- 1

திருவாசகம் – யாத்திரைப் பத்து – அனுபவ அதீதம் உரைத்தல்

684 0

யாத்திரைப் பத்து – அனுபவ அதீதம் உரைத்தல்


திருவாசகம்/யாத்திரைப் பத்து

பூவார் சென்னி மன்னனெம் புயங்கப் பெருமான் சிறியோமை
ஓவா துள்ளம் கலந்துணர்வாய் உருக்கும் வெள்ளக் கருணையினால்
ஆவா என்னப் பட்டன் பாய் ஆட்பட் டீர்வந் தொருப்படுமின்
போவோங் காலம் வந்ததுகாண் பொய்விட் டுடையான் கழல்புகவே. 605

புகவே வேண்டா புலன்களில்நீர் புயங்கப் பெருமான் பூங்கழல்கள்
மிகவே நினைமின் மிக்கவெல்லாம் வேண்டா போக விடுமின்கள்
நகவே ஞாலத் துள்புகுந்து நாயே அனைய நமையாண்ட
தகவே யுடையான் தனைச்சாரத் தளரா திருப்பார் தாந்தாமே. 606

தாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதிவகையும்
யாமார் எமதார் பாசமார் என்னமாயம் இவைபோகக்
கோமான் பண்டைத் தொண்டரோடும் அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு
போமா றமைமின் பொய்நீக்கிப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே. 607

அடியார் ஆனீர் எல்லீரும் அகல விடுமின் விளையாட்டைக்
கடிசே ரடியே வந்தடைந்து கடைக்கொண் டிருமின் திருக்குறிப்பைச்
செடிசே ருடைலச் செலநீக்கிச் சிவலோகத்தே நமைவைப்பான்
பொடிசேர் மேனிப் புயங்கன்தன் பூவார் கழற்கே புகவிடுமே. 608

விடுமின் வெகுளி வேட்கைநோய் மிகவோர் காலம் இனியில்லை
உடையான் அடிக்கீழ்ப் பெருஞ்சாத்தோடு உடன்போ வதற்கே ஒருப் படுமின்
அடைவோம் நாம்போய்ச் சிவபுரத்துள் அணியார் கதவ தடையாமே
புடைபட்டுருகிப் போற்றுவோம் புயங்கன் ஆள்வான் புகழ்களையே. 609

புகழ்மின் தொழுமின் பூப்புனைமின் புயங்கன் தாளே புந்திவைத்திட்டு
இகழ்மின் எல்லா அல்லலையும் இனியோர் இடையூ றடையாமே
திகழுஞ் சீரார் சிவபுரத்துச் சென்று சிவன்தாள் வணங்கிநாம்
நிகழும் அடியார் முன்சென்று நெஞ்சம் உருகி நிற்போமே. 610

நிற்பார் நிற்கநில் லாவுலகில் நில்லோம் இனிநாம் செல்வோமே
பொற்பால் ஒப்பாந் திருமேனிப் புயங்கன் ஆவான் பொன்னடிக்கே
நிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின்
பிற்பால் நின்று பேழ்கணித்தாற் பெறுதற் கரியன் பெருமானே. 611

பெருமான் பேரானந்தத்துப் பிரியா திருக்கப் பெற்றீர்காள்
அருமா லுற்றுப் பின்னைநீர் அம்மா அழுங்கி அரற்றாதே
திருமா மணிசேர் திருக்கதவங் திறந்தபோதே சிவபுரத்துச்
திருமா லறியாத் திருப்புயங்கன் திருத்தாள் சென்று சேர்வோமே. 612

சேரக் கருகதிச் சிந்தனையைத் திருந்த வைத்துச் சிந்திமின்
போரிற் பொலியும் வேற்கண்ணாள் பங்கன் புயங்கன் அருளமுதம்
ஆரப் பருகி ஆராத ஆர்வங்கூர அழுந்துவீர்
போரப் புரிமின் சிவன்கழற்கே பொய்யிற் கிடந்து புரளாதே. 613

புரள்வார் தொழுவார் புகழ்வாராய் இன்றே வந்தாள் ஆகாதீர்
மருள்வீர் பின்னை மதிப்பாரார் மதியுட் கலங்கி மயங்குவீர்
தெருள்வீராகில் இதுசெய்ம்மின் சிவலோ கக்கோன் திருப்புயங்கன்
அருளார் பெறுவார் அகலிடத்தே அந்தோ அந்தோ அந்தோவே. 614

திருச்சிற்றம்பலம்

யாத்திரைப் பத்து – அனுபவ அதீதம் உரைத்தல்

(தில்லையில் அருளியது – அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

மாணிக்கவாசகர்:

மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும், திருக்கோவையாருமாகும். இவர் 9 ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராக பணியாற்றினார்.



Buy Book From amazon:

Thiruvasagam Tamil Book Hardcover – 2017
by SWAMI CHIDBHAVANANDA

Related Post

- 3

திருவாசகம் – ஆசைப்பத்து – ஆத்தும இலக்கணம்

Posted by - ஏப்ரல் 12, 2020 0
ஆசைப்பத்து – ஆத்தும இலக்கணம் திருவாசகம்/ஆசைப்பத்து கருடக்கொடியோன் காணமாட்டாக் கழற்சே வடியென்னும் பொருளைத் தந்திங் கென்னை யாண்ட பொல்லா மணியேயோ இருளைத் துரந்திட் டிங்கே வாவென்றங்கே கூவும்…
- 5

திருவாசகம் – திருத்தோள் நோக்கம்

Posted by - ஏப்ரல் 12, 2020 0
திருத்தோள் நோக்கம் திருவாசகம்/திருத்தோள் நோக்கம் பூத்தாரும் பொய்கைப் புனலிதுவே எனக்கருதிப் பேய்த்தேர் முகக்குறும் பேதைகுண மாகாமே தீர்த்தாய் திகழ்தில்லை அம்பலத்தை திருநடஞ்செய் கூத்தா உன் சேவடி கூடும்வண்ணந்…
- 7

திருவாசகம் – கோயில் மூத்த திருப்பதிகம்

Posted by - ஏப்ரல் 12, 2020 0
கோயில் மூத்த திருப்பதிகம் திருவாசகம்/கோயில் மூத்த திருப்பதிகம் உடையாள் உன்தன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீயிருத்தி அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால் அடியேன்உன் அடியார் நடுவுள் இருக்கும்…
- 9

திருவாசகம் – திருவுந்தியார்

Posted by - ஏப்ரல் 12, 2020 0
திருவுந்தியார் திருவாசகம்/திருவுந்தியார் மாணிக்கவாசகர்: மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும், திருக்கோவையாருமாகும். இவர் 9…
- 11

திருவாசகம் – ஆனந்த மாலை

Posted by - ஏப்ரல் 12, 2020 0
ஆனந்த மாலை (தில்லையில் அருளியது – சிவானுபவ விருத்தம் – அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) மின்னே ரனைய பூங்கழல்கள் அடைந்தார் கடந்தார் வியனுலகம் பொன்னே ரனைய…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன