தமிழகத் தொல்லாய்வுத் துறை கீழடி ஆய்வுப் பணியில் ஈடுபட வேண்டும்: பழ.நெடுமாறன்

152 0

 

தமிழகத் தொல்லாய்வுத் துறை கீழடி ஆய்வுப் பணியில் ஈடுபட வேண்டும்: பழ.நெடுமாறன்

- 1

தமிழகத் தொல்லாய்வுத் துறை கீழடி ஆய்வுப் பணியில் ஈடுபட வேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”வைகை கரை கீழடியில் நான்காம் கட்ட அகழ்வாய்வுக்கு அனுமதியை உடனே வழங்க வேண்டும் என மத்திய தொல்லியல் துறைக்கு உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மேலும் இந்த அகழ்வாராய்ச்சிப் பணியில் மாநில அரசும் இணைந்து செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளதை வரவேற்கிறேன்.

 

மாநில தொல்லியல் துறை, கீழடி அகழ்வாராய்ச்சிப் பணியில் ஈடுபடுவதன் மூலம் மேலும் பல வரலாற்று உண்மைகள் வெளிப்படும். ஏற்கெனவே கீழடியில் இப்பணியில் ஈடுபட்டு சங்க கால வரலாற்றுத் தடயங்களை கண்டறிந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

மத்திய அரசுக்கு எழுதி தமிழகத் தொல்லாய்வுத் துறைக்கு அவரை அனுப்புமாறு கேட்டுப் பெற்று, அவர் மூலம் இந்த ஆய்வினைத் தொடர வழிவகுக்க வேண்டுமென தமிழக முதல்வரை வேண்டிக் கொள்கிறேன்” என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

Source link

Related Post

கீழடி அகழாய்வில் வடிகால் வசதி அமைப்பு கண்டுபிடிப்பு

Posted by - ஜூலை 10, 2020 0
கீழடி அகழாய்வில் வடிகால் வசதி அமைப்பு கண்டுபிடிப்பு திருப்புவனம் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே தண்ணீர் செல்வதற்கான வடிகால் வசதி அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. திருப்புவனம் அருகே கீழடி,…
- 4

கொந்தகையில் 5 அடி உயர மனித எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

Posted by - ஆகஸ்ட் 18, 2020 0
  கொந்தகையில் 5 அடி உயர மனித எலும்புக்கூடு கண்டுபிடிப்பு திருப்புவனம் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகை அகழாய்வில் 5 அடி உயர மனித எலும்புக்கூடு…

கீழடி 6-ம் கட்ட அகழாய்வு: கொந்தகை கிராமத்தில் அமர்ந்த நிலையில் எலும்புக்கூடு கண்டெடுப்பு

Posted by - ஜூலை 10, 2020 0
  கீழடி 6-ம் கட்ட அகழாய்வு கொந்தகை கிராமத்தில் அமர்ந்த நிலையில் எலும்புக்கூடு கண்டெடுப்பு கீழடி அகழ்வாராய்ச்சியின் ஒரு பகுதியாக கொந்தகை கிராமத்தில் நடைபெற்று வரும் 6-ம்…
- 9

பழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி?- கல்வெட்டு ஆய்வாளர்கள் தரும் புதிய செய்தி

Posted by - ஆகஸ்ட் 7, 2020 0
  பழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி?- கல்வெட்டு ஆய்வாளர்கள் தரும் புதிய செய்தி ஏகநாதன் கோயில். மதுரைக்கு 20 கிலோ மீட்டர் மேற்கில் உள்ள…

கீழடி அகழாய்வில் கருங்கல் எடைக்கற்கள் கண்டுபிடிப்பு

Posted by - ஜூலை 10, 2020 0
  கீழடி அகழாய்வில் கருங்கல் எடைக்கற்கள் கண்டுபிடிப்பு திருப்புவனம்  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வில் கருங்கல் எடைக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன. திருப்புவனம் அருகே கீழடியில் பிப்.19-ம்…

உங்கள் கருத்தை இடுக...