டிப்ளமோ நர்சிங் சேர்க்கைக்கு ஆக.26 முதல் விண்ணப்பிக்கலாம்..!

டிப்ளமோ நர்சிங் சேர்க்கைக்கு ஆக.26 முதல் விண்ணப்பிக்கலாம்..!

செவிலியப் பட்டயப் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப நடைமுறைகள் வரும் ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக மருத்துவக் கல்வி இயக்ககம் தகவல் வெளியிட்டுள்ளது.

டிப்ளமோ நர்சிங் சேர்க்கைக்கு ஆக.26 முதல் விண்ணப்பிக்கலாம்..!

மாநிலத்தில் பிஎஸ்சி நர்சிங் படிப்புகளைத் தவிர்த்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் 2 ஆயிரமும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான செவிலியர் பட்டயப் படிப்புகள் உள்ளன.

அவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மட்டும் மருத்துவக் கல்வி இயக்கக தேர்வு வாரியம் நடத்துகிறது.

தற்போது இப்படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் வரும் 26-ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம் உள்ளிட்டவற்றைப் போலவே நிகழாண்டு முதல் துணை மருத்துவப் படிப்புகளுக்கும் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.tnhealth.org அல்லது https://tnmedicalselection.net என்னும் இணையதளங்களில் செவிலியப் பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் செப்டம்பர் 6-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு செப்டம்பர் 13-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்றும் மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

டிப்ளமோ நர்சிங் சேர்க்கைக்கு ஆக.26 முதல் விண்ணப்பிக்கலாம்..! Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

உங்கள் கருத்தை இடுக...

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

error: Content is protected !!
Logo
Register New Account
Reset Password
%d bloggers like this: