டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, கியா கார்னிவல் – அக்டோபரில் பிரீமியம் எம்பிவி விற்பனை நிலவரம்

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, கியா கார்னிவல் – அக்டோபரில் பிரீமியம் எம்பிவி விற்பனை நிலவரம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக புதிய கார்களின் விற்பனை மிக கடுமையான சரிவை சந்தித்தது. ஆனால் தற்போதைய பண்டிகை காலம் மற்றும் கொரோனா அச்சம் காரணமாக பொது போக்குவரத்தை தவிர்த்து விட்டு மக்கள் சொந்த கார்களில் பயணம் செய்ய விரும்புவது உள்ளிட்ட காரணங்களால் கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கார் விற்பனை மிக சிறப்பாக இருந்தது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, கியா கார்னிவல் - அக்டோபரில் பிரீமியம் எம்பிவி விற்பனை நிலவரம்

ஆனால் அனைத்து செக்மெண்ட்களும் வீழ்ச்சியில் இருந்து முழுமையாக மீண்டு வரவில்லை. இதில், பிரீமியம் எம்பிவி செக்மெண்ட்டும் ஒன்று. இங்கு வளர்ச்சி விகிதம் மிகவும் மெதுவாக உள்ளது. விற்பனை எண்ணிக்கை இன்னும் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, கியா கார்னிவல் கார்களின் கடந்த அக்டோபர் மாத விற்பனை நிலவரத்தை இந்த செய்தியில் விவாதிக்கலாம்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 – இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, கியா கார்னிவல் - அக்டோபரில் பிரீமியம் எம்பிவி விற்பனை நிலவரம்

கடந்த அக்டோபர் மாதம் டொயோட்டா நிறுவனம் மொத்தம் 4,477 இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில், இது 11.55 சதவீத வீழ்ச்சியாகும். ஏனெனில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டொயோட்டா நிறுவனம் 5,062 இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களை விற்பனை செய்திருந்தது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, கியா கார்னிவல் - அக்டோபரில் பிரீமியம் எம்பிவி விற்பனை நிலவரம்

எனினும் நடப்பாண்டு செப்டம்பர் மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா 9.5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஏனெனில் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் டொயோட்டா நிறுவனம் 4,087 இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. அதன்பின் வந்த அக்டோபரில் இந்த எண்ணிக்கை 4,477 ஆக உயர்ந்தது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, கியா கார்னிவல் - அக்டோபரில் பிரீமியம் எம்பிவி விற்பனை நிலவரம்

அதே சமயம் கியா நிறுவனம் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 400 கார்னிவல் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் அதற்கு முந்தைய செப்டம்பர் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 331 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் 20.85 சதவீத விற்பனை வளர்ச்சியை கியா கார்னிவல் பதிவு செய்துள்ளது. இது சிறப்பான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, கியா கார்னிவல் - அக்டோபரில் பிரீமியம் எம்பிவி விற்பனை நிலவரம்

கியா கார்னிவல் கார் நடப்பாண்டுதான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எனவே கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் விற்பனை எண்ணிக்கையை ஒப்பிட முடியாது. கியா நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளான செல்டோஸ் மற்றும் சொனெட் ஆகிய கார்களுடன் ஒப்பிடுகையில், கியா கார்னிவல் விலை உயர்ந்த கார் என்பதால், அதன் விற்பனை எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, கியா கார்னிவல் - அக்டோபரில் பிரீமியம் எம்பிவி விற்பனை நிலவரம்

ஆனால் கியா செல்டோஸ் மற்றும் சொனெட் ஆகிய இரண்டு கார்களும் தங்களது செக்மெண்ட்டில் மிக பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றன. இதற்கிடையே டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விற்பனை வரும் மாதங்களில் இன்னும் நன்றாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, கியா கார்னிவல் - அக்டோபரில் பிரீமியம் எம்பிவி விற்பனை நிலவரம்

ஏனெனில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. நடப்பு மாதத்தில் இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிடதியில் உள்ள டொயோட்டா தொழிற்சாலையில் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் இதன் அறிமுகம் தள்ளி போகலாம் எனவும் கூறப்படுகிறது.டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, கியா கார்னிவல் – அக்டோபரில் பிரீமியம் எம்பிவி விற்பனை நிலவரம் Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

உங்கள் கருத்தை இடுக...

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

error: Content is protected !!
Logo
Register New Account
Reset Password
%d bloggers like this: