- 2

 

நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela, 18 ஜுலை 1918 – 5 டிசம்பர் 2013), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார்.

நெல்சன் மண்டேலா – பொன்மொழிகள்

  • கல்வியே உலகை மாற்றக்கூடிய சக்தி மிக்க ஆயுதம்.
  • செய்து முடிக்கும் வரை செய்ய முடியாதது போலத்தான் இருக்கும்.
  • கோபம் விசம் குடிப்பதைப் போன்றது, ஆனால் நம்பிக்கை உங்கள் எதிரிகளையும் அழிக்கும் வல்லமை மிக்கது.
  • நல்ல தலையும் நல்ல இதயமும் எப்பொழுதும் வல்லமை மிக்க சேர்க்கையாகும்.
  • எமது நாட்டில் முதலில் சிறைச்சாலைக்குச் சென்ற பின்னரே சனாதிபதியாகின்றோம்.
  • இறந்தகாலத்தை மறந்துவிடுங்கள்.
  • மக்களை ஒருங்கிணைக்கும் சக்தி விளையாட்டுக்கு உண்டு. இளைஞர்கள் புரிந்துகொள்ளும் மொழியில் அது பேசுகிறது. இன வேறுபாடுகளை ஒழிப்பதில் அரசாங்கத்தை விடவும் மிகவும் சக்திமிக்கது.