செக்கச் சிவந்திருப்பாள்
செக்கச் சிவந்திருப்பாள் – குட்டி
..செட்டிமகள் போலிருப்பாள்
வாரி முடிஞ்சிருப்பாள்- குட்டி
…வந்திருப்பாள் சந்தைக்கடை
சந்தையிலே மருக்கொழுந்து – குட்டி
… சரசமாத்தான் விற்குதடி!
கையிலொரு காசுமில்லை-குட்டி
… கடன்கொடுப்பார் யாருமில்லை!
வட்டவட்டப் பாறையிலே- குட்டி
… வரகரிசி தீட்டையிலே
ஆர்கொடுத்த சாயச்சீலை – குட்டி
… ஆலவட்டம் போடுதடி!
மஞ்சள் புடவைக்காரி- குட்டி
… மாதுளம்பூக் கூடைக்காரி!
மஞ்சள் புடவையிலே-குட்டி
… மருக்கொழுந்து வீசுதடி!
கானக் கரிசலிலே
… களையெடுக்கும் பெண்மயிலே!
நீலக் கருங்குயிலே!
… நிற்கட்டுமா போகட்டுமா?
நாட்டுப்புற பாடல்கள் – தமிழ் DNA
நிற்கட்டுமா போகட்டுமா