தமிழ் ஸ்டிக்கர்களை பதிவிறக்கம் செய்து வாட்ஸ்அப்-ல் பயன்படுத்துவது எப்படி?

தமிழ் ஸ்டிக்கர்களை பதிவிறக்கம் செய்து வாட்ஸ்அப்-ல் பயன்படுத்துவது எப்படி?

சில வருடங்களுக்கு முன்பு வாட்ஸ்அப்-ல் வெறும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள், டெக்ஸ்ட் மட்டுமே அனுப்பமுடியும் என்ற நிலை இருந்தது, ஆனால் இப்போது பல விதமான ஸ்டிக்கர்களை மிக சுலபமாக அனுப்ப முடியும். இந்த ஸ்டிக்கர்கள் பற்றி கூற வேண்டும் என்றால் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிப்பது, நண்பர்களை கலாய்ப்பது போன்ற பலவற்றிக்கு உதவியாக இருக்கும்.

ஆப் வசதி உதவியுடன்

இப்போது பல்வேறு மக்களும் ஸ்டிக்கர் அனுப்பி தான் குறிப்பிட்ட கருத்துகளை தெரிவிக்கின்றனர். குறிப்பாக பிரபலமான நடிகர் மற்றும் நடிகைகள், நகைச்சுவை நடிகர்கள் மற்றும் நமது ஸ்டிக்கர்களை கூட எளிமையாக உருவாக்க சில ஆப் வசதிகள் உதவுகின்றன. இதுபோன்ற ஸ்டிக்கர்களை உருவாக்கும் ஆப் வசதி உதவியுடன் வாட்ஸ்அப்-ல் ஸ்டிக்கர்களை மிக எளிமையாக அனுப்ப முடியும்.

வாட்ஸ்அப் Disappearing Messages: ON மற்றும் OFF செய்வது எப்படி? சிம்பிள் டிப்ஸ்.!

 வாட்ஸ்அப்-ல் பயன்படுத்துவது எப்படி

சரி இப்போது தமிழ் ஸ்டிக்கர்களை பதிவிறக்கம் செய்து வாட்ஸ்அப்-ல் பயன்படுத்துவது எப்படி என்பதை சற்று விரிவாகப் பார்ப்போம். இதற்கு மூன்று ஆப் வசதிகள் உங்களுக்கு உதவும். அந்த ஆப் வசதிகள் பெயர் மற்றும் அவற்றின் பயன்களை இப்போது பார்ப்போம்.

ஆப்-1

ஆப்-1

முதலில் நாம் பார்ப்பது Tamilanda stickers ஆப். இந்த ஆப் வசதி ஆனது 11 எம்பி அளவைக் கொண்டுள்ளது. இந்த ஆப்- வசதியை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் உங்கள் நண்பர்களிடம் வாட்ஸ்அப்-ல் பேசும் போது அவர்களை அருமையாக கலாய்க்க முடியும்.

ஏனென்றால் இந்த ஆப் பயன்பாட்டில் அதிப்படியாக தமிழ் ஸ்டிக்கர்ஸ் மற்றும் எழுத்து வடிவிலான ஸ்டிக்கர்ஸ் கொடுத்திருக்கிறார்கள். இதை உங்கள் நண்பருக்கு அனுப்பி மகிழலாம். மேலும் இந்த ஆப் வசதியில் உள்ள ஸ்டிக்கர்களை தேர்வு செய்து வாட்ஸ்அப்-ல் ADD கொடுத்தால் போதும் அருமையாக பயன்படுத்தலாம்.

ஆப்-2

ஆப்-2

அடுத்து நாம் பார்ப்பது Tamil Chat Sticker ஆப். இந்த ஆப் வசதியான 20 எம்பி அளவைக் கொண்டுள்ளது. இந்த ஆப் வசதியில் தனித்துவமான ஸ்டிக்கர்கள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஸ்டிக்கர் எழுத்து வடிவில் கொடுத்திருப்பதால் உங்கள் நண்பர்கள் மிகவும் ஆச்சரியப் படுவார்கள். மேலும் இந்த ஆப் வசதியில் உள்ள ஸ்டிக்கர்களை தேர்வு செய்து வாட்ஸ்அப்-ல் ADD கொடுத்தால் போதும் அருமையாக பயன்படுத்தலாம்.

ஆப்-3

ஆப்-3

கடைசியாக நாம் பார்ப்பது Sticker maker எனும் ஆப். இந்த ஆப் வசதியானது 10 எம்பி அளவைக் கொண்டுள்ளது. இந்த ஆப் பயன்பாட்டை பயன்படுத்துவதன் மூலமாக நீங்கள் விரும்பிய புகைப்படம் அல்லது உங்களிடம் இருக்கும் புகைப்படம் அல்லது உங்கள் நண்பர்களின் புகைப்படத்தை நீங்கள் sticker-ஆகா மாற்றி உங்கள் நண்பர்களுக்கு அனுப்ப முடியும்.

குறிப்பாக நீங்கள் சேர்க்கும் புகைப்படம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நீங்களே தேர்வு செய்து கொள்ள முடியும். பின்பு நீங்கள் சேர்க்கும் ஒவ்வொரு வகையில் அதிகப்படியாக 30 புகைப்படங்கள் வரை சேர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஸ்டிக்கர்களை பதிவிறக்கம் செய்து வாட்ஸ்அப்-ல் பயன்படுத்துவது எப்படி? Source link

Tags:

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

உங்கள் கருத்தை இடுக...

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

error: Content is protected !!
Logo
Register New Account
Reset Password
%d bloggers like this: