ஜனவரி 15, 2021
SaveSavedRemoved 0
தேவையானவை :
சுறா -அரை கிலோ
சாம்பார் வெங்காயம் – 200 கிராம் (நறுக்கியது)
மஞ்சள்தூள் -அரை டீஸ்பூன்
பூண்டு – ஒரு கைப்பிடி (உரித்தது)
பச்சை மிளகாய் -4
சோம்பு -1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது.
உப்பு, எண்ணெய் -தேவையான அளவு
செய்முறை:
1. சுறாவை சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக விடவும். சுறா வெந்ததும் ஆற வைத்து தோல், முள் நீக்கி உதிரி உதிரியாக செய்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
2.நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பூண்டு, இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும்.
3. உதிர்த்த சுறாவை சேர்த்துக் கிளறி போதுமான அளவு உப்பு சேர்த்து. சுறா ரொட்டித் துண்டு மாதிரி வெந்து உதிரி உதிரியாக முட்டைபொறியல் போல் வந்ததும் இறக்கி விடவும். இப்போது சுறாப் புட்டு தயார்.
SaveSavedRemoved 0