நிமோனியா | நுரையீரல் அழற்சி நோய்

நிமோனியா என்றால் என்ன?

நிமோனியா ஒரு கடும் மூச்சு மண்டலத் தொற்று நோய். இது நுரையீரலைப் பாதிக்கிறது. பொதுவாக நுரையீரல் நுண் அறைகளில், சுவாசிக்கும் போது காற்று நிரம்பி இருக்கும். ஆனால் நிமோனியாவில் இந்த நுண்ணறைகளில் சளியும் சீழும் நிரம்பி சுவாசிக்கும் போது வலியைக் கொடுத்து உயிர்வளி உள்ளெடுப்பைத் தடை செய்யும். வைரஸ், நுண்ணுயிரி, காளான் போன்ற பலவற்றால் நிமோனியா உண்டாகிறது.

இப்பொழுது, உலகின் ஒவ்வொரு வருடமும் 20 % குழந்தைகள், 5 வயது அடைவதற்கு முன்னமே நியூமோனியாவினால் இறக்கின்றனர். இது பல்வேறு காரணங்களின் விளைவாக ஏற்படுகிறது. இந்தியாவில் சுமார் 4 லட்சம் குழந்தைகள் இந்நோயினால் 5 வயதிற்குள்ளாக இறக்கின்றனர், இந்த 4 லட்சத்தில் 2 லட்சம் குழந்தைகள் நியூமோனியாகாக்கல் (பாக்டீரியா) நோயினால் இறக்கின்றனர்.

[button et_class=”குந்தை வளர்ப்பு ” target=”_self” style=”small bordered” url=”https://thamizhdna.org/childs-growth/” icon=”” title=”BUTTON TEXT”]

முதல்நிலை நிமோனியா, இது ஆரோக்கியமான நுறையீரலில் ஏற்படுகிறது.

இரண்டாம்நிலை நிமோனியா, இது ஏற்கெனவே சிதைவுற்ற நுறையீரலில் அல்லது நோய் தொற்றுவின் காரணமாக கடந்த காலங்களில் காயப்பட்ட நுறையீரல் அல்லது பிறவிக்கோளாறுகள் உள்ள நிலையில் ஏற்படுகிறது.

நிமோனியா உள்ளவர்களுக்கு நுரையீரலில் இருக்கும் சிறிய காற்றுப் பைகளில் சீழ் பிடிப்பதால் மூச்சுத்திணறல் ஏற்படும். எல்லா வயதினரையும் பாதிக்கும் இந்நோய், 2 வயதிற்கு குறைவானோர் மற்றும் 60 வயதிற்கு அதிகமானோரை பாதிக்க அதிக வாய்ப்புண்டு.

நிமோனியா-நுரையீரல் அழற்சி நோய்

நிமோனியா எவ்வாறு பரவுகிறது?

பல வழிகளில் நிமோனியா பரவுகிறது:

 • குழந்தையின் மூக்கு அல்லது தொண்டையில் பொதுவாக இருக்கும் வைரஸ் அல்லது நுண்ணுயிரி நுரையீரலைப் பாதித்தல்.
 • இருமல் அல்லது தும்மல் மூலம் நோய்பரப்பிகள் பரவலாம்.
 • இரத்தம் மூலமும் பரவலாம் (குறிப்பாகப் பிறந்த உடன்)

5 வயதுகுட்பட்ட குழந்தைகளில் நிமோனியாவின் தாக்கம்

 • காய்ச்சலோடும் இல்லாமலும்  இருமல் மற்றும்/அல்லது மூச்சு விடுவதில் சிரமம்.
 • வேகமான சுவாசம் மற்றும் நெஞ்சுச் சுவர் உள்ளொடுங்குதல் (விரிவதற்குப் பதில்).
 • கடுமையான பாதிக்கப்பட்ட குழந்தைகளால் உண்ண, குடிக்க இயலாமை; மயக்கம், குறைவெப்பம் அல்லது வலிப்பு ஏற்படலாம்.

யாருக்கு இந்நோய் ஏற்படும்?

இரண்டு வயதிற்குட்பட குழந்தைகள் சிறுபிள்ளைகள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள், என இரண்டு வித்தியாசமான வயதினரில், இந்த நோய் பொதுவாக ஏற்படக்கூடிய ஒன்று. இந்நோய் இரண்டு வயதிர்க்குட்பட்ட குழந்தைகளில் பொதுவாக அதிகளவு இருக்கும் மற்றும் குறிப்பாக உணவுப்பற்றாக்குறையுள்ள குழந்தைக்கு மரணத்தை ஏற்படுத்தும். நிமோனியா போதைப்பொருள் / மதுபானம் பழக்கமுள்ளவரில் மற்றும் கர்பிணிப்பெண்களிலும் மிகப்பொதுவாக காணப்படும்.

கீழ்காணும் நிலைகளுக்கு உள்ளாகும் குழந்தைகளுக்கு நியூமோனியா ஏற்ப்படும்.

 • எண்ணெய் போன்ற மூக்கு சொட்டு மருந்துகள் பயன்படுத்துவது.
 • தவறான ஊட்டும் முறைகள்
 • தற்செயலாக மண்ணெண்னையை நுகர்தல் (நஞ்சூட்டல்)

நோயானது நுறையீரலின் உறையுடன் தொடர்புடையதாக இருக்கும்போது நெஞ்சு வலி ஏற்படலாம். இந்த வலி மிக கூர்மையானதாகவும் மற்றும் மோசமானதாக குறிப்பாக ஆழ்ந்து மூச்சு விடும்போது இருக்கும். இத்தகைய வலி நுறையீரல் உறை சவ்வழற்சி வலி என்று அழைக்கப்படுகிறது.

நிமோனியாவின் அறிகுறிகள்

நிமோனியா-நுரையீரல் அழற்சி நோய்இருமல், முச்சுத்திணறல், காய்ச்சல், மூச்சு வாங்குதல், அசதி, வாந்தி, சுவாசிக்கும் பொழுதும் இருமும் பொழுதும் நெஞ்சு வலி, பசியின்மை, மலச்சிக்கல் ஆகியவை நிமோனியாவின் அறிகுறிகள் ஆகும்.

எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கைகள்

ஒருவருக்கு நியூமோனியா ஏற்படும் நிலையில், வாயினை துணிகொண்டு மூடவேண்டும் அப்படி செய்வதால் நோய் தொற்று சுற்றியுள்ள மற்றவர்களுக்கு பரவாது.

மருத்துவ சிகிச்சை பெறுவதுடன், நிமோனியா அறிகுறிகளை கட்டுப்படுத்த வீட்டில் உள்ள சில பொருட்கள் நிவாரணியாக செயல்படும். அவை கீழ்வருமாறு:

 1. பூண்டு: பூண்டை நசுக்கி நெஞ்சில் தடவலாம், அல்லது தினமும் ஒருமுறை பூண்டை அப்படியே சாப்பிடலாம்.
 2. மஞ்சள்: மூச்சுத் திணறலை குறைக்கவும், நெஞ்சிலிருந்து சலியை வெளியேற்றவும் மஞ்சள் உதவும். ஒரு கப் சூடான பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து பருகலாம்.
 3. தேன்: இருமலை குறைக்க தேன் உதவும். நிமோனியா அறிகுறிகள் குறையும் வரை தினமும் நீரில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து பருகலாம்.
 4. கற்பூர எண்ணெய்: நல்லெண்ணெய் உடன் மூன்று டேபிள் ஸ்பூன் கற்பூர எண்ணெய் கலந்து உறங்கும் முன் நெஞ்சில் தடவிக் கொள்ளலாம்.
 5. ஆப்பிள்: வைட்டமின் சி அதிகமுள்ள ஆப்பிள்கள் நிமோனியாவை குணப்படுத்த உதவும். நுரையீரலில் வீக்கத்தை குறைக்கவும் ஆப்பிள் உதவும். தினமும் ஆப்பிள் பழம் சாப்பிடலாம் அல்லது ஜூஸ் செய்து செய்து குடிக்கலாம்.
 6. கீரைகள், சிட்ரஸ் பழங்கள்: கமலாப்பழம், பெர்ரி பழங்கள், கிவி உள்ளிட்ட சிட்ரஸ் பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். நிமோனியாவை குணப்படுத்த கீரைகள் உதவும்.
 7. காய்கறி ஜூஸ்: கீரை, கேரட், பீட்ரூட் ஆகியவற்றின் ஜூஸ் நிமோனியாவை குணப்படுத்த உதவும்.

நிமோனியா (pneumonia) என்ற ஆங்கிலச் சொல்லானது நுரையீரலின் அனேகப் பாதிப்புகளை (நோய் எதிர்ப்புக் குறை நோய் பாதிப்புகள், நிணநீர்க்குழாய் நோய்கள், இரசாயனப் பாதிப்புகள் அல்லது மருந்துகளால் ஏற்படம் எதிர்விளைவுகள் போன்றவை) விவரிக்க பரவலாக பயன்படுத்தப்பட்டாலும் முக்கியமாக நுரையீரல் அழற்சியைக் குறிக்கவே pneumonitis என்ற ஆங்கிலச் சொல் இன்றளவும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this: