nalavenba pdf - நளவெண்பா

நளன் தமயந்தி காதல் கதை | நளவெண்பா – Free PDF

15033 0

நளவெண்பா | Nalavenba

நளவெண்பா (nalavenba)  இது ஒரு காதல் கதையாகும், இந்த கதையை பாடியவர் புகழேந்திப் புலவர், இவரின் காலம் கி. பி. 12 ம் நூற்றாண்டு.

             இந்தியாவின் மிகப்பெரிய இரண்டு இதிகாசங்கள் மகாபாரதமும், ராமயணமும் ஆகும். இந்த இரண்டு இதிகாசங்களிலும் பல கதைகள் உள்ளன. அதிலும் மகாபாரதத்தை எடுத்துக் கொண்டால், அதில் எண்ணற்ற கதைகள் உள்ளது. பலருக்கு மகாபாரதம் என்றால் பாண்டவர்கள் பற்றி மட்டும் தான் தெரியும்.

       ஆனால் மகாபாரதத்தின் ஒரு பகுதியில் நளன் மற்றும் தமயந்தியின் அழகான காதல் கதையும் அடங்கியுள்ளது. சுயம்வர காண்டம், கலிதொடர் காண்டம், கலிநீங்கு காண்டம் என மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந் நூலில், 431 வெண்பாக்கள் உள்ளன. இவற்றுள் 13 வெண்பாக்கள், பாயிரம், நூல்வரலாறு என்பனவாகும். சுயம்வர காண்டத்தில் 155 வெண்பாக்களும், கலிதொடர் காண்டத்தில் 147 வெண்பாக்களும், கலிநீங்கு காண்டத்தில் 90 வெண்பாக்களும் உள்ளன.

நளன் தமயந்தி காதல் கதை

நளவெண்பா | Nalavenba - தமயந்தியும் தூது வந்த அன்னமும்
தமயந்தியும் தூது வந்த அன்னமும். ரவி வர்மாவின் ஓவியம்.

Nala Damayanthi story in tamil

 ஆகுகி என்ற வேட தம்பதியர் காட்டிலுள்ள குகை ஒன்றில் வசித்தனர். அவ்வழியே வந்த துறவி ஒருவரை அவர்கள் உபசரித்தனர். இரவாகி விட்டதால், குகைக்குள் துறவியும், ஆகுகியும் தங்கினர். அதில் இருவர் தான் தங்க முடியும் என்பதால் வேடன் வெளியில் தூங்கினான். தன் மனைவி ஒரு ஆணுடன் தங்கியிருக்கிறாள் என்ற எண்ணம் அவனுக்கு இல்லை. தன் மீது நம்பிக்கை வைத்த வேடனை முனிவர் பாராட்டினார். அயர்ந்து உறங்கிய வேடனை ஒரு மிருகம் கொன்று விட்டது. விஷயமறிந்த ஆகுகியும் உயிர் துறந்தாள்.

      சுயநலமில்லாத இத்தம்பதியர் மறுபிறவியில் நள தமயந்தியாகப் பிறந்தனர்.

        நிடத தேசத்து வேந்தனாகிய நளன் கல்வி கேள்விகளில், வீர தீரத்தில் தன்னிகரற்றவன். ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன். சமையல் கலையில் கைதேர்ந்தவன். இன்றைக்கும் கூட சிறந்த சமையலைப் பாராட்டும்போது நளபாகம் என்கிறோம்.

சுயநலமில்லாத இத்தம்பதியர் மறுபிறவியில் நள தமயந்தியாகப் பிறந்தனர்.  தமயந்தி விதர்ப நாட்டின் இளவரசியாக பிறந்தால். துறவி அன்னப்பறவையாக பிறந்தார். நளன் நிடதநாட்டின் மன்னராக இருந்தான்.

