- 1

திருவாசகம் – குயிற்பத்து

1025 0

குயிற்பத்து


திருவாசகம்/குயிற்பத்து

ஏரார் இளங்கிளியே எங்கள் பெருந்துறைக்கோன்
சீரார் திருநாமம் தேர்ந்துரையாய் – ஆரூரன்
செம்பெருமான் வெண்மலாரான் பாற்கடலான் செப்புவபோல்
எம்பெருமான் தேவர்பிரான் என்று. 358

ஏதமிலா இன்சொல் மரகதமே ஏழ்பொழிற்கும்
நாதன்மை ஆளுடையான் நாடுரையாய் – காதலவர்க்கு
அன்பாண்டு மீளா அருள்புரிவான் நாடென்றும்
தென்பாண்டி நாடே தெளி. 359

தாதாடு பூஞ்சோலைத் தத்தாய் நமையாளும்
மாதாடும் பாகத்தன் வாழ்பதியென் – கோதாட்டிப்
பத்தரெல்லாம் பார்மேற் சிவபுரம்போற் கொண்டாடும்
உத்தர கோசமங்கை யூர். 360

செய்யவாய்ப் பைஞ்சிறகிற் செல்வீநஞ் சிந்தைசேர்
ஐயன் பெருந்துறையான் ஆறுரையாய் – தையலாய்
வான்வந்த சிந்தை மலங்கழுவ வந்திழியும்
ஆனந்தங் காணுடையான் ஆறு. 361

கிஞ்சுகவாய் அஞ்சுகமே கேடில் பெருந்துறைக்கோன்
மஞ்சன் மருவும் மலைபகராய் – நெஞ்சத்து
இருளகல வாள்வீசி இன்பமரும் முத்தி
அருளுமலை என்பதுகாண் ஆய்ந்து. 362

இப்பாடே வந்தியம்பு கூடுபுகல் என்கிளியே
ஒப்பாடாச் சீருடையான் ஊர்வதென்னே – எப்போதும்
தேன்புரையுஞ் சிந்தையராய்த் தெய்வப்பெண் ணேத்திசைப்ப
வான்புரவி யூரும் மகிழ்ந்து. 363

கோற்றேன் மொழிக்கிள்ளாய் கோதில் பெருந்துறைக்கோன்
மாற்றாறை வெல்லும் படைபகராய் – ஏற்றார்
அழுக்கடையா நெஞ்சுருக மும்மலங்கள் பாயுங்
கழுக்கடைகாண் கைக்கொள் படை. 364

இன்பால் மொழிக்கிள்ளாய் எங்கள் பெருந்துறைக்கோன்
முன்பால் முழங்கும் முரசியம்பாய் – அன்பாற்
பிறவிப் பகைகலங்கப் பேரின்பத் தோங்கும்
பருமிக்க நாதப் பறை. 365

ஆய மொழிக்கிள்ளாய் அள்ளூரும் அன்பர்பால்
மேய பெருந்துறையான் மெய்த்தாரென் – தீயவினை
நாளுமணு காவண்ணம் நாயேனை ஆளுடையான்
தாளிஅறு காம் உவந்த தார். 366

சோலைப் பசுங்கிளியே தூநீர்ப் பெருந்துறைக்கோன்
கோலம் பொலியுங் கொடிகூறாய் – சாலவும்
ஏதிலார் துண்ணென்ன மேல்விளங்கி ஏர்காட்டும்
கோதிலா ஏறாம் கொடி. 367

திருச்சிற்றம்பலம்

மாணிக்கவாசகர்:

மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும், திருக்கோவையாருமாகும். இவர் 9 ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராக பணியாற்றினார்.



Buy Book From amazon:

Thiruvasagam Tamil Book Hardcover – 2017
by SWAMI CHIDBHAVANANDA

Related Post

- 3

திருவாசகம் – திருப்புலம்பல் – சிவானநத முதிர்வு

Posted by - ஏப்ரல் 12, 2020 0
திருப்புலம்பல் – சிவானநத முதிர்வு திருவாசகம்/திருப்புலம்பல் பூங்கமலத் தயனெடுமால் அறியாத நெறியானே கோங்கலர்சேர் குவிமுலையாள் கூறாவெண் ணீறாடி ஓங்கெயில்சூழ் திருவாரூர் உடையானே அடியேன்நின் பூங்கழல்கள் அவையல்லா தெவையாதும்…
- 5

திருவாசகம் – திருவார்த்தை – அறிவித்து அன்புறுத்தல்

Posted by - ஏப்ரல் 12, 2020 0
திருவார்த்தை – அறிவித்து அன்புறுத்தல் திருவாசகம்/திருவார்த்தை மாதிவர் பாகன் மறைபயின்ற வாசகன் மாமலர் மேயசோதி கோதில் பரங்கருணையடியார் குலாவுநீதி குண மாகநல்கும் போதலர் சோலைப் பெருந்துறையெம் புண்ணியன்…
- 7

திருவாசகம் – திருக்கழுக்குன்றப் பதிகம் – குரு தரிசனம்

Posted by - ஏப்ரல் 12, 2020 0
திருக்கழுக்குன்றப் பதிகம் – குரு தரிசனம் திருவாசகம்/திருக்கழுக் குன்றப் பதிகம் பிணக்கிலாத பெருந்துறைப்பெரு மான் உன்நாமங்கள் பேசுவார்க் கிணக்கிலாததோர் இன்ப மேவருந் துன்ப மேதுடைத் தெம்பிரான் உணக்கிலாததோர்…
- 9

திருவாசகம் – அச்சப் பத்து

Posted by - ஏப்ரல் 12, 2020 0
அச்சப் பத்து திருவாசகம்/அச்சப் பத்து மாணிக்கவாசகர்: மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும், திருக்கோவையாருமாகும்.…
- 11

திருவாசகம் – எண்ணப்பதிகம் – ஒழியா இன்பத்துவகை

Posted by - ஏப்ரல் 12, 2020 0
எண்ணப்பதிகம் – ஒழியா இன்பத்துவகை திருவாசகம்/எண்ணப் பதிகம் பாருரு வாய பிறப்பறவேண்டும் பத்திமை யும்பெற வேண்டும் சீருரு வாய சிவபெரு மானே செங் கமல மலர்போல் ஆருரு…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன