- 1

திருவாசகம் – உயிருண்ணிப்பத்து – சிவனந்தம் மேலிடுதல்

1317 0

உயிருண்ணிப்பத்து – சிவனந்தம் மேலிடுதல்


திருவாசகம்/உயிருண்ணிப் பத்து

 
பைந்நாப் பட அரவேரல்குல் உமைபாகம் தாய் என்
மெய்ந்நாள்தொறும் பிரியா வினைக்கேடா விடைப்பாகா
செந்நாவலர் பசும்புகழ்த் திருப்பெருந்துறை உறைவாய்
எந்நாட்களித் தெந்நாள் இறுமாக்கேன் இனியானே. 506

நானாரடி அணைவானொரு நாய்க்குத் தவிசிட்டிங்கு
ஊனாருடல் புகுந்தான்உயிர் கலந்தான் உளம்பிரியான்
தேனார்சடை முடியான் மன்னு திருப்பெருந்துறை உறைவான்
வானோர்களும் அறியாததோர் வளமீந்தனன் எமக்கே. 507

எனைநானென்ப தறியேன்பகல் இரவாவதும் அறியேன்
மனவாசகங் கடந்தான் எனை மத்தோன்மத்தனாக்கிச்
சினமால்விடை உடையான் மன்னு திருப்பெருந்துறை உறையும்
பனவன் னெனைச் செய்தபடி றறியேன் பரஞ் சுடரே. 508

வினைக்கேடரும் உளரோபிறர் சொல்லீர் வியனுலகில்
எனைத்தான்புகுந் தாண்டான்என தென்பின்புரை யுருக்கிப்
பினைத்தான்புகுந் தெல்லே பெருந்துறையில் உறைபெம்மான்
மனத்தான் கண்ணின் அகத்தான் மறு மாற்றத்திடை யானே. 509

பற்றாங்கவை அற்றீர்பற்றும் பற்றாங்கது பற்றி
நற்றாங்கதி அடைவோமெனிற் கெடுவீரோடி வம்மின்
தெற்றார்சடை முடியான் மன்னு திருப்பெருந்துறை இறைசீர்
கற்றாங்கவன் கழல்பேணின ரோடுகூடுமின் கலந்தே. 510

கடலின்திரையதுபோல் வருகலக்க மலம் அறுத்தென்
உடலும்என துயிரும்புகுந் தொழியாவண்ணம் நிறைந்தான்
சுடருஞ்சுடர் மதிசூடிய திருப்பெருந்துறை உறையும்
படருஞ்சடை மகுடத்தெங்கள் பரன்தான் செய்த படிறே. 511

வேண்டேன்புகழ் வேண்டேன் செல்வம்
வேண்டேன் மண்ணும் விண்ணும்
வேண்டேன் பிறப் பிறப்புச்சிவம் வேண்டார் தமைநாளும்
தீண்டேன்சென்று சேர்ந்தேன்மன்னு திருப்பெருந்துறை இறைதாள்
பூண்டேன்புறம் போகேன் இனிப் புறம்போகலொட் டேனே. 512

கோற்றேன்எனக் கென்கோகுரை கடல்வாய் அமுதென்கோ
ஆற்றேன்எங்கள் அரனே அருமருந்தே என தரசே
சேற்றார்வயல் புடைசூழ் தரு திருப்பெருந்துறை உறையும்
நீற்றார்தரு திருமேனிநின் மலனே உனையானே. 513

எச்சம் அறிவேன்நான்எனக் கிருக்கின்றதை அறியேன்
அச்சோ எங்கள் அரனே அரு மருந்தே எனதமுதே
செச்சைமலர் புரைமேனியன் திருப்பெருந்துறை உறைவான்
நிச்சம்என நெஞ்சில்மன்னி யானாகிநின் றானே. 514

வான்பாவிய உலகத்தவர் தவமே செய அவமே
ஊன்பாவிய உடலைச் சுமந்தடவிமர மானேன்
தேன்பாய்மலர்க் கொன்றைமன்னு திருப்பெருந்துறை உறைவாய்
நான்பாவியன் ஆனால் உனை நல்காயென லாமே. 515

திருச்சிற்றம்பலம்

உயிருண்ணிப்பத்து – சிவனந்தம் மேலிடுதல்

(திருப்பெருந்துறையில் அருளியது – கலிவிருத்தம்)

மாணிக்கவாசகர்:

மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும், திருக்கோவையாருமாகும். இவர் 9 ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராக பணியாற்றினார்.



Buy Book From amazon:

Thiruvasagam Tamil Book Hardcover – 2017
by SWAMI CHIDBHAVANANDA

Related Post

- 3

திருவாசகம் – ஆனந்த மாலை

Posted by - ஏப்ரல் 12, 2020 0
ஆனந்த மாலை (தில்லையில் அருளியது – சிவானுபவ விருத்தம் – அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) மின்னே ரனைய பூங்கழல்கள் அடைந்தார் கடந்தார் வியனுலகம் பொன்னே ரனைய…
- 5

திருவாசகம் – அருட்பத்து – மகாமாயா சுத்தி

Posted by - ஏப்ரல் 12, 2020 0
அருட்பத்து – மகாமாயா சுத்தி திருவாசகம்/அருட்பத்து சோதியே சுடரே சூழொளி விளக்கே சுரிகுழற் பணைமுலை மடந்தை பாதியே பரனே பால்கொள்வெண்ணீற்றாய் பங்கயத் தயனுமா லறியா நீதியே செல்வத்…
- 7

திருவாசகம் – அற்புதப்பத்து – அனுபவமாற்றாமை

Posted by - ஏப்ரல் 12, 2020 0
அற்புதப்பத்து – அனுபவமாற்றாமை திருவாசகம்/அற்புதப் பத்து மைய லாய்இந்த மண்ணிடை வாழ்வெனும் ஆழியு ளகப்பட்டுத் தைய லாரெனுஞ் சுழித்தலைப் பட்டுநான் தலைதடு மாறாமே பொய்யெ லாம்விடத் திருவருள்…
- 9

திருவாசகம் – அச்சப் பத்து

Posted by - ஏப்ரல் 12, 2020 0
அச்சப் பத்து திருவாசகம்/அச்சப் பத்து மாணிக்கவாசகர்: மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும், திருக்கோவையாருமாகும்.…
- 11

திருவாசகம் – கோயில் திருப்பதிகம்

Posted by - ஏப்ரல் 12, 2020 0
கோயில் திருப்பதிகம் திருவாசகம்/கோயில் திருப்பதிகம் மாறிநின்றென்னை மயங்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழியடைத் தமுதே ஊறிநின்றென்னுள் எழுபரஞ்சோதி உள்ளவா காணவந்தருளாய் தேறலின் தெளிவே சிவபெருமானே திருப்பெருந்துறையுறை சிவனே ஈறிலாப்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  1. Slot Online
  2. rtp yang tepat
  3. Slot Gacor
  4. Situs Judi Slot Online Gacor
  5. Situs Judi Slot Online
  6. Situs Slot Gacor 2023 Terpercaya
  7. SLOT88
  8. Situs Judi Slot Online Gampang Menang
  9. Judi Slot Online Jackpot Terbesar
  10. Slot Gacor 88
  11. rtp Slot Terpercaya
  12. Situs Judi Slot Online Terbaru 2023
  13. Situs Judi Slot Online Terpercaya 2023 Mudah Menang
  14. Daftar Situs Judi Slot Online Gacor Terbaik
  15. Slot Deposit Pulsa Tanpa Potongan
  16. Situs Judi Slot Online Resmi
  17. Slot dana gacor
  18. Situs Slot Gacor 2023
  19. rtp slot yang tepat
  20. slot dana
  21. harum4d slot