தாய்மார்களே! தாய்ப்பால் கொடுக்க முடியவில்லையா? இந்த உணவுகளை சாப்பிடுங்க
குழந்தைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் தாய்ப்பால் மூலமாக மட்டுமே கிடைக்கிறது. எனவே தாய்ப்பாலை நிறுத்திவிடாமல் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
இருப்பினும் சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பிரச்சனை இருக்கும். அவர்களுக்கு குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பால் சுரக்காது. இதற்கு எல்லாம் காரணம், ஊட்டச்சத்து குறைபாடு மட்டும் தான்.
எனவே ஊட்டசத்து கிடைக்க சில ஆரோக்கிய உணவுகளை எடுத்து கொள்வது அவசியமாகும்.
அந்தவகையில் தற்போது தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவும் உணவுகளை பற்றி பார்ப்போம்.
- தண்ணீரில் பெருஞ்சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க விட்ட பின் அதில் தேனை விட்டுப் பருகி வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
- ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை எடுத்து நீரில் நன்கு கொதிக்க விட்டு, அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துப் பருகி வந்தால் ஓரிரு நாட்களில் நீங்கள் தாய்ப்பாலின் அளவு அதிகரிப்பதை உணரலாம்.
- சிறிது இலவங்கப்பட்டையை எடுத்துக் கொண்டு சுடு தண்ணீரில் போட்டு தேன் கலந்து பருகி வர, தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
- சுக்கு மற்றும் மிளகு கலந்த கருப்பட்டியை தினம் சிறிதளவு உடைத்து உண்பதால் தாய்ப்பால் நன்றாகச் சுரக்கத் தொடங்கும். கூடுதலாகக் கருப்பட்டியில் இரும்புச் சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகை வியாதி தாய்மார்களைத் திரும்பிக் கூடப் பார்க்காது.
- சீரகத்தைச் சுடு நீரில் போட்டுத் தேவைப்பட்டால் தேன் கலந்து தினமும் இரவில் பருகி வரத் தாய்ப்பால் அதிகரிக்கும்.
- முருங்கைக் கீரை, காய் மற்றும் பூ என்று அனைத்திலுமே இரும்புச் சத்து நிறைந்துள்ளன.தினம் இதில் ஏதாவது ஒன்றைப் பொரியலாகச் செய்து தாய்மார்கள் உட்கொள்வதால் தாய்ப்பால் சுரப்பு சிறப்பான வகையில் நிச்சயம் அதிகரிக்கும்.
- பப்பாளிப் பழங்கள் தாய்ப்பால் சுரப்பிற்குப் பெரிதும் உதவுகின்றன. இதைப் பெண்கள் தினம் மிதமான அளவில் உட்கொள்வதால் பால் நன்றாகச் சுரக்கத் தொடங்கும்.
- தினமும் நீங்கள் செய்யும் சமையலில் பூண்டைச் சற்று அதிக அளவில் பயன்படுத்தி வந்தாலே தாய்ப்பால் சுரக்கும் அளவு அதிகரிக்கும்.
- வெற்றிலையை நெருப்பில் காட்டி, பின் மார்பில் வைத்துக் கட்ட தாய்ப்பால் நன்றாகச் சுரக்கத் தொடங்கும். இன்றளவும் இந்த வீட்டு வைத்தியம் கிரமங்களில் பெரிய அளவில் பின் பற்றப்பட்டு வருகிறது.
- இரவில் நான்கு ஐந்து பாதாம் பருப்புகளைத் தண்ணீரில் ஊற வைத்து, அடுத்த நாள் பருப்புகளை உட்கொள்ள நல்ல பலன் கிட்டும். இதைத் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளத் தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதோடு பெண்களின் உடல் வலிமையும் பெறும்.
தாய்மார்களே! தாய்ப்பால் கொடுக்க முடியவில்லையா? இந்த உணவுகளை சாப்பிடுங்கSource link