பாகிஸ்தானின் கராச்சியில் பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்து விபத்து – 54 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் வர்த்தக தலைநகரம் என அழைக்கப்படும் கராச்சியில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விமானம் லாகூரிலிருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்தது. விமான நிலையத்திற்கு அருகில் உள்ள அதிக கூட்ட நெரிசல் கொண்ட குடியிருப்புப் பகுதியில் இந்த விமானம் விபத்துள்ளாகியுள்ளது. எனவே பல வீடுகளும் சேதமடைந்துள்ளன.

பாகிஸ்தான் சர்வதேச விமான சேவை நிறுவனத்தின் இந்த விமானம் கராச்சியில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது. தரையிறங்கும் சிறிது நேரத்திற்குள்ளாக விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்துள்ளது.

விபத்துக்குள்ளான விமானத்தில் 99 பயணிகளும், 8 விமானப் பணியாளர்களும் இருந்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் வீடியோக்களிலிருந்து, விபத்துக்குள்ளான பகுதியிலிருந்து கரும்புகை சூழ்ந்துள்ளது தெரிகிறது. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

Read Full News @ BBC Tamil

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

      உங்கள் கருத்தை இடுக...

      வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

      error: Content is protected !!
      Logo
      Register New Account
      Reset Password