நளவெண்பா PDF Free Download

For PDF

நளவெண்பா பாடல் விளக்கம்

For Kindle Device (6 inch ) 

——————————————————-

          விதர்ப்ப தேசத்து இளவரசியாகிய மங்கை தமயந்தி அன்றலர்ந்த மலர் போல் அழகும் பொலிவும் கொண்டவள். நாணம், அச்சம், மடம், பயிர்ப்பு எனும் நால்வகை குணங்களையே, தேர், குதிரை, யானை, காலாள் எனும் நான்குவகை சேனைகளாகவும், மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்களையும், நல்வழி நடத்திச் செல்கின்ற அமைச்சர்களாகவும், காலில் அணிந்துள்ள சிலம்பே பேரிகையாகவும், வேற்படையும், வாள்படையுமே இரு கண்களாகக் கொண்டு பெண்மையினை ஆட்சி புரிகின்ற பெண்ணரசியாவாள்.

     த்தகைய சிறப்புமிக்க தமயந்தியின் குணநலன்களை அன்னத்தின் மூலம் கேட்டறிந்த நளன் அவள்பால் காதல் கொண்டான். தன் உள்ளக்கிடைக்கையை அன்னத்தின் வாயிலாக தமயந்திக்குத் தூதாக அனுப்பினான்.

 ன்னம் நளனது ஆண்மைச்சிறப்பையும், ஆட்சித்திறமையையும், அறிவுக்கூர்மையையும், பண்பினையும் சொல்லக் கேட்ட கணம் முதலே,  அன்னத்தின் பேச்சைக் கேட்ட தமயந்தி காதல் கொண்டாள்.

சுயம்வர காண்டம்

தமயந்தி சுயம்வரம் - நளவெண்பா | Nalavenba
தமயந்தி சுயம்வரம்

     இதனிடையே, அழகிலும்,அறிவிலும் தன்னிகரற்ற கற்புக்கரசி தமயந்திக்கு சுயம்வரம் நடக்கிறது. இதற்கு ( நளன் உட்பட ) மண்ணுலக மன்னர்கள் , விண்ணிலிருந்த தேவர்களும் வந்தனர். அவர்கள் தமயந்தி நளன் மீது கொண்ட காதலை அறிந்து, நளன் போலவே உருவம் கொண்டு காட்சியளித்தனர்.

            அனைவரும், நளன் போல் காட்சியளித்ததை எண்ணித் தமயந்தி குழம்பினாள். மனம் முழுதும் நளனை அடைவதிலேயே இருந்தது. நளனை எப்படி அறிவது ? அவள் எவ்வாறு நளனைக் கண்டறிந்தாள் என்பதைப் பின்வரும் பாடல் மூலம் அறிகிறோம் .

தமயந்தி சுயம்வரம்

சுயம்வரத்தில், நளன் போன்ற தோற்றத்தில் இருக்கும்

தேவர்களுக்கு நடுவில் தமயந்தி நளனை அறிதல் – பாடல் 160

கண்ணிமைத்த லாடிகள் காசினியில் தோய்தலால்
வண்ண மலர்மாலை வாடுதலால் – எண்ணி
நறுந்தா மரைவிரும்பு நன்னுதலே அன்னாள்
அறிந்தாள் நளன்றன்னை ஆங்கு

கண்ணிமைத்த லாடிகள் பாடல் பொருள்

கண் இமைத்தலால் – கண்கள் இமைப்பதால்
அடிகள் காசினியில் தோய்வதால் – கால் பாதங்கள் பூமியில் படுவதால்
காசினி – பூமி
எண்ணி நறுந்தா மரைவிரும்பு நன்னுதலே அன்னாள் – நறுமணமான தாமரையை விரும்பும் அழகிய நெற்றியுள்ள அந்தப் பெண்,
நன்னுதல் – நல் + நுதல் ( நெற்றி)
அறிந்தாள் நளன்றன்னை ஆங்கு – நளனை அங்கே( அவ்விடத்திலே) அறிந்தாள்.
நளன்றன்னை – நளன் தன்னை
ஆங்கு – அங்கே

தேவர்களுக்கு மனிதர்களிடமிருந்து சில வேறுபாடுகள் உண்டு. தேவர்களின் கண்கள் இமைக்காது. கால்கள் பூமியில் படாது. அவர்கள் சூடும் மாலை வாடாது. ஆனால் மனிதர்களிடத்தில் இவற்றை (கண் இமைத்தல், மாலை வாடுதல், வியர்வை) இயல்பாகக் காண முடியும் .இவை நளனிடமும், காணப்பட்டன. இதை வைத்து நளனை மிகச் சரியாக அடையாளம் கண்டு , மாலை சூட்டினாள் தமயந்தி.

தமயந்தியின் அறிவாற்றலயும், உண்மைக் காதலையும் இதன் மூலம் அறிகிறோம்.

கலிதொடர் காண்டம்

நளன்-தமயந்தி ஓவியர்: ரவி வர்மா
நளன்-தமயந்தி ஓவியர்: ரவி வர்மா

  அவர்களுக்கு இந்திரசேனன், இந்திரசேனை என்ற குழந்தைகள் பிறந்தனர். தமயந்தியை பெற முடியாத தேவர்கள், சனீஸ்வரரிடம், நளனைப் பிடிக்கும்படி கூறினர். கடமை உணர்வு மிக்கவர்களை சனீஸ்வரர் ஏதும் செய்யமாட்டார். அதே நேரம், கடமையில் சிறுகுற்றம் இருந்தாலும் பொறுக்க மாட்டார். நளனோ நல்லாட்சி செய்தான். இப்படிப்பட்ட ஒருவனை அவரால் பிடிக்க முடியவில்லை. ஒருமுறை பூஜைக்கு தயாரான போது, சரியாகக் கால் கழுவவில்லை. “”இதைக் கூட சரியாக செய்யாத மன்னன் நாட்டை எப்படி ஆளமுடியும்?” என கருதிய சனி, அவனைப் பிடித்து விட்டார்.

     இதன் பின், புட்கரன் என்பவனிடம் சூதாடி பொன், பொருளை இழந்தான். குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினான். காட்டில் மனைவி, குழந்தைகள் படும் துன்பத்தைக் கண்ட நளன், ஒரு முனிவர் மூலம் குழந்தைகளை தன் மாமனார் வீட்டுக்கு அனுப்பினான். பின், மனைவியையும் பிரிந்தான். நடுக்காட்டில் தவித்த அவளை, ஒரு மலைப்பாம்பு சுற்றியது. ஒரு வேடன் அவளைக் காப்பாற்றினான். ஆனால், அவள் மீது ஆசை கொண்டு விரட்டினான். தப்பித்த அவள், சேதிநாட்டை அடைந்து பணிப்பெண்ணாக இருந்தாள். ஒரு வழியாக அவளை, தமயந்தியின் தந்தை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

கலிநீங்கு காண்டம்

தமயந்தியை பிரிந்த நளன், காட்டில் கார்கோடன் என்னும் பாம்பு கடித்து கருப்பாக மாறினான். அப்பாம்பு ஒரு அற்புத ஆடையை வழங்கிச் சென்றது. அழகு இழந்த அவன், அயோத்தி மன்னன் மன்னன் ரிதுபன்னனின் தேரோட்டியாக வேலை செய்தான். அவன் அங்கிருப்பதை அறிந்த தமயந்தி, நளனை வரவழைக்க தனக்கு மறுசுயம்வரம் நடப்பதாக அறிவித்தாள். ரிதுபன்னன் அதற்கு புறப்படவே, நளனும் வருத்தத்துடன் தேரோட்டியாக உடன் வந்தான். அப்போது, நளனைப் பிடித்த சனி நீங்கியது.
தேரோட்டியாக இருந்த நளனையும், தமயந்தி அடையாளம் கண்டாள்.

  நளன், கார்கோடன் அளித்த ஆடையை அணிந்து தன் அழகான சுயஉருவை மீண்டும் பெற்றான். இவர்கள் மீண்டும் இணைந்தார்கள்.

புகழேந்திப் புலவர்

        புகழேந்திப் புலவர் என்னும் பெயருடன் இருவேறு காலங்களில் இருவேறு புலவர்கள் வாழ்ந்துவந்தனர். ஒருவர் இங்குக் நளவெண்பா பாடிய புகழேந்திப் புலவர். இவர் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். மற்றொருவர் அம்மானைப் பாடல்களைப் பாடிய புகழேந்திப் புலவர். 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

  புகழேந்தி நளவெண்பா எழுதிய புகழ்பெற்ற சோழர் கால புலவர் ஆவார். புகழேந்தியும், புலவர் ஒட்டக்கூத்தரும் போட்டிப் போட்டுக்கொண்டு பாடிய பாடல்கள் சுவை மிக்கவை. நளவெண்பா மிகச் சிறந்த 400 வெண்பாக்களையுடையது; இதன் காரணமாக வெண்பாவிற் புகழேந்தி என்றும் புகழப்படுகிறார்.

          எந்தெந்ந வகையான பாடல்களில் யார் யார் சிறந்து விளங்கினர் என்பதைத் தெரிவிக்கும் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் பாடல் இவரை வெண்பா பாடுவதில் மிகச் சிறந்தவர் என்று குறிப்பிடுகிறது.

வாழ்ந்த காலம்

     மாளுவ நாட்டில் முரணைநகர் சந்திரன் சுவர்க்கி என்பவனைப் புகழேந்தி குறிப்பிடுகிறார். இவனைப் பற்றி எந்தக் கல்வெட்டிலும் தகவல் இல்லை. கம்பனுடைய கருத்துக்களும், கம்பன் கையாண்டுள்ள சொற்றொடர்களும், புகழேந்தியின் நளவெண்பாவில் காணப்படுவதால், புகழேந்தி, கம்பனுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவராக இருக்க முடியாது என்ற தீர்வுக்கு வரலாம்.

Related Post

அழகரந்தாதி

Posted by - ஏப்ரல் 17, 2020 0
அழகரந்தாதி திருகவி மங்கை மணவாள வள்ளல்செந் தேன்றுளித்துமுருகவிழ் தென்றிரு மாலிருஞ் சோலை மலைமுகுந்தற்கிருகவின் றாள்களிற் சூடுமந் தாதியி நீரைம்பதில்ஒருகவி கற்கினு ஞானமும் வீடு முதவிடுமே. அங்கத் தமிழ்மறை…

38. உலவாக் கோட்டை அருளிய படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 38. உலவாக் கோட்டை அருளிய படலம் 38. உலவாக் கோட்டை அருளிய படலம் நல்லான் என்ற வேளாளன் ஒருவன் மதுரையில் வாழ்ந்து வந்தான். அவன்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 70. குளிர்நீரும் குறையாத சோறும்

Posted by - ஏப்ரல் 11, 2020 0
  புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம்   புறம் 70. குளிர்நீரும் குறையாத சோறும் 70. குளிர்நீரும் குறையாத சோறும் பாடியவர்: கோவூர் கிழார்:    …
ஆசாரக்கோவை விளக்கம் pdf

ஆசாரக்கோவை பாடல் மற்றும் விளக்கம்

Posted by - ஜூன் 11, 2019 3
எப்படிச் சாப்பிட வேண்டும், எந்த திசையில் சாப்பிட வேண்டும், மேலும் மலம், ஜலம் கழிக்க வேண்டிய இடங்கள், எந்த நாள்கள் பெண்ணுடன் சேர்வது நல்லது, எந்த நாள்…

நமச்சிவாயத் திருப்பதிகம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
நமச்சிவாயத் திருப்பதிகம் வழித்துணை நன்றாக அமைய நமச்சிவாயத் திருப்பதிகம் பாடப்படுகிறது. சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன