தொடை, வயிற்றுப் பகுதியை வலுவாக்க இந்த பயிற்சியை செய்திடுங்க
தொடை மற்றும் வயிற்றுப் பகுதிகளை வலுவடைய செய்ய உடற்பயிற்சி முக்கியமானது ஆகும்.
இந்தப் பயிற்சிக்கு, பார்பெல் (Barbell) என்ற எடை தூக்கும் கருவி தேவை.
இந்தப் பயிற்சியை தொடர்ந்து செய்வதனால் தொடைப் பகுதி நன்றாக வலுப்படும்.
அந்தவகையில் தற்போது இந்த பயிற்சியை எப்படி செய்வது என பார்ப்போம்.

- பார்பெல் (Barbell) பிடியை பின்தோள்பட்டையில் தாங்கிப் பிடிக்க வேண்டும்.
- கழுத்தில் தாங்கக்கூடாது. கால்கள் தோள்பட்டை அளவுக்குச் சற்று விரிந்தநிலையில் வைக்க வேண்டும்.
- மூச்சை ஆழமாக உள்இழுத்து கீழே உட்காருவது போன்ற நிலைக்குக் கால்முட்டியை மடக்கிச் செல்ல வேண்டும்.
- சில விநாடிகளுக்குப் பிறகு மூச்சை வெளியேவிட்டபடி பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இந்தப் பயிற்சியைச் செய்வதால், முழு உடலுக்கும் வலு கூடுகிறது.
- கொழுப்பைக் குறைத்து தொடை, பின்புறம் மற்றும் வயிற்றுப் பகுதிகளை உறுதியாக்குகிறது.
- தொடை வலுவாக இருந்தால்தான் உடலைத் தாங்கிப்பிடிக்க முடியும். இந்தப் பயிற்சி செய்வதன் மூலம் தொடைப் பகுதி நன்றாக வலுப்படும்.
…
தொடை, வயிற்றுப் பகுதியை வலுவாக்க இந்த பயிற்சியை செய்திடுங்க Source link