பல மடங்கு குறைந்துவரும் மக்கள் நடமாட்டம்: கூகுள் அறிக்கை

சில்லறை விற்பனையகங்கள், பொழுதுபோக்குக்கான இடங்களில் மார்ச் மாத இறுதியில் மக்கள் நடமாட்டம் 77 சதவீதம் குறைந்துள்ளதாகவும், மளிகைப் பொருட்கள், மருந்தகங்களில் 65 சதவீதம் நடமாட்டம் குறைந்துள்ளதாகவும் கூகுளின் கோவிட்-19 மக்கள் நடமாட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.

கூகுள், தங்கள் பயனர்கள் இருக்கும் இடத்தை வைத்து, எந்த இடத்தில் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது அல்லது குறைந்திருக்கிறது என்ற தகவலை பொதுச் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குத் தந்து உதவுகிறது. இதை வைத்து கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அவர்கள் எடுக்கலாம்.

பூங்காக்களில் 57 சதவீதம், பேருந்து நிறுத்தம், ரயில் நிலையம் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துப் பகுதிகளில் 71 சதவீதம் நடமாட்டம் குறைந்துள்ளது. வேலை இடங்களில் 47 சதவீதம் குறைந்துள்ள அதே வேளையில் அனைவரும் வீட்டிலிருந்து வேலை செய்வதால் குடியிருப்புப் பகுதிகளில் 22 சதவீதம் நடமாட்டம் அதிகமாகியுள்ளது. இது ஜனவரி 3-ம் தேதியிலிருந்து பிப்ரவரி 6-ம் தேதி வரை இருக்கும் காலகட்டத்தோடு ஒப்பிடப்பட்ட விகிதங்களாகும்.

இந்தியா உட்பட 131 நாடுகளின் மக்கள் நடமாட்ட அறிக்கைகள் இப்போது கிடைக்கின்றன. கடைசி 48-72 மணிநேர விவரங்கள் வரை இதில் கிடைக்கும். தங்கள் கூகுள் கணக்கில் தாங்கள் சென்று வந்த இடங்களின் தகவல்களைச் சேமிக்கத் தேர்வு செய்த பயனர்களின் தரவுகளை வைத்தே இந்த அறிக்கை தயாரானதாக கூகுள் தெரிவித்துள்ளது.

மேலும், இது பரந்துபட்ட மக்கள்தொகையின் நடத்தையை அப்படியே பிரதிபலிக்காமல் போகலாம் என்றும் கூறியுள்ளது. இதில் எவ்வளவு சதவீதம் நடமாட்டம் கூடியுள்ளது அல்லது குறைந்துள்ளது என்பது மட்டுமே குறிப்பிடப்படுகிறதே தவிர சரியான எண்ணிக்கை என்ன என்ற விவரங்கள் இருக்காது.

பயனர்களின் அந்தரங்கத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, தனிப்பட்ட முறையில் ஒருவரை அடையாளப்படுத்தும் வகையில் எந்தத் தகவலும் இதில் கிடைக்காது.

Source

Tags:

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   Logo
   Register New Account
   Reset Password