தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பு

தேவையானவை :

1. தட்டைப்பயறு – 100 கிராம்

2. கத்திரிக்காய் – 5 (நறுக்கியது)

3. பெரிய வெங்காயம் – 2 (நறுக்கியது)

4. தக்காளி – 2 (நறுக்கியது)

5. குழம்பு மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

6. புளிக்கரைசல் – 1 கப்

7. உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

1. கடுகு – 1/2 டீஸ்பூன்

2. உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

3. கறிவேப்பிலை – சிறிது

4. பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

5. வெந்தயம் – 1/2 டீஸ்பூன்

6. எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

1. தட்டைப்பயறை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் தண்ணீர் அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 5 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். பின்னர் விசில் போனதும் குக்கரைத் திறந்து, நீரை வடித்து பயறை தனியாக வைத்துக் கொள்ளவும்.

2. பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு அதில் கத்திரிக்காய் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி, குழம்பு மிளகாய் தூள் ஒருமுறை கிளறிவிட வேண்டும்.

3. பின் அதில் சிறிது தண்ணீர் ஊற்றி கொதித்ததும், அதில் வேக வைத்துள்ள தட்டைப்பயறு சேர்த்து தேவையான அளவு உப்பு தூவி, 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும். அடுத்து அதில் புளிக்கரைசலை ஊற்றி, பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், தட்டைப்பயிறு கத்திரிக்காய் குழம்பு ரெடி!!

Source

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

      உங்கள் கருத்தை இடுக...

      வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

      error: Content is protected !!
      Logo
      Register New Account
      Reset Password