தாங்க முடியாத முழங்கால் வலியா? எலுமிச்சை இருக்கே

தாங்க முடியாத முழங்கால் வலியா? எலுமிச்சை இருக்கே

எலும்புகள் தொடர்ச்சியாக தேய்மானம் அடையும் காரணமாக முழங்கால் மூட்டு வலி ஏற்படுகிறது. இப்பிரச்சனை வயதானவர்களுக்கு மட்டுமில்லாமல் இளம் வயதினரையும் தாக்குகிறது.

இயற்கை வழியில் இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண எலுமிச்சை மற்றும் நல்லெண்ணெய் உதவுகிறது.

தேவையான பொருட்கள்
  • எலுமிச்சை – 2
  • நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
பயன்படுத்தும் முறை

எலுமிச்சையை துண்டுகளாக்கி, காட்டன் துணியில் வைத்து கட்டி, அதை வெதுவெதுப்பான நல்லெண்ணெயில் நனைத்து, வலியுள்ள இடத்தில் 5-10 நிமிடம் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

இம்முறையை தினமும் இரண்டு வேளைகள் செய்து வந்தால், முழங்கால் மற்றும் மூட்டுவலி விரைவில் குணமாகும்.

நன்மைகள்
  • எலுமிச்சை பழத்தில் உள்ள கால்சியம் மற்றும் விட்டமின்கள் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து தடுத்து, எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • நல்லெண்ணெயில் நோயெதிர்ப்பு அழற்சி பொருள் உள்ளது. இது எலும்பு மஜ்ஜை திசுக்கள் வழியாக ரத்த நாளங்களில் ஊடுருவி, ரத்த ஓட்டத்தில் நுழைந்து, எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கிறது.
குறிப்பு

உடல் எடையை தாங்க முடியாத அளவு வலி இருந்தால், கால்களை மடக்க, நீட்ட முடியாமல் இருந்தால், முழங்கால், மூட்டு வலியுடன் காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

தாங்க முடியாத முழங்கால் வலியா? எலுமிச்சை இருக்கே Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

உங்கள் கருத்தை இடுக...

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

error: Content is protected !!
Logo
Register New Account
Reset Password
%d bloggers like this: