நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது ஏற்படும் அறிகுறி என்ன?
ஒரு பெண்ணுக்கு தனது வாழ்வில் தாய்மை அடையும் அந்த நிகழ்வு தான் வாழ்வில் மறக்க முடியதாக நிகழ்வாக கருதப்படுகின்றது.
ஆண் பெண் கலவியினால் சினை முட்டையுடன் ஆணின் விந்து இணையுமாயின் அங்கு கருத்தரிப்பு இடம்பெறுகிறது.
அந்தவகையில் ஒரு பெண் கர்ப்பம் ஆனதை உறுதி செய்வது எப்படி? எந்த பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம் என இங்கு பார்ப்போம்.
கரு எவ்வாறு உருவாகுகின்றது?
கருத்தரித்தல் நடந்த 4 நாட்களுக்குப் பிறகே கருவானது கருப்பை நோக்கி நகர்ந்து வருகிறது.
கருவானது கருப்பைக்குள் பதியமாகாமல் மிதந்து கொண்டிருக்கும் இந்த நிலையிலேயே சில ரசாயன மாற்றங்களை உண்டாக்குகிறது.
இவை கருமுட்டையைப் பதியம் செய்வதற்கு கருப்பையைத் தயார்படுத்தும் சில அறிகுறிகள் ஆகும். கருத்தரித்த ஒரு வாரம் அல்லது அதற்குப் பிறகுதான் கருப்பையுடன் கரு பதியமாகும்.
அறிகுறிகள்
- மாத விலக்கு தள்ளிப்போகுதல்
- குமட்டல்
- இரவிலும், பகலிலும் அடிக்கடி சிறுநீர் கழித்தல்
- புண்ணோ, அழற்சியோ இல்லாமல் வெள்ளைப்படுதல்
- வாசனையைக் கண்டால் நெடி
- மார்பகம் பெரிதாவது. அதில் தொட்டால் வலி ஏற்படும். மற்றும் மார்பக நரம்புகள் புடைத்துத் தெரியும். மார்பகக் காம்புகள் கருப்பாக மாறும்
- மலச்சிக்கல் இருப்பது போன்ற உணர்வு
- புளி,ஐஸ், மாங்காய் போன்றவற்றின் மீது திடீரென ஏற்படும் ஆசை
எந்த பரிசோதனை மூலம் கர்ப்பத்தை உறுதி செய்து கொள்ளுவது?
சிறுநீர்ப் பரிசோதனை
காலையில் விழித்து எழுந்ததும், முதல் சிறுநீரை சுத்தமான பாட்டிலில் பத்திரப்படுத்தி, அதில் ஓரிரு துளிகளை எடுத்து, இந்த டிப்பின் குறிப்பிட்ட பகுதியில் விடவேண்டும்.
கரு உறுதி செய்யப்பட்டதற்கான அடையாளமும், கரு பதியவில்லை என்பதற்கான அடையாளமும் அந்த டிப்பில் இருக்கும்.அதை வைத்து கர்ப்பத்தை உறுதி செய்து கொள்ளலாம்.
ஹார்மோன் பரிசோதனை
காலையில் எழுந்ததும் வெளிவரும் முதல் சிறுநீரைப் பிடித்து இந்த சோதனையை செய்ய வேண்டும்.
அதில் சிறுசிறு கட்டிகள் கலந்து வந்தால் பெண் கருத்தரிக்கவில்லை என்றும், அவ்வாறு இல்லாமல் இருந்தால் பெண் கருதரித்திருப்பதையும் அறிந்து கொள்ளலாம்.
இந்த பரிசோதனையின்போது சிறுநீர் கலங்கலாகவோ, ரத்தம் கலந்து வந்தாலோ பரிசோதனை முடிவில் தவறுகள் நிகழவும் வாய்ப்புகள் இருக்கின்றன.
அல்ட்ரா சவுண்டு பரிசோதனை
மாதவிலக்கு நின்ற ஐந்தாவது வாரத்திலேயே ஒரு பெண் கருவுற்றிருக்கிறாளா இல்லையா என்பதைத் துல்லியமாக இந்த முறையில் கூறிவிடலாம்.
கருவுற்ற எட்டாவது வாரத்தில் குழந்தையின் இதயம் துடிப்பதையும் இக்கருவியின் முலம் அறிந்து கொள்ளலாம்.
குழந்தை வளர, வளர அதன் இதயத் துடிப்புகள், வளர்ச்சி போன்ற அனைத்து நிலவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
கரு நெளிவுப் பரிசோதனை
கர்ப்பம் தரித்திருப்பதை அறிந்த பிறகு, நான்காவது மாதம் கருவானது தாயின் அடிவயிற்றில் ஒரு துடிப்பை ஏற்படுத்தும். இதனை கரு நெளிவு அல்லது `குயிக்கனிங் டெஸ்ட்’ என்றழைக்கப்படுகின்றது.
கருவின் அசைவை பிறப்புறுப்பினுள் கையை வைத்துப் பார்த்தல், வயிற்றின் மீது கையை வைத்துப் பார்த்தால் ஆகிய முறைகளிலும் கண்டறிய இயலும்.
கர்ப்ப காலத்தில் மசக்கை ஏன் வருகிறது தெரியுமா?
கருமுட்டையும், உயிரணுவும் சேர்ந்து கருவானவுடன், முட்டையை வெளியிட்ட கருவணுக்கூடு ஈஸ்டரோஜென் ஹார்மோனை அதிகமாகச் சுரக்கும் போது இத்தகைய குமட்டலும், வாந்தியும் தோன்றுகின்றன.
இதனால் ஏற்படும் சோர்வின் காரணமாக இரைப்பையின் இயக்கம் குறைந்து உணவுப் பொருட்கள் நெஞ்சில் நிற்கும் போது உணவுப் பொருட்களைச் சாப்பிட்டாமல் தவிர்க்கவேண்டியிருக்கும்.
அப்படி இருந்தும் மசக்கை இருக்கும்போது பெண்கள் மாங்காய் தின்ன ஆசைப்படுவதும், மண்ணையும், அடுப்புக்கரியையும், சாம்பலையும் சாப்பிடுவதற்கு தோன்றும்.
….
நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது ஏற்படும் அறிகுறி என்ன? Source link