ஜிமெயில், மீட்டை தொடர்ந்து `GPay’ லோகோவையும் மாற்றும் கூகுள்… என்ன காரணம்?

கூகுளின் பிரதான லோகோவின் அதே நிறக்கலவையை (சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம்) கொண்டு புது லோகோக்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

சமீபத்தில் தான் கூகுள் அதன் முக்கிய சேவைகளான ஜிமெயில், ட்ரைவ், மீட் உட்பட பல சேவைகளின் லோகோக்களை மாற்றியமைத்தது. இப்போது இந்த சேவைகளைப் பயன்படுத்தும் பெரும்பாலானோர் புது லோகோவுடன்தான் இந்த சேவைகளை பயன்படுத்திக்கொண்டிருப்பர். பலரையும் இந்த புதிய லோகோக்கள் ஈர்க்கவில்லை. ‘பழசே நல்லதானயா இருந்தது?’ என்றுதான் சோசியல் மீடியாவில் கருத்து தெரிவித்துவருகின்றனர். இருந்தும் இப்போது அதன் பிரபல பணப் பரிவர்த்தனை சேவையான Gpay-ன் லோகோவையும் மாற்றப்போகிறதாம் கூகுள்.

புதிய லோகோவை கீழ்க்காணும் படத்தில் காணலாம்.

பழைய லோகோ நேரடியாகவே GPay என்ற எழுத்துகளுடன் நேரடியாகவே கூகுள் பேவை குறித்தன. ஆனால் புதிய லோகோவை பார்த்ததும் அது GPay தான் என்பதைப் புரிந்துகொள்வது கடினமாகத்தான் இருக்கிறது. இது அடிக்கடி கூகுள் பே ஆப்பை பயன்படுத்துபவர்களுக்கு அசௌகரியமாகத்தான் இருக்கப்போகிறது. நெட்டிசன்கள் சிலர் GPay என்ற எழுத்துகளைக் கொண்டுதான் புதிய லோகோவும் வடிவமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கின்றனர். உங்களுக்கு அப்படி எதுவும் தெரிந்தால் கமென்ட்களில் பதிவிடுங்கள்.

Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

உங்கள் கருத்தை இடுக...

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

error: Content is protected !!
Logo
Register New Account
Reset Password
%d bloggers like this: