. 245
View Now
சிவகாமியின் சபதம் - 3 Amazon.in
as of மே 24, 2020 5:23 மணி

Features

AuthorKalki
BindingPaperback
EAN9789384149420
EAN ListEAN List Element: 9789384149420
EditionFirst Edition
ISBN938414942X
LabelKizhakku Pathippagam
LanguagesName: Tamil; Type: Published
ManufacturerKizhakku Pathippagam
Number Of Pages288
Package DimensionsHeight: 79; Length: 843; Weight: 66; Width: 543
Product GroupBook
Product Type NameABIS_BOOK
Publication Date2015
PublisherKizhakku Pathippagam
StudioKizhakku Pathippagam
TitleSivagamiyin Sabadham

பகுதி 4:சிதைந்த கனவு

காலம் உருண்டோடி ஒன்பது ஆண்டுகள் கடந்தன. புலிகேசியுடன் ஏற்பட்ட போரினால் காயமுற்று மரணபடுக்கையில் இருந்த மாமன்னர் மகேந்திர பல்லவர் அதிலிருத்து மீளாமலேயே வீரமரணமெய்தினார். தந்தைக்குப் பின் முடிசூடிய நரசிம்மவர்மர், பாண்டிய இளவரசி வானமாதேவியை மனம்புரிந்திருந்தார். ஆனால் வாதாபியை நோக்கி படைஎடுப்பதில் அவரது முனைப்பு சிறிதும் குறையாமல் இருந்தது. இதற்கிடையே புலிகேசிக்கும், நாகநந்திக்கும் இடையேயான கருத்துவேறுபாடுகள் அதிகரித்து இருந்தது. தான் நாட்டை துறந்து, பதவியாசையை விட்டு துறவறம் புரிந்தது தவறென்று எண்ணினான். இதன் பொருட்டு பல்லவர்கள் படையெடுப்பை பற்றி தெரிந்தும் அவன் அதைக் கூறாமல் மறைத்தான். இவனது எல்லா மனக்குலப்பத்திர்க்கும், சிவகாமி அவனை மணப்பதற்கு சம்மதிக்காமையே காரணமாகும்.

புலிகேசி அஜந்தாவில் நடைபெறும் கலாசார விழாவிற்கு சென்றிருந்த வேளையில் பல்லவர் படை வாதாபிக் கோட்டையை சூழ்ந்தது. இதை சற்றும் எதிர்காணா வாதாபி பல்லவரிடம் பணிய முனைந்தது. இதற்கிடைய விபரமறிந்து விரைந்து வந்த புலிகேசியின் படையுடன் கோட்டைக்கு அப்பால் போர்நடந்தது. இதில் மன்னன் புலிகேசி கொல்லப்பட்டான். யாரும் இதை அறியும் முன்பாக நாகநந்தி தன் சகோதரனின் உடலை எடுத்துச்சென்று அதனை சிதையிலிட்டான். பின்பு சுரங்கப் பாதை மூலம் நகரினுள் வந்த நாகநந்தி புலிகேசிபோல் வேடமிட்டு பொற்காலம் வந்தான். முன்னர் அறிவித்த அடிபணியும் அறிவிப்பையும் நீக்கினான். இதனால் கோபமுற்ற நரசிம்ம பல்லவர் வாதாபியை தீக்கிரையாக்க கட்டளையிட்டார்.

இக்கதையின் முடிவாக ஒருகை இழந்த நாகநந்தி பரஞ்சோதியாரால் புத்த துறவி என்ற காரணத்தினால் உயிருடன் விடப்பட்டான். போரினால் தான் பாவம் செய்ததாக நினைத்த பரஞ்சோதியார் பின் சைவதுறவியாக மாறினார். நாடு திரும்பிய சிவகாமி தன் காதலன் இன்னொருப் பெண்ணின் கணவரென்பதையறிந்து தன் கனவு சிதைந்ததைஎண்ணி மனத்தால் இறந்தாள். பின் தன் பரதக் கலைக்கே தன்னை அர்ப்பணிக்கும் விதமாக காஞ்சி ஏகாம்பரேஸ்வரருக்கே திருமாங்கல்யம் கட்டிக் கொண்டாள். இக்காட்சியுடன் இக்கதை முடிவடைகிறது.

RELATED VIDEOS

கல்கியின் சிவகாமியின் சபதம் - பகுதி 1: பரஞ்சோதி யாத்திரை (01)

கல்கியின் சிவகாமியின் சபதம் - பகுதி 1: பரஞ்சோதி யாத்திரை (01) Kalki's Sivagamiyin Sabatham - Part...

Vairamuthu in speech Sivakamiyin Sabatham Silver Jubilee Special 25 Show of Stage Show

Vairamuthu in speech Sivakamiyin Sabatham Silver Jubilee Special 25 Show of Stage Show Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, ...

கல்கியின் சிவகாமியின் சபதம் - பகுதி 1: பரஞ்சோதி யாத்திரை (02)

கல்கியின் சிவகாமியின் சபதம் - பகுதி 1: பரஞ்சோதி யாத்திரை (02) Kalki's Sivagamiyin Sabatham - Part...

முக்கிய பாத்திரங்கள்

மகேந்திரவர்மன் : கல்கி இவரை ஆயகலைகளில் சிறந்தவராகவும் அவைகளை விரும்பி வளர்ப்பவராகவும் சித்தரித்துள்ளார். நுண்ணிய அறிவு கூர்மை உடையவராகவும் மந்திரிகளின் ஆலோசனைகளை ஏற்பவராகவும் உள்ளார். இவர் காலத்தில்தான் மாமல்லபுரம் சிற்பங்களால் அழகுற்றது. முன்பு சமண சமயத்தை பின்பற்றிய இவர் பிற்காலத்தில் சைவ சமயத்தை பின்பற்றினார். சமய ஒற்றுமையை விரும்பினார்.

நன்றி : Wikipedia.org

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   Logo
   Register New Account
   Reset Password