தேனுகர் வண்டு …
தேனுகர் வண்டு மதுதனை யுண்டு
தியங்கியே கிடந்ததைக் கண்டு
தானதைச் சம்புவின் கனியென்று
தடங்கையா லெடுத்துமுன் பார்த்தாள்,வானுற்ற்மதியும் வந்ததென் றெண்ணி
மலர்க்கரங் குவியுமென் றஞ்சிப்
போனது வண்டோ பறந்ததோ பழந்தான்
புதுமையோ விதுமெனப் புகன்றாள்.!
சொற்பொருள்
1. மது – தேன்
2. தியங்கி – மயங்கி
3. சம்பு – நாவல்
4. மதியம் – நிலவு
பாடலின் விளக்கம்
ஒரு பெண் நாவல் மரங்கள் நிறைந்த சோலை ஒன்றில் உலாவிக் கொண்டிருந்தாள். ஒரு வண்டு வயிறுமுட்டத் தேன் குடித்து கிறக்கத்தில் கீழே விழுந்து கிடக்கிறது. அந்தப் பக்கமாக நடந்து வந்த ஒரு பெண் தரையில் நாவல் பழம் (சம்புவின் கனி) ஒன்று கிடப்பதாக நினைத்து அந்த வண்டைக் கையில் எடுத்து உள்ளங்கையில் வைத்துக் கொண்டு அதைப் பார்த்தாளாம்.
கொஞ்சம் போதை தெளிந்த வண்டு லேசாகக் கண்ணைத் திறந்ததாம். அரை மயக்கத்தில் இருந்த அந்த வண்டு அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்ததாம் பிரகாசமாக இருந்த அவள் முகத்தைக் கண்டு நிலா வந்துவிட்டது இது இரவு என்று எண்ணியதாம்.
சரி…. தான் எங்கு இருக்கிறோம் என்று சுற்றும் முற்றும் பார்க்க…….
மிருதுவாக இருந்த அவள் கையை தாமரை மலர் என்று எண்ணியதாம். இரவானால் தாமரை மூடிவிடும் தான் உள்ளே அகப்பட்டு இறந்துவிடுவோம் என்று எண்ணி வேகமாகப் பறந்ததாம்.
இதைக் கண்ட அந்தப் பெண்….
இது என்ன புதுமை பழம் பறக்கிறதே! என்று வியந்து சொன்னாள்.
பாடலின் சுவை சேர்ந்த விளக்கம்

விவேக சிந்தாமணி Free Download
For PDF
For Kindle | 6 inch Mobile Device
விவேக சிந்தாமணி நூல் குறிப்பு
மயக்க அணி
ஒரு பொருளை மற்றொரு பொருளாக எண்ணி மயங்கிச் செயலாற்றுவதை புனைந்து கூறுவது மயக்க அணியாகும். விவேகசிந்தாமணியில் மகிழ்ச்சியூட்டும் மயக்க அணியை உடைய பாடல்கள் சில உள்ளன.
ஒருத்தி தண்டுகள் நிறைந்த தாமரரைப் பொய்கையில் இறங்கினாள். குனிந்து இரு கைகளாலும் தண்ணீரை முகந்து தன் முகத்தருகே ஏந்திப் பார்த்தாள். அதில் தெரிந்த தன் கண்ணின் நிழலைப் பார்த்துக் ‘கெண்டைமீன்,கெண்டைமீன்’ என்று கூவியபடி நீரைக் கீழே விட்டுக் கரையேறினாள். தரைக்கு வந்து கையைப் பார்த்தால் மீனைக் காணவில்லை. தயங்கிப் போய் நின்றாள்.
தண்டுலாவிய
தாமரைப் பொய்கையில்
மொண்டு நீரை
முகத்தருகு ஏந்தினாள்;
‘கெண்டை’ ‘கெண்டை’
எனக் கரை ஏறினாள்
கெண்டை காண்கிலள்
நின்று தயங்கினாள்.
Viveka sinthamani pictures
Viveka sinthamani pictures