தக்கோலப் போர்
தக்கோலப் போர் கி.பி. 949 ஆம் வருடம் தற்போதைய இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள தக்கோலம் என்னும் ஊரில் நடைபெற்றது. இந்தப் போரில் இராஜாதித்தர் தலைமையிலான முதலாம் பராந்தக சோழனின் சோழர் படையும் இராட்டிரகூட மன்னன் கன்னர தேவனின் தலைமையிலான இராட்டிரகூட படையும் மோதின.
இப்போரில் சோழர் படைக்குத் துணையாகச் சேரரின் படைகளும் இராட்டிரகூடர் படைக்குத் துணையாக கங்கரின் படையும் வந்தன.
மிகவும் கொடூரமாக நடந்த இப்போரில் கங்க மன்னன் இரண்டாம் பூதுகனின் (கன்னரதேவனின் மைத்துனன்) நஞ்சு தோய்ந்த அம்பினால் சோழ இளவரசர் இராஜாதித்தர் கொல்லப்பட்டார். இதனால் சோழர் படை தோல்வியுற்றது.
தக்கோலப் போர்
வருடம்: 949
இடம் தக்கோலம்
வெற்றி: இராட்டிரகூடம்
தோல்வி: சோழகள்