சுந்தர சோழன்

சுந்தர சோழன்

இடைக்காலச் சோழர்களில் பலம் வாய்ந்த அரசர்களில் ஒருவராக விளங்கியவர் இராசகேசரி வர்மன் சுந்தர சோழர். இவர் கி.பி 957 முதல் 973 வரை 16 ஆண்டுகள் சோழ நாட்டை ஆண்டார். இவர் முதலாம் பராந்தகச் சோழனின் பேரனும், அரிஞ்சய சோழனின் புதல்வனும் ஆவார். இவர் இயற்பெயர் இரண்டாம் பராந்தகன் ஆகும், இவர் ஆண் அழகில் மன்மதனாக இருந்ததால் மக்கள் இவரை சுந்தர சோழன் என்று அழைத்தனர். தனது முன்னோர் காலத்தில் இழந்த நிலப்பகுதிகளை மீட்டுச் சோழ நாட்டை வலிமையுள்ள நாடாக மாற்றியவர் இவர். தெற்கே திறை செலுத்த மறுத்துவந்த பாண்டிநாட்டின் மீது படை நடத்தி வெற்றிகண்டார். வடக்கிலும் இராஷ்டிரகூடர்களிடம் இழந்த பகுதிகளைக் கைப்பற்றும் பொருட்டு அவர்களுடன் போரிட்டு அவற்றை மீண்டும் சோழ நாட்டின் ஆளுகைக்கு உட்படுத்தினார்.

சுந்தர சோழன்

காலம்: கி.பி. 957 – 973
பட்ட பெயர்கள்:  அழகிய மன்மதன், இராசகேசரி வர்மன், பொன் மளிகையில் துஞ்சிய சோழன்
தலைநகரம்: தஞ்சாவூர்
அரசி: வானவன் மாதேவியர்
பிள்ளைகள்: ஆதித்த கரிகாலன், குந்தவை, அருள்மொழிவர்மன்
முன்னவன்: அரிஞ்சய சோழன்
பின்னவன்: உத்தம சோழன்
தந்தை: அரிஞ்சய சோழன்
பிறப்பு: தஞ்சாவூர்
இறப்பு: காஞ்சிபுரம்

கி.பி 969 ஆம் ஆண்டில் சுந்தர சோழரின் மூத்த மகனும் வீரனுமான, இரண்டாம் ஆதித்தன் சந்தேகத்துக்கு உரிய முறையில் எதிர்பாராத சூழ்நிலையில் கொல்லப்பட்டார். இதனால் துயருற்ற மன்னன் நோயுற்று கி.பி 973 ல் காலமானார்.

பராந்தக சுந்தர சோழரின் கற்பனை வரைகலை படம்

சுந்தரசோழருக்குப் பின் கண்டராதித்த சோழனின் மகனான உத்தம சோழன் சோழ நாட்டுக்கு அரசனானான்.

காஞ்சிபுரத்தில் பொன்னாலான தன்னுடைய மாளிகையில் சுந்தரசோழர் இறந்தார். அதனால் அதன் பிறகு, ‘பொன் மாளிகைத் துஞ்சின தேவன்’ என்றே அழைக்கப்பட்டார். இதன் காரணமாக இம்மன்னன் வடபகுதியில் தங்கி, தன் நாட்டின் நிலவரங்களை அயராது கவனித்தான் என்றும் அனுமானிக்கலாம். மலையமான்களின் வம்சத்து ‘வானவன் மாதேவி’ என்ற இவர் மனைவி, கணவர் இறந்ததும் உடன்கட்டை ஏறினார். இம்மன்னனுடைய சிலை ஒன்று இவர் மகள் ‘குந்தவையால்’ தஞ்சைக்கோயிலில் வைக்கப்பட்டது.

தலைசிறந்த தமிழ் புதினங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் இவருடைய ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை தழுவியே எழுதப்பட்டுள்ளது.

சுந்தர சோழரின் மகன் அருள்மொழி வர்மன் பின்னாளில் இராஜராஜ சோழன் என்ற பெயரில் அரசபட்டம் ஏற்று மகத்தான மாமன்னனாகத் திகழ்ந்தார்.

வீர சோழியம்

வீரசோழியம் என்னும் தமிழ் இலக்கண நூல் இம்மன்னனின் புகழைக் கூறும்போது, அபிபெருமன்னன் பழையாறைத் திருக்கோயிலில் இருந்த இந்திரன், சூரியதேவன் ஆகிய திருமேனிகளுக்கு யானையையும், 7 குதிரைகளையும் (வாகனங்களை) அளித்ததோடு சிவபெருமான் திருவுலாக் காண்பதற்காக பல்லக்கினையும் அளித்தான் என்று கூறுகிறது.

பொன்னியின் செல்வனில் சுந்தர சோழர்

சுந்தர சோழர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற சோழப் பேரரசர் ஆவார். வரலாற்றில் இடம்பெற்ற சுந்தர சோழரை சற்று புனைவுடன் இணைத்து கதாப்பாத்திரமாக வடிவமைத்துள்ளார் கல்கி.

பிறப்பும் வளப்பும்

அரிஞ்சய தேவரின் மூத்த புதல்வர் சுந்தர சோழர். சிறு பிராயத்துப் பிள்ளையாக இருக்கும் போதே ஈழத்துப் போரில் கலந்து கொண்டார். அவரைப் பற்றிய செய்திகள் தஞ்சைக்கு கிடைக்காமல் போனமையினால், கவலை அடைந்திருந்தனர். சுந்திர சோழரின் பெரிய தகப்பனார் இராஜாதித்த தேவர் இரட்டை மண்டல படையை எதிர்த்து வீரமரணம் அடைந்தார். அரிஞ்சயத் தேவர் படுகாயமடைந்திருந்தார். அதனால் சோழப்பேரரசினை விருப்பமே இன்றி சிவபக்திமானான கண்டராதித்தர சோழர் நிர்வகித்தார்.

பராந்தக சோழருக்கு கண்டராதித்தரின் மனநிலை தெரிந்திருந்தது. அரசாங்க விசயங்களில் ஈடுபாடில்லாமல் எப்போதும் சிவபக்தியில் இருப்பவர் கண்டராதித்தர். அப்போது ஈழத்தில் சுந்தர சோழரை ஒரு தீவில் கண்டுபிடித்து தஞ்சைக்கு அழைத்து வந்தார்கள் வீரர்கள். இறக்கும் தருவாயில் இருந்த பராந்தக சோழர் சுந்திர சோழருக்கு இளவரசர் பட்டம் கட்டவேண்டுமெனவும், அவருடைய வாரிசுகளே சோழதேசத்தினை ஆள வேண்டுமெனவும் கண்டராதித்தரிடம் கூறிவிட்டு சிவபதம் அடைந்தார். கண்டராதித்தரும் ராஜாங்க விசயங்களை வெறுத்தபடியால் ஒப்புக் கொண்டார். அரிஞ்சய சோழரிடமும், அவர் மகன் சுந்தர சோழரிடமும் ராஜாங்க காரியங்களைக் கண்டராதித்த சோழர் ஒப்படைத்தார்.

இளம் காதல்

சுந்தர சோழர் தன்னுடைய இளமைக்காலத்தில் ஒரு தீவில் ஊமைப் பெண்ணான மந்தாகினியை சந்தித்தார். அவர் மீது தீராத காதல் கொண்டார்.

பிள்ளைகள்

சுந்தர சோழருக்கு ஆதித்த கரிகாலன், இளைய பிராட்டி குந்தவை, அருள்மொழிவர்மன் என்று மூன்று மக்கள் பிறந்தார்கள். அவர்களை பெரிய பிராட்டி செம்பியன் மாதேவி வளர்த்து வந்தார்.

Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

உங்கள் கருத்தை இடுக...

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

Logo
Register New Account
Reset Password
%d bloggers like this: