thamizh dna

‘ஜம்பிங் ஜாக்ஸ்’ பயிற்சி தினமும் செய்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன ?

199 0

‘ஜம்பிங் ஜாக்ஸ்’ பயிற்சி தினமும் செய்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன ?

 

உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் விரைவாக பலனை எதிர் பார்க்க ஜம்பிங் ஜாக்ஸ் பயிற்சி உதவி புரிகின்றது.

இதனை தினமும் செய்வதனால் உடலுக்கு மட்டுமின்றி மனதிற்கும் கூட பல ஆரோக்கிய பலனை தருகின்றது.

அந்தவகையில் தற்போது இதனை பயிற்சி எப்படி செய்யலாம், இதன் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

எப்படி செய்யலாம்?

முதலில் சமதள பரப்பில் கால்களை நேராக நிமிர்த்தியபடி நிற்க வேண்டும்.

இரு கைகளையும் தொடைப்பகுதியை ஒட்டியவாறு வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு கால்களை தரையில் அழுத்தியபடி துள்ளிக்குதிக்க வேண்டும்.

அதேவேகத்திற்கு கைகளை மேல்நோக்கி உயர்த்த வேண்டும். படிப்படியாக குதிக்கும் வேகத்தை அதிகரிக்க வேண்டும்.

கால்களை நன்றாக விரித்துக்கொண்டு உற்சாகமாக துள்ளிக்குதிக்க வேண்டும். அப்போது கைகளையும் நன்றாக உயர்த்தி மகிழ்ச்சியுடன் உற்சாக துள்ளல் போடலாம்.

துள்ளிக்குதிக்கும்போது காயம் ஏற்படாமல் இருக்க மெதுவாக தரையில் கால்களை வைக்க வேண்டும். நல்ல காலணிகள் அணிவதும் அவசியம்.

- 2
google
நன்மைகள் என்ன?
  • எலும்பு தேய்மானத்தை தடுப்பதிலும், எலும்புப்புரை அபாயத்தில் உள்ளவர்களின் எலும்புகளை வலிமைப்படுத்துவதிலும் முக்கிய பங்குவகிக்கும். அன்றாட உடற்பயிற்சியுடன் ஜம்பிங் ஜாக்ஸ் பயிற்சியும் செய்யலாம்.
  • 70 கிலோ எடை கொண்ட ஒருவர் 39 நிமிடங்கள் ஜம்பிங் ஜாக்ஸ் செய்தால் 186 கலோரிகளை எரித்துவிடலாம். உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் ஜம்பிங் ஜாக்ஸ் பயிற்சியை வழக்கமாக்கிக்கொள்ளலாம்.
  • உடல் வெப்பநிலை மற்றும் ஏரோபிக் திறனை அதிகரிக்க உதவும்.
  • ஜம்பிங் ஜாக்ஸ் பயிற்சியை மேற்கொள்ளும்போது மகிழ்ச்சிக்கான ஹார்மோன்கள் அதிகமாக வெளிப்படும். அதனால் மனம் இலகுவாகும்.
  • ஜம்பிங் ஜாக்ஸ் பயிற்சி இதயத் துடிப்பை விரைவாக உயர்த்தும். அதேவேளையில் இதயத்துடிப்பை இயல்பு நிலைக்கு திரும்பவைத்து சமநிலையில் வைத்திருக்கவும் உதவும்.
முக்கிய குறிப்பு

முகுதுவலி, எலும்பு தொடர்பான பிரச்சினை கொண்டவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று இந்த பயிற்சியை மேற்கொள்வது அவசியம்.

‘ஜம்பிங் ஜாக்ஸ்’ பயிற்சி தினமும் செய்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன ? Source link

Related Post

நுரையீரல் ஆரோக்கியத்துக்கு

நுரையீரல் ஆரோக்கியத்துக்கு இந்த ஆசனத்தை செய்திடுங்கள்

Posted by - பிப்ரவரி 10, 2021 0
நுரையீரல் ஆரோக்கியத்துக்கு இந்த ஆசனத்தை செய்திடுங்கள்   நுரையீரலுக்கு ஏற்படும் அழுத்தத்தில் இருந்து அதனை பாதுகாத்து ஆரோக்கியமாக செயல்படுவதற்கு தனுராசனத்தை தொடர்ந்து செய்து வரலாம். எப்படி செய்ய…
மனஅழுத்தத்தை போக்கும் சூப்பரான பயிற்சி

மனஅழுத்தத்தை போக்கும் சூப்பரான பயிற்சி… ஒரு நாளைக்கு 10 முறை செய்தால் போதும்!

Posted by - ஜனவரி 24, 2021 0
மனஅழுத்தத்தை போக்கும் சூப்பரான பயிற்சி… ஒரு நாளைக்கு 10 முறை செய்தால் போதும்!   உலகளவில் ஏற்படும் நோய்களில் மன அழுத்தம்தான் முதலிடத்தில் உள்ளது. மன அழுத்தம்…
- 8

கிட்னி கற்களை முற்றிலுமாக நீக்க வேண்டுமா? இந்த பயிற்சி செய்து பாருங்கள்

Posted by - அக்டோபர் 22, 2020 0
கிட்னி கற்களை முற்றிலுமாக நீக்க வேண்டுமா? இந்த பயிற்சி செய்து பாருங்கள் சிறுநீரகக்கல் என்பது சிறிய படிகங்களை கொண்ட ஒரு திடப்பொருள் ஆகும். சிறுநீரகத்திலோ அல்லது சிறுநீரகக்குழாயிலோ…
- 22

பின்பக்க சதையை எளிய முறையில் குறைக்க வேண்டுமா? இந்த பயிற்சியை தினமும் செய்து பாருங்கள்

Posted by - அக்டோபர் 20, 2020 0
பின்பக்க சதையை எளிய முறையில் குறைக்க வேண்டுமா? இந்த பயிற்சியை தினமும் செய்து பாருங்கள் பொதுவாக நம்மில் சிலர் பார்க்க ஒல்லியாக இருப்பார்கள். ஆனால் பின்பக்கம் அதிகளவு…
- 26

இடுப்பைச் சுற்றி சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்க வேண்டுமா? இந்த பயிற்சியை மட்டுமே போதுமே

Posted by - அக்டோபர் 21, 2020 0
இடுப்பைச் சுற்றி சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்க வேண்டுமா? இந்த பயிற்சியை மட்டுமே போதுமே இன்று பல பெண்கள் இடுப்பை சுற்றியுள்ள கொழுப்பை கரைக்க பெரிதும் கஷ்டப்பட்டு…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன