தொடைப்பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கணுமா? இந்த பயற்சியை மட்டும் செய்து பாருங்க
பொதுவாக பெண்களுக்கு இன்றைய காலக்கட்டத்தில் உடல் எடையை குறைப்பது பெரிதும் சவாலாகவே உள்ளது.
அதிலும் தொடைப்பகுதியில் இருக்கும் அதிக்கப்படியான கொழுப்பை குறைப்பது தான் பெரும் கஷ்டமாக இருக்கும்.
இதற்கு கடின உடற்பயிற்சிகளை தான் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை.
“லையிங் சைடு லெக் ரைஸ் ”(Lying side leg raise) என்று அழைக்கப்படும் பயிற்சி தொடைப்பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்க உதவி புரிகின்றது.
இந்த பயிற்சி செய்வதனால் தொடையின் பக்கவாட்டுப் பகுதி வலுவடையும். பக்கவாட்டில் இருக்கும் தசைகள் இறுகும். தொடைப் பகுதியில் உள்ள கொழுப்பு கரையும்.
அந்தவகையில் தற்போது இந்த பயிற்சியை எப்படி செய்யலாம் என இங்கு பார்ப்போம்.

- முதலில் தரையில் ஒருக்களித்துப் படுக்க வேண்டும்.
- வலது கையைத் தலைக்கு மேல் நீட்டி, அதன் மீது தலையை வைத்துக்கொள்ள வேண்டும்.
- இடது கையை முட்டிவரை மடித்து, வலது பக்கமாக தரையில் பதிக்க வேண்டும்.
- வலது காலை சற்று மடித்து முன்புறமாக வைக்க வேண்டும்.
- இடது காலை மட்டும் மேலே உயர்த்தி, ஐந்து விநாடிகள் இந்த நிலையில் இருக்க வேண்டும்.
- பின்னர், படிப்படியாக பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்.
- இதேபோல 15 முறை செய்துவிட்டு, இடது பக்கத்துக்கும் செய்ய வேண்டும்.
- நன்கு பழகிய பின்னர் எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.
…
தொடைப்பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கணுமா? இந்த பயற்சியை மட்டும் செய்து பாருங்க Source